ஜாகுவார் தங்கம்
ஜாகுவார் தங்கம் | |
---|---|
ஜாகுவார் தங்கம் | |
பிறப்பு | தங்கபழம் 6 சூன் 1954 இந்தியா, தமிழ்நாடு, தூத்துக்குடி |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1978–present |
வாழ்க்கைத் துணை | சாந்தி ஜாகுவார் தங்கம் (1984–தற்போது வரை) |
பிள்ளைகள் | |
விருதுகள் | சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது |
தங்கபழம் (பிறப்பு: 6 சூன் 1954 ) ஜாகுவார் தங்கம் என்ற திரைப் பெயரைக் கொண்ட சண்டைப் பயிற்சியாளராவார். இவர் இந்தியத் திரைப்படத்துறையில் பெரும்பாலும் அனைத்து பிராந்திய மொழிகளிலும் பணிபுரிந்தவர் என்றாலும் முதன்மையாக தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தன் ஆறு வயதில் சிலம்பத்தை கற்கத் தொடங்கினார். இவருக்கு 1978 இன் நடுவில் மலையாள இயக்குனர் திரு. சந்திரகுமார் ஜாகுவார் தங்கம் என்று பெயரிட்டார். சந்திரகுமாரின் இந்தி நாடகமான மீனா பஜார் (1978) இல் சண்டைப் பயிற்சியாளராக அறிமுகமானதைத் தொடர்ந்து, இவரது சண்டைப் பயிற்சியாளர் பணியானது திரைப்படத் துறையில் துவங்கியது.
ஜாகுவார் தங்கத்தை துவக்கத்தில் கண்டறிந்தவர் எம்.ஜி.ஆர் ஆவார். தற்போது வரை ஜாகுவார் தங்கம் இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் 1000+ படங்களை முடித்துள்ளார். ஜாகுவார் தங்கம் ஐந்து தமிழ் திரைப்படங்களுக்கு சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் நான்கை வென்றுள்ளார் . சண்டைப் பயிற்சியைத் தாண்டி இவர் திரைப்பட நடிகர்,[1][2] தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சண்டைப் பயிற்சியாளர் பணி வாழ்க்கையைத் தவிர, சமூக செயல்பாடுகள் மற்றும் அரசியல் சூழலில் ஆர்வம் கொண்டவராக உள்ளார்.
இப்போது ஜாகுவார் தங்கம் தமிழ்நாட்டின், சென்னை, தியாகரய நகரில் அமைந்துள்ள தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் கில்ட் நிறுவனத்தின் செயலாளராக உள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
ஜாகுவார் தங்கம் தமிழ்நாட்டின், தூத்துக்குடி, கொம்மடிக்கோட்டையில் 6 சூன் 1954 இல் பிறந்தார் .[சான்று தேவை] இவரது தாயார் சின்னம்மாள் ஒரு இல்லத்தரசி, இவரது தந்தை எஸ். கே. பால்பாண்டியன் நாடார் ஒரு நில உரிமையாளர் மற்றும் விவசாயி ஆவார்.[சான்று தேவை] இவருக்கு தங்க பழம் நாடார் என்று பெயரிடப்பட்டது. இவர்தான் குடும்பத்தில் இளையவர். இவருக்கு நான்கு அண்ணன்கள் மற்றும் நான்கு அக்காக்கள்கள் உண்டு.[சான்று தேவை] இவர் தனது குழந்தை பருவத்தில், தனது தாயை இழந்தார்.[சான்று தேவை] அதன்பிறகு ஜாகுவார் தங்கத்தின் வளர்ச்சியில் அவரது அக்காள் சக்திக் கனி மற்றும் அவரது கணவர் ஜெயராஜ் நாடார் கவனம் செலுத்தினார்கள்.[சான்று தேவை]
ஆரம்ப கால வாழ்க்கையில்
ஜாகுவார் தங்கம் சிலம்பத்தை தன் ஆறு வயதில் கற்கத் தொடங்கினார். அன்றிலிருந்து இப்போது வரை 27 தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்ற ஒரே நபர் இவர் தான்.[3]
திருச்சியில் உள்ள வெல்ல மண்டியில் தனது பத்தொன்பது வயதில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான ம. கோ. இராமச்சந்திரன் முன்னிலையில் தனக்கு சிலம்பத்தில் உள்ள திறமையைக் காட்டினார். இதன்பிறகு இவரின் சண்டைப் பயிற்சிக்கலையை மேம்படுத்த சென்னைக்கு அழைத்துச் சென்றார். ஜாகுவார் தங்கம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எம்ஜியாருடன் சென்று தன்னை வடிவமைத்துக் கொண்டார். இவர் தச்சிணாமூர்த்தி ஆச்சாரியரிடமிருந்து சண்டைப் பயிற்சிக் கலையை கற்கத் தொடங்கினார், பின்னர் டோனி பொன்னையா என்பவரிடமிருந்து சீன பாணியிலான சிட்டோரியன் கலையில் தேர்ச்சி பெற்றார். ஜாகுவார் தங்கம் தமிழ்நாட்டின் மேற்கு பிராந்திய மலைகளில் மட்டுமே வசித்து வந்த சில சித்தர்களிடமிருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுக்கொண்டார்.[சான்று தேவை]
திரைப்பட வாழ்க்கை
ஜாகுவார் தங்கம் 1978 ஆம் ஆண்டில் இந்தி திரைப்படமான மீனா பஜார் படத்தில் சண்டைப் பயிற்சியாளராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து இவர் இந்தியில் 87 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுளார். அங்கு இவர் மூத்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தியுடன் 17 திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
பிரபல தமிழ் நடிகரான விசயகாந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெற்றி என்ற திரைப்படத்தில் சண்டைக் கலைஞராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழ் திரைப்படமான வைகாசி பொறந்தாச்சு படத்தில் சண்டைப் பயிற்சியாளராக தமிழ் திரைப்படத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இரசினிகாந்து ஒரே ஹாலிவுட் திரைப்படமான பிளட் ஸ்டோன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் பணியாற்றினார். மூத்த நடிகர் கமல்ஹாசனுடன் மகராசன் படத்தில் பணியாற்றினார்.
தற்போது வரை ஜாகுவார் தங்கம் இந்தியத் திரைப்படத்துறையில் கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் 1000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
பின்வரும் சண்டை பயிற்சியாளர்கள் ஜாகுவார் தங்கத்தின் மாணவர்கள்: பீட்டர் ஹீன், அனல் அரசு, கே. கணேஷ் குமார், ஸ்டண்ட் சில்வா, எஸ். ஆர். முருகன், நாக் அவுட் நந்தா ஆகியோராவர்.
தனிப்பட்ட வாழ்க்கை
ஜாகுவார் தங்கம் சாந்தி என்பவரை மணந்தார். சாந்தியின் பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டத்தில், புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள சக்கம்மாள்புரம் என்றாலும் சென்னையில் 24 செப்டம்பர் 1963 இல் பிறந்தார். அவருக்கு எம். ஜி. ஆரால் பெயர் சூட்டப்பட்டது.[4] இவர்களின் திருமணம் 1984 செப்டம்பர் 9 அன்று சென்னையின் தியாகராய நகரில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த தம்பதிக்கு விஜய சிரஞ்சீவி மற்றும் ஜெய் ஜே. ஜாகுவார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவரும் சண்டைப் பயிற்சியாளர்களாகவும், நடிகர்களாகவும் தமிழ் சினிமாவில் இயங்கிவருகின்றனர். விஜய் சிரஞ்சீவி தனது தந்தை இயக்கிய சூர்யா (2008) படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.[5]
திரைப்படவியல்
- படங்கள்
- 1990 வைகாசி பொறந்தாச்சு
- 1991 நான் புடிச்ச மாப்பிள்ளை
- 1991 நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
- 1991 என்னருகில் நீ இருந்தால்
- 1991 வைதேகி வந்தாச்சு
- 1991 பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்
- 1992 தங்க மனசுக்காரன்
- 1992 பொண்டாட்டி ராஜ்ஜியம்
- 1992 திலகம்
- 1992 ஒண்ணா இருக்க கத்துக்கணும்
- 1993 மணிக்குயில்
- 1993 மகராசன்
- 1993 அம்மா பொண்ணு
- 1993 செண்பகம்
- 1993 நல்லதே நடக்கும்
- 1993 பேண்டு மாஸ்டர்
- 1993 பாஸ் மார்க்
- 1993 அக்கரைச் சீமையிலே
- 1993 பார்வதி என்னை பாரடி
- 1993 புருஷ லட்சணம்
- 1993 கிழக்கே வரும் பாட்டு
- 1994 வரவு எட்டணா செலவு பத்தணா
- 1994 வீட்டைப்பாரு நாட்டைப்பாரு
- 1994 செவத்த பொண்ணு
- 1994 பாண்டியனின் ராஜ்யத்தில்
- 1994 தாமரை
- 1994 தாய் மனசு
- 1995 வள்ளி வரப் போறா
- 1995 தேடிவந்த ராசா
- 1995 விட்னஸ்
- 1995 தாய்க்குலமே தாய்க்குலமே
- 1995 முறை மாப்பிள்ளை
- 1996 அம்மன் கோவில் வாசலிலே
- 1996 காலம் மாறிப்போச்சு
- 1996 அந்த நாள்
- 1996 டேக் இட் ஈசி ஊர்வசி
- 1996 கோபாலா கோபாலா
- 1996 பூமணி
- 1996 புருஷன் பொண்டாட்டி
- 1997 பொங்கலோ பொங்கல்
- 1997 பகைவன்
- 1997 பெரிய மனுஷன்
- 1997 தடயம்
- 1997 ரோஜா மலரே
- 1997 தம்பிதுரை
- 1997 புதல்வன்
- 1998 கிழக்கும் மேற்கும்
- 1998 வீரத்தாலாட்டு
- 1998 அவள் வருவாளா
- 1998 பிரியமுடன்
- 1998 எல்லாமே என் பொண்டாட்டிதான்
- 1998 நிலாவே வா
- 1999 என்றென்றும் காதல்
- 1999 அண்ணன்
- 1999 பூமகள் ஊர்வலம்
- 1999 சின்ன ராஜா
- 1999 பூ மனமே வா
- 1999 விரலுக்கேத்த வீக்கம்
- 1999 மனைவிக்கு மரியாதை (திரைப்படம்)
- 1999 மறவாதே கண்மணியே
- 2000 மகளிர்க்காக
- 2000 கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
- 2001 சீறிவரும் காளை
- 2001 தோஸ்த்
- 2001 விஸ்வநாதன் ராமமூர்த்தி
- 2001 வீட்டோட மாப்பிள்ளை
- 2001 கபடி கபடி
- 2001 ஷாஜகான்
- 2001 வடுகப்பட்டி மாப்பிள்ளை
- 2002 உன்னை நினைத்து
- 2002 தென்காசிப்பட்டிணம்
- 2002 நம்ம வீட்டு கல்யாணம்
- 2002 பகவதி (திரைப்படம்)
- 2002 முத்தம் (திரைப்படம்)
- 2003 அன்னை காளிகாம்பாள் (திரைப்படம்)
- 2003 ஸ்டூடண்ட் நம்பர் 1
- 2003 அன்புத் தொல்லை
- 2003 தம்
- 2003 வாணி மகால்
- 2003 திருடா திருடி
- 2003 அதாண்டா இதாண்டா
- 2003 ஆளுக்கொரு ஆசை (2003 திரைப்படம்)
- 2004 அடிதடி (திரைப்படம்)
- 2004 ஜோர் (திரைப்படம்)
- 2004 அழகேசன் (திரைப்படம்)
- 2004 அது
- 2004 மகா நடிகன்
- 2004 ராமகிருஷ்ணா
- 2005 சுக்ரன்
- 2005 கண்ணம்மா
- 2005 குருதேவா
- 2005 கிரிவலம்
- 2005 கற்க கசடற (திரைப்படம்)
- 2005 காற்றுள்ளவரை
- 2006 சென்னை காதல்
- 2006 வெற்றிவேல் சக்திவேல்
- 2007 திருமகன்
- 2007 தண்டாயுதபாணி
- 2007 வியாபாரி (திரைப்படம்)
- 2007 வீரமும் ஈரமும்
- 2007 மணிகண்டா
- 2008 அய்யாவழி
- 2008 சூர்யா
- 2010 பொள்ளாச்சி மாப்பிள்ளை
- 2010 கௌரவர்கள் (திரைப்படம்)
- 2012 இதயம் திரையரங்கம்
- 2012 உயிர் எழுத்து
- 2014 சினேகாவின் காதலர்கள்
- 2014 எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்
- தொலைக்காட்சி
- 2000 கிருஷ்ணதாசி
- 2001 ஜல கிரீடைய்
- 2014 ரோமாபுரி பாண்டியன்
இயக்குனர்
- 2008 சூர்யா
நடிகர்
- 1990 வைகாசி பொறந்தாச்சு
- 1996 கோபாலா கோபாலா
- 1997 தடயம்
- 1998 பிரியமுடன்
- 1998 நிலாவே வா
- 2004 ராமகிருஷ்ணா
- 2005 வெற்றிவேல் சக்திவேல்
- 2006 சென்னை காதல்
- 2015 எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல்
- 2017 ஜூலியும் 4 பேரும்
விருதுகள்
- வென்றது
- 1996 சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது - பூமணி
- 1998 சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது - பிரியமுடன்
- 2002 சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது - பகவதி
குறிப்புகள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-10. பார்க்கப்பட்ட நாள் 2021-01-15.
- ↑ "Jaguar as Actor". Archived from the original on 2018-07-10. பார்க்கப்பட்ட நாள் 2021-01-15.
- ↑ Puthuyugam, Manam Thirumbuthe. "Jaguar Thangam was Interviewed in Manam Thirumbuthe by Puthu Yugam TV". youtube.com. பார்க்கப்பட்ட நாள் 7 September 2017.
- ↑ http://www.hotstar.com/tv/namma-veetu-kalyanam/1484/jaguar-thangam/1000025483
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/surya.html