தடயம்
தடயம் | |
---|---|
இயக்கம் | ரமேஷ் பாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | ஜோதி பிரசாத் |
கதை | ரமேஷ் பாலகிருஷ்ணன் லியாகத் அலி கான் (உரையாடல்) |
இசை | தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எஸ். வி. ராஜகீஷன் சாகர் |
படத்தொகுப்பு | பானர்ஜி ராம்பாபு |
கலையகம் | மாருதி மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | நவம்பர் 28, 1997 |
ஓட்டம் | 135 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தடயம் (Thadayam) என்பது ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கிய 1997 ஆம் ஆண்டய தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இப்படத்தில் விஜயசாந்தி, ராம்கி, இந்திரஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜோதி பிரசாத் சீனிவாசன் தயாரித்த இப்படத்திற்கு, தேவா இசை அமைத்துள்ளார். இப்படம் 28, நவம்பர், 1997 அன்று வெளியிடப்பட்டது.[1][2] இப்படம் தெலுங்கு திரைப்படமான கேங் லீடரைத் தழுவியது .
கதை
சந்திரசேகர் ( ராம்கி ), அல்லது சந்திரூ, ஒரு வேலையில்லா பட்டதாரி. இவர் தனது நண்பர் ஜீவாவுடன் வசிக்கிறார். இவர் தன் வாழ்கைக்கான சம்பாதிப்பதற்காக அடிக்கடி சிறைக்குச் செல்கிறார். அச்சமற்ற குற்றவியல் வழக்கறிஞரான ஜோதி ( விஜயசாந்தி ) அநீதிக்கு எதிராக போராடுகிறார். சந்திருவை தேவி ( இந்திரஜா ) காதலிக்கிறாள், ஜோதி சந்திருவை காதலிக்கிறாள்.
நடிகர்கள்
- விஜயசாந்தி வழக்கறிஞர் ஜோதியாக
- ராம்கி (நடிகர்) சந்துருவாக (சந்திரசேகர்)
- இந்திரஜா தேவியாக
- நாகேஷ் ஜோதியின் தாத்தாவாக
- ராதாரவி ஜோதியின் தந்தை தனசேகராக
- தேவன் கிளர்ச்சிக் குழுவின் தலைவர் பாண்டியனாக
- டெல்லி கணேஷ் தர்மராஜின் உதவியாளர் சோமுவாக
- இராமி ரெட்டி சிறை கண்காணிப்பாளர் பாண்டித்துரையாக
- வடிவேலு ஜோதியின் உதவியாளர் நீதிதேவன் எம்.ஏ வாக
- உதய் பிரகாஷ் பாண்டியனின் குழு உறுப்பினரான ஜீவாவாக
- வினோதினி ஜோதியாக
- வி. கோபாலகிருட்டிணன்
- அலெக்ஸ்
- மகாநதி சங்கர் பாண்டியனின் அடியாள்
- ஜாகுவார் தங்கம்
- செல்லதுரை வடிவேலுவாக
- விட்டல் ராவ்
- இடிச்சப்புளி செல்வராசு தலைமைக் காவலராக
இசை
படத்தறிக்ன இசையை இசையமைப்பாளர் தேவா மேற்கொண்டுள்ளார். 1997 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் இசைப்பதிவில், வாலி, பொன்னியன் செல்வன், வாசன் ஆகியோரால் எழுதப்பட்ட ஐந்து பாடல்கள் உள்ளன.[3][4]
எண் | பாடல் | பாடகர் (கள்) | பாடல் வரிகள் | காலம் |
---|---|---|---|---|
1 | 'காதலனே' | சுவர்ணலதா | வாசன் | 5:03 |
2 | 'லக் லக்' | வதிவேலு | வாலி | 5:09 |
3 | 'ஓ பூர்ணிமா' | பி. உன்னிகிருஷ்ணன், சித்ரா | 4:59 | |
4 | 'ஓ தேவதையே' | பி. உன்னி கிருஷ்ணன் | பொன்னியின் செல்வன் | 5:22 |
5 | 'வெள்ளி வெள்ளி' | மனோ, அம்ருதா | வாலி | 5:05 |
குறிப்புகள்
- ↑ "Thadayam (1997) Tamil Movie". spicyonion.com. http://spicyonion.com/movie/thadayam/.
- ↑ "filmography of thadayam". cinesouth.com இம் மூலத்தில் இருந்து 30 December 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101230031213/http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=thadayam.
- ↑ "Thadayam : Tamil Movie". hummaa.com. http://www.hummaa.com/music/album/thadayam/22134.
- ↑ "Thadayam — Raaga". raaga.com. http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0000918.