சிவன் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிவன்
இயக்கம்வேலு பிரபாகரன்
தயாரிப்புஜே. பரமசிவம்
ஒய். ஜே. சத்தீஷ்
கதைவேலு பிரபாகரன்
இசைஆதித்தியன்
நடிப்பு
ஒளிப்பதிவுவேலு பிரபாகரன்
படத்தொகுப்புவி. சிதம்பரம
கலையகம்வி. ஜே. கம்பைன்ஸ்
வெளியீடுநவம்பர் 26, 1999 (1999-11-26)
ஓட்டம்100 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிவன் (Sivan) என்பது 1999ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அறிவியல் புனைகதை அதிரடி திரைப்படம் ஆகும். வேலு பிரபாகரன் இயக்கிய இப்படத்தில் அருண் பாண்டியன், நெப்போலியன், ராதிகா, சுவாதி, அகானா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜே. பரமசிவம் மற்றும் ஒய். ஜே. சதீஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு ஆதித்யானால் இசை அமைக்கபட்டது. இப்படம் 26, நவம்பர், 1999 அன்று வெளியிடப்பட்டது. இந்த படம் ரோபோகாப் படத்தால் பெரிதும் அகத் தூண்டல் பெற்ற படமாகும்.[1][2]

கதை

தில்லியை தளமாகக் கொண்ட ஒரு இந்திய இராணுவ வெடிமருந்து கிடங்கில் ஒரு பயங்கரவாத குழு நுழைந்தவுடன் படம் தொடங்குகிறது. அவர்கள் அனைத்து காவலர்களையும் கொன்று, கிடங்கில் அணு ஆயுதங்களைத் திருட முயற்சிக்கிறார்கள். ஆனால் பயங்கரவாதக் குழு தற்செயலாக ஒரு ஆயுதத்தை தவறி கீழே போடுவதால் ஒரு இரசாயன வெடிப்பு ஏற்படுத்துகிறது. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரிக்ககிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான செல்பாடுகளின் வழியாக, பயங்கரவாதக் குழு தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்று அரசாங்கம் சந்தேகிக்கிறது. சென்னையின் நேர்மையான காவல் துணை ஆய்வாளராக இருக்கும் அலெக்சிடம் ( அருண் பாண்டியன் ) பயங்கரவாத குழுவின் உள்கட்டமைப்பை அழிப்பதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. அலெக்ஸ் அழகான மனைவி அஹானாவை ( அகானா ) திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் இருப்பவர். மேலும் உடன் தனது பெண் குழந்தையுடனும், தாயுடனும் வசித்து வருகிறார்.

முருகன் ( நெப்போலியன் ) தனது தாய் மற்றும் சகோதரி மீனாட்சியுடன் வசிக்கும் ஒரு மகிழுந்து பழுதுபார்க்கும் பணியை செய்துவரும் ஒரு ஏழை. அவனது உறவுப் பெண்ணான செண்பகம் அவனைக் காதலிக்கிறாள். ஆனால் தனது சகோதரி படிப்பை முடித்து அவளுக்கு திருமணம் ஆகும் வரை திருமணம் செய்து கொள்வதில்லை என்ற முடிவில் முருகன் இருகிறான். ஒரு நாள், அலெக்ஸின் காவல் மகிழுந்து பழுதாகி நின்றுவிடுகிறது. அந்தப்பக்கம் செல்லும் முருகன், அலெக்சின் மகிழுந்தை சரிசெய்ய உதவுகிறான். அலெக்ஸ் முருகனின் பணிக்காக பணம் கொடுக்கும்போது, மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் கடினமாக உழைக்கும் காவல் துறையை மதிப்பதால் பணத்தை வாங்க மறுக்கிறான். ஆகவே, எதிர்காலத்தில் உதவி தேவைப்பட்டால் தன்னை தொடர்புகொள்ளுமாறு அலெக்ஸ் தனது விவர அட்டையைக் கொடுக்கிறார்.

ஒரு நாள், அலெக்ஸ் தனது காரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பயங்கரவாதியை கைது செய்கிறார். அன்று இரவு, பயங்கரவாத தலைவர் அவரை தொலைபேசியில் அச்சுறுத்துகிறார். ஆனால் அலெக்ஸ் வழக்கை கைவிட மறுத்து அவரை கைது செய்வதாக சபதம் செய்கிறார். விரைவில், அலெக்ஸ் சமூகத்தில் ஒரு செல்வந்தராகவும், பரோபகாரராகவும், மரியாதைக்குரிய மனிதராக உள்ள ஜுபிட்டரை (நாக கண்ணன்) பயங்கரவாதக் குழுவின் தலைவராக இருக்கலாம் என சந்தேகிக்கிறார். அலெக்ஸ் ஜுபிட்டரின் கிடங்கில் தனியாக பதுங்க முடிவு செய்கிறார். இதற்கிடையில், அலெக்ஸின் குடும்பம் ஜுபிட்டரின் அடியாட்களால் கொல்லப்படுகிறது. கிடங்கில், அலெக்ஸ் ஜுபிட்டராலும், அலெக்ஸின் நண்பராலும் பிடிக்கப்படுகிறார். பயங்கரவாதிகள் அலெக்ஸை சித்திரவதை செய்கிறார்கள், ஜுபிட்டர் அவரை கொடூரமாக சுட்டு தூக்கிலிட்டுக் கொல்கிறார்.

நேர்மையான காவல் துணை ஆய்வாளரும் அலெக்ஸின் முன்னாள் கூட்டாளியுமான சிவகாமி ( ராதிகா ) இந்த வழக்கின் பொறுப்பை ஏற்க முடிவு செய்கிறார். இதற்கிடையில், இறந்த விலங்குகளை உயிர்ப்பிப்பதில் வெற்றி பெற்ற அறிவியலாளர்கள், அலெக்ஸை உயிர்ப்பித்து எழுப்ப முடிவு செய்கிறார்கள். அவர்கள் அலெக்ஸின் உடலை கொண்டுவந்து, அவரது உடலின் பெரும்பகுதியை தன்னாள்வியல் மூலம் மாற்றி, அவரது மனித மூளையை அகற்றிவிட்டு அவரை சிவன் ஆகிறனர். இதற்கிடையில், முருகனின் தங்கை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படுகிறாள். அந்த செய்தியைக் கேட்டு முருகனின் தாயார் மாரடைப்பால் இறந்துவிடுகிறார். முருகன் கடைசியில் அந்தக் கும்பலைக் கண்டுபிடித்து தப்பித்த கும்பல் தலைவன் உதய் ( உதய் பிரகாஷ் ) தவிர கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கொன்றுவிடுகிறான். அலெக்ஸ் பணிபுரிந்த அதே நகரத்தில் பணியமர்த்தபட்ட சிவன், குற்றங்களை திறம்பட கட்டப்படுத்துகிறார். சிவகாமி அவருடன் பேசும்போது, சிவன் அவளை அடையாளம் கண்டுகொள்கிறான். ஆனால் அவனுக்குள் உணர்ச்சிகள் ஏதும் இல்லை. ஒரு நாள், முருகன் தனது சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை தண்டிக்க அலெக்ஸிடம் கெஞ்சுகிறான், ஆனால் அலெக்சால் அவனை அடையாளம் காண முடியவில்லை.

பின்னர், முருகன் ஜூபிடரின் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவனாக இருந்த உதயைக் கொன்றுவிடுகிறான். உதயின் நண்பர் பின்னர் அவனது காதலியைக் கொல்ல, பதிலுக்கு முருகன் அவனைக் கொல்கிறான். சிவன் கடைசியில் தனது உண்மையான அடையாளத்தை உணர்ந்து, பயங்கரவாதிகள் அனைவரையும் கொல்ல ஜுபிட்டரின் கிடங்கிற்குச் செல்கிறான். இந்த பணியில் சிவனுக்கு உதவ முருகன் முடிவு செய்கிறான், சிவன் இறுதியாக ஜூப்பிட்டரை தூக்கிலிடுகிறான்.

நடிகர்கள்

இசை

திரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் ஆதித்யன் அமைத்தார். 1999 இல் வெளியான இசைப்பதிவில், வாலி, வாசன் எழுதிய பாடல் வரிகளைக் கொண்ட ஐந்து பாடல்கள் இருந்தன.[3][4]

எண் பாடல் பாடகர் (கள்) காலம்
1 'எகிப்து நாட்டு கிளியோபாட்ரா' ஆதித்யன், சுவர்ணலதா 5:08
2 'ஓ என் பெண்மை' ஸ்வர்ணலதா 4:57
3 'பெசரட் பெசரட்' மால்குடி சுபா 4:48
4 'ருக்குத்தான் ருக்குத்தான்' மனோ, மால்குடி சுபா 3:51
5 'உதிரை கில்லி' கோபால் சர்மா, தேவி 4:30

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சிவன்_(திரைப்படம்)&oldid=33351" இருந்து மீள்விக்கப்பட்டது