இடிச்சபுளி செல்வராசு
Jump to navigation
Jump to search
இடிச்சபுளி செல்வராசு | |
---|---|
பிறப்பு | 1939 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 30 ஜனவரி 2012 இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1970–2010 |
இடிச்சபுளி செல்வராசு அல்லது இடிச்சபுளி செல்வராஜ் (இறப்பு: சனவரி 30, 2012, அகவை: 72) தமிழ்த் திரைப்பட உலகில் நகைச்சுவை நடிகராக நூற்றுக்கும் கூடுதலான திரைப்படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், கமலஹாசன், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சின்ன வாத்தியார் என்ற திரைப்படத்தில் கவுண்டமணி, செந்திலுடன் நடித்துள்ளார். மற்றொரு நகைச்சுவை நடிகரான பாண்டுவின் அண்ணன் ஆவார். எம்.ஜி.ஆரின் இதயக்கனி மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படங்களுக்கு உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார்.[1]
இவருக்கு செல்லம் என்ற மனைவியும் வசந்தி என்ற மகளும் உள்ளனர். 2012 சனவரி 30 அன்று காலமானார்.[2]
திரைப்படங்கள்
இது முழுமையான திரைப்படப் பட்டியல் அல்ல. இப்படியலை மேம்படுத்த நீங்கள் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்
1960களில்
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1965 | ஆயிரத்தில் ஒருவன் | ||
1968 | ஒளி விளக்கு |
1970களில்
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1972 | ராமன் தேடிய சீதை | Barber | |
1972 | இதய வீணை | நோயாளியின் சகோதரன் | |
1973 | பட்டிக்காட்டு பொன்னையா | சைக்கிள் காரன் | |
1974 | நேற்று இன்று நாளை | சேரி மனிதன் | |
1974 | சிரித்து வாழ வேண்டும் | அடியாள் | |
1975 | நினைத்ததை முடிப்பவன் | தபால்காரர் | |
1975 | பல்லாண்டு வாழ்க | வீரப்பன் | |
1976 | உழைக்கும் கரங்கள் | போலி சாமியார் | |
1977 | இன்றுபோல் என்றும் வாழ்க | ||
1979 | தர்மயுத்தம் |
1980களில்
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1980 | பூட்டாத பூட்டுகள் | ||
1980 | அன்னபறவை | ||
1980 | வசந்த அழைப்புகள் | இடிச்சபுளி | |
1981 | இரயில் பயணங்களில் | ||
1982 | தனிக்காட்டு ராஜா | ||
1982 | மூன்று முகம் | ||
1982 | இதுதாண்டா சட்டம் | ||
1983 | தாய் வீடு (திரைப்படம்) | ||
1983 | தங்கைக்கோர் கீதம் | ||
1983 | இமைகள் (திரைப்படம்) | ||
1984 | வெற்றி | ||
1984 | நான் பாடும் பாடல் | ||
1984 | கொம்பேறிமூக்கன் (திரைப்படம்) | ||
1984 | அன்பே ஓடிவா (திரைப்படம்) | ||
1985 | மண்ணுக்கேத்த பொண்ணு | ரயில்நிலைய அதிகாரி | |
1985 | தெய்வப்பிறவி | ||
1985 | நல்ல நாள் | ||
1985 | அலை ஓசை (திரைப்படம்) | ||
1985 | நவக்கிரக நாயகி | ||
1985 | உனக்காக ஒரு ரோஜா | ||
1985 | ஒரு மலரின் பயணம் | ||
1985 | நானே ராஜா நானே மந்திரி | ||
1985 | நீதியின் மறுபக்கம் | ||
1986 | கண்ணத் தொறக்கணும் சாமி | ||
1986 | எனக்கு நானே நீதிபதி | ||
1987 | அஞ்சாத சிங்கம் | ||
1987 | வேலைக்காரன் | ||
1987 | சங்கர் குரு | ||
1987 | எங்க சின்ன ராசா | தந்தை | |
1988 | தெற்கத்திக்கள்ளன் | ||
1988 | மனைவி ஒரு மந்திரி | ||
1988 | சத்யா | ||
1988 | தாய் மேல் ஆணை | ||
1988 | இது நம்ம ஆளு | ||
1988 | புதிய வானம் (திரைப்படம்) | ||
1989 | புதிய பாதை (1989 திரைப்படம்) | ||
1989 | என் அருமை மனைவி | ||
1989 | என்னெப் பெத்த ராசா | ||
1989 | ராஜாஜி ராஜா |
1990களில்
2000
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2000 | பட்ஜெட் பத்மநாபன் | ||
2001 | கிருஷ்ணா கிருஷ்ணா | ||
2001 | சொன்னால் தான் காதலா | ||
2001 | விஸ்வநாதன் ராமமூர்த்தி | ||
2002 | குருவம்மா | ||
2003 | திவான் | ||
2006 | வரலாறு (திரைப்படம்) | ||
2007 | என்னைப் பார் யோகம் வரும் | ||
2009 | தொட்டு செல்லும் தென்றலே | கிராமத்தான் |
பின்னணிக் குரல் கலைஞராக
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1991 | சாந்தி எனது சாந்தி | எதிர் நாயகனின் அடியாள் |
மேற்கோள்கள்
- ↑ "மூத்த நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்". Archived from the original on 2014-03-13. பார்க்கப்பட்ட நாள் 2012-01-31.
- ↑ Comedian Idichapuli Selvaraj Passes Away