காற்றுள்ளவரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
காற்றுள்ளவரை
இயக்கம்இராதா பாரதி
தயாரிப்புஎஸ். சுரேஷ்
கதைராதா பாரதி
இசைபரணி
நடிப்புஜெய் ஆகாஷ்
பிரணதி
ஒளிப்பதிவுகிச்சாஸ்
படத்தொகுப்புலான்சி & என்பிஎஸ்பி; - மோகன்
கலையகம்சீயாசு பிலிம்ஸ்
வெளியீடுசூலை 1, 2005 (2005-07-01)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காற்றுள்ளவரை (Kaatrullavarai) என்பது 2005 ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். இராதா பாரதி இயக்கிய இப்படத்தில் ஜெய் ஆகாஷ் மற்றும் பிரணதி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க, வடிவேலு, புதுமுகம் எஸ். சுரேஷ், புதுமுகம் மதுப்பிரியா, ராஜேஷ், ராஜீவ், கசான் கான், ஆர். சுந்தர்ராஜன் ஆகியோர் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ். சுரேஷ் தயாரித்த இப்படத்திற்கு பரணி இசை அமைத்துள்ளார். 2005 சூலை முதல் நாளன்று வெளியானது.[1]

கதை

நர்மதா ( பிரணதி ) தமிழ் திரைப்பட முன்னணி நடிகைகளில் ஒருவர். பாலா ( ஜெய் ஆகாஷ் ) அவரது மகிழுந்து ஓட்டுநர் திக்குவாய் கொண்ட பாலா. நர்மதாவை ஆபத்திலிருந்து பாதுகாக்க தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறான். ஆனால் நர்மதா அவனைப் பார்ப்பதையே வெறுக்கிறாள். அவனைத் தேவைப்படும்போதெல்லாம் திட்டுகிறாள். இதற்கிடையில், நர்மதாவின் தீவிர ரசிகரான "பர்மா" பாலா (எஸ். சுரேஷ்) என்ற இளைஞன் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அதன்பிறகு, "பர்மா" பாலாவும், நர்மதாவின் பணிப்பெண் கௌசியும் (மதுப்ரியா) ஒருவருக்கொருவர் காதலிக்கிறார்கள். தவறான ஒரு புரிதலினால், நர்மதா பாலாவை தனது வீட்டை விட்டு வெளியேறும்படி கட்டளையிடுகிறாள். அவளது தந்தை ராம்குமார் ( ராஜேஷ் ) இத்தனை அவமானங்களையும் மீறி பாலா ஏன் அவர்களுக்காக வேலை செய்தான் என்று அவளுக்கு விளக்குகிறார்.

பாலா கிராமத் தலைவரின் மகனாவார். அவன் பின்னணி பாடகராகவேண்டும் என்ற கனவு கண்டான். இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு, தனது கிராமத்தை விட்டு சென்னைக்கு வந்தான் அவனுக்கு பாடவதற்கான வாய்ப்பை யாரும் அளிக்கவில்லை. பாடகனாக மாற அவன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. இதற்கிடையில், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நர்மதாவுக்கு ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் தயக்கம் காட்டிய அவள், தனது தாயின் இதய அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதால் அதை ஏற்றுக்கொள்கிறாள். தனது முதல் படத்தின் படப்பிடிப்பின் போது, நர்மதாவும் அவளது தந்தை ராம்குமாரும் பாலாவை சந்திக்கின்றனர். அவர்கள் அவனிடம் பரிதாபப்பட்டு அவனுக்கு உதவ முடிவு செய்கின்றனர். பாலா நர்மதாவின் வீட்டில் தங்குகிறான். நர்மதாவின் தாயார் இறப்பதற்கு முன்பு, பாலா அவரிடம் நர்மதாவை வெற்றிகரமான ஒரு நடிகையாக்ககுவதாக உறுதியளித்தான். பாலாவும் நர்மதாவும் இறுதியில் ஒருவரையோருவர் காதலிக்கின்றனர். பின்னர், நர்மதாவின் முதல் படம் சோதனைத் திரையிடலின் போது எதிர்மறையான விமர்சனங்களைப் பெறுகிறது. எனவே படத்தின் தயாரிப்பாளர் படம் வெளியாவதற்கு முன்பே நர்மதாவை கொலை செய்ய திட்டமிடுகிறார். இதனால் படத்திற்கு விளம்பரம் உருவாகும் இதனால் படம் பெரிய வெற்றியை ஈட்டும் என அவர் எண்ணுகிறார். அவரது உரையாடலைக் கேட்ட பாலா அவளை குண்டர்களிடமிருந்து காப்பாற்ற முயல்கிறான். சண்டையின்போது, நர்மதாவும் பாலாவும் தலையில் காயம் அடைகின்றனர். ஆனால் அவர்கள் தப்பிக்கின்றனர். அவர்கள் ராம்குமாரின் ஒப்புதலோடு திருமணம் செய்து கொள்கின்றனர். பாலாவின் தந்தை ( ராஜீவ் ) அவர்களின் திருமணத்தைப் பற்றி அறிந்ததும், அவர் பாலாவுக்கு தனது சொத்துக்களில் ஒன்றைக் கொடுத்து, தனது மகனுடனாக உறவை முறித்துக்கொள்கிறார். பின்னர் மருத்துவமனையில், நர்மதாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மறதி நோய் இருப்பது கண்டறியப்படுகிறது (கடந்த 2 ஆண்டுகளாக அவளுக்கு எதுவும் நினைவில் இல்லை) அதேசமயம் பாலாவுக்கு திக்குவாய் உருவாகிறது. நர்மதாவின் முதல் படத்தை வெளியிடுவதற்காக, பாலா தனது சொத்தை விற்று படத்தின் தயாரிப்பாளருக்கு பணம் கொடுக்கிறான். படம் வெளியானதும், நர்மதா தனது நடிப்புக்காக விமர்சகர்களிடமிருந்தும், பார்வையாளர்களிடமிருந்தும் பாராட்டுகளைப் பெறுகிறாள். ஆனாலும் படம் தோல்வியடைகிறது. இதனால் பாலா தனது பணத்தை இழக்கிறான். இருப்பினும், படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்ததால் நர்மதா தொழிலில் முன்னேற்றம் காண்கிறாள். தனது மகளின் நடிப்பு வாழ்க்கையையும், தாயின் கனவையும் காப்பாற்ற, எந்த நேரத்திலும் அவர்களுக்கு நடந்த திருமணத்தைப் பற்றி சொல்ல வேண்டாம் என்று பாலாவிடம் ராம்குமார் கெஞ்சுகிறார். மேலும் பாலா அவளின் மகிழுந்து ஒட்டுநராக வேலை செய்யத் தொடங்குகிறான்.

கடைசியில் பாலாவின் தியாகங்களைப் பற்றி அறிந்த நர்மதா, தனது நடிப்புத் தொழில் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரவும், கணவர் பாலாவுடன் சேர்ந்து வாழவும் முடிவு செய்கிறாள். பாலாவும் நர்மதாவும் மகிழ்ச்சியான வாழ்வை மேற்கொள்கிறார்கள்.

நடிகர்கள்

தயாரிப்பு

வைகாசி பொறந்தாச்சு (1990) மற்றும் கிழக்கே வரும் பாட்டு (1993) போன்ற படங்களை இயக்கிய ராதா பாரதி ஒரு இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீயாசு பிலிம்ஸ் பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட படமான காற்றுள்ளவரை படத்தின் மூலமாக மூலமாக தமிழ் திரைப்படத்துறைக்கு திரும்ப வந்தார். இந்த படத்தில் நாயகனாக நடிக்க ஜெய் ஆகாஷ் தேர்வு செய்யப்பட்டார். குருதேவா (2005) படத்தில் நடித்த நடிகை பிரணதி கதாநாயகி பாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார்.[2] பிற வேடங்களில் இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ். சுரேஷ் ஒரு முக்கிய வேடத்திலும், அறிமுக நடிகை மதுப்ரியா, வடிவேலு ஆகியோர் பிற பாத்திரங்களிலும் நடித்தனர். கிச்சாஸ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத்திற்கான இசையை பரணி மேற்கொண்டார்.[3]

திரைப்பட பின்னணி இசை மற்றும் பாடல் இசையை இசையமைப்பாளர் பரணி அமைத்தார். இப்படத்தின் இசைப்பதிவில் எட்டு பாடல்கள் இடம்பெற்றன.[4][5]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஆண்வாசமும் பெண்வாசமும்"  கார்த்திக், சித்ரா 4:44
2. "மழையில் நனைந்த (ஆண் 1)"  கார்த்திக் 4:42
3. "நான் உன்னை நீ என்னை"  கிருஷ்ணராஜ், பி. சுமி 4:00
4. "செவ்வந்தியே செவ்வந்தியே"  ஹரிஷ் ராகவேந்திரா 5:08
5. "மழையில் நணைந்த (பெண்)"  சித்ரா 4:43
6. "உன்னை நம்பித்தான்"  ஹரிஷ் ராகவேந்திரா, பி. சுமி 4:41
7. "மழையில் நனைந்த (ஆண் 2)"  பி. ஜெயச்சந்திரன் 4:43
8. "ரகள கட்டுங்கடா"  திப்பு 4:08
மொத்த நீளம்:
36:49

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=காற்றுள்ளவரை&oldid=32274" இருந்து மீள்விக்கப்பட்டது