குருதேவா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குருதேவா
இயக்கம்ஜாஃபர்
தயாரிப்புகே. கலியமூர்த்தி
இசைசபேஷ் முரளி
நடிப்பு
கலையகம்ஸ்ரீசெல்வ முத்துகுமர மூவிஸ்
வெளியீடு1 ஏப்ரல் 2005 (2005-04-01)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குருதேவா (Gurudeva) என்பது 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் காதல் நாடக திரைப்படம் ஆகும். ஜாஃபர் இயக்கிய இப்படத்திற்கு, சபேஷ் முரளி இசை அமைக்க, கே. கலியமூர்த்தி தயாரித்தார். இப்படத்தில் ஜெய் ஆகாஷ் உடன் பிரணதி, நாசர், இளவரசு, ரியாஸ் கான், கலைப்புலி எஸ். தாணு, முத்துக்காளை ஆகியோர் நடித்துள்ளனர்.[1] இந்த படம் ஸ்ரீசெல்வ முத்துகுமர மூவிசின் பதாகையின் கீழ் 2005 ஏப்ரல் முதல் நாளன்று வெளியிடப்பட்டது.[2]

கதை

இப்படமானது ஒரு தெரு ரவுடிக்கு பணக்காரரின் வாரிசு மீதான காதல் பற்றியது. குரு ( ஜெய் ஆகாஷ் ) ஒரு தெரு ரவுடி, குருவின் ஆலோசகராக இருக்கும் ஊனமுற்றவரான மாரி ( நாசர் ) என்பவருக்குச் சொந்தமான ஒரு வாகன பழுது பார்க்கும் கடையில் எப்போதும் இருப்பவர். அவர்கள் காதல் என்ன ஆனது என்பது கதையின் முக்கியமான அம்சமாகும்.

நடிகர்கள்

வெளியீடு

படம் பிப்ரவரி 14 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது என்றாலும் வெளியீடு தாமதமானது.[3] குறைந்த செலவில் தயாரிக்கப்பட படங்களான கிரிவலம் மற்றும் தகதிமிதா ஆகியவற்றுடன் இப்படம் வெளியானது. வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெறவில்லை.[4]

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=குருதேவா&oldid=32460" இருந்து மீள்விக்கப்பட்டது