கிரிவலம் (திரைப்படம்)
கிரிவலம் | |
---|---|
இயக்கம் | சிவ்ராஜ் |
தயாரிப்பு | ஏ. அகமது |
கதை | சிவ்ராஜ் |
இசை | தேவா |
நடிப்பு | சாம் ரிச்சர்ட் ரோசினி |
ஒளிப்பதிவு | ஆர். செல்வா |
படத்தொகுப்பு | எல். கேசவன் |
கலையகம் | வெரைட்டி பிரேம்ஸ் |
வெளியீடு | 1 ஏப்ரல் 2005 |
ஓட்டம் | 136 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கிரிவலம் (Girivalam) என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் திகில், நாடகத் திரைப்படம் ஆகும். சிவ்ராஜ் இயக்கிய இப்படத்தில் சாம், ரிச்சர்ட், ரோஷினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1]
கதை
அர்ஜுன் ( ஷாம் ) ஒரு நடனக் குழுவின் தலைமைப் பொறுப்பில் உள்ளான். குழுவில் உள்ள நடனக் கலைஞர்களில் ஒருவரான பிரியா ( ரோஷினி ) அவரை காதலிக்கிறாள். இந்த நடனப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிபெற விரும்புகிறது குழு அவர்களின் நோக்கம் என்ன ஆனது என்பதே கதை.
நடிகர்கள்
- சாம் அர்ஜுன்
- ரிச்சர்ட் கிரிபிரசாத்
- ரோசினி பிரியாவாக
- அனாமிகா சுவேதாவாக
- சார்லி பாவாடையாக
- ரமேஷ் கண்ணா கௌரிசங்கராக
- ஒபெத் மைக்கேல்
- கிருஷ்ணா
- இன்னாயத்
- யுவன் சங்கர்
- டெலிபோன் சுப்பிரமணி
- இராஜேஷ்
- ஜப்பான் குமார்
தயாரிப்பு
இந்த படத்தை சிவ்ராஜ் இயக்கியுள்ளார், அவர் இதற்கு முன்பு அடிதடி (2004) என்ற படத்தையும் இரண்டாவதாக காதல் கிறுக்கன் (2003) படத்தையும் இயக்கினார்.[2] இது ஹம்ராஸ் (2002) என்ற இந்தி திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். இப்படத்தில் சாம் எதிர்மறை பாத்திரத்தில் நடித்தார். இயற்கை (2003) படத்தில் அவர் நடிப்பதற்கு முன் இந்த படத்தில் சாம் நடித்தார்.[3]
இசை
இப்படத்திற்கு தேவா இசையமைக்க, பாடல் வரிகளை பிறைசூடன், சினேகன், பா. விஜய் ஆகியோர் எழுதினர்.[4]
எண். | பாடல் | பாடகர்கள் | நீளம் (மீ: கள்) |
---|---|---|---|
1 | "அடியே ஆண்டாள் அம்மா" | பிரவீன் பாபு | 04:18 |
2 | "மாயவரத்துக்காரா" | பிரவீன் பாபு | 04:46 |
3 | "நீ யாரோ நீ யாரோ" | பிரவீன் பாபு | 05:07 |
4 | "சொல்வாயா சொல்வாயா" | பிரவீன் பாபு | 05:11 |
வெளியீடு
இப்படமானது குறைந்த செலவில் தயாரிக்கபட்ட படங்களான குருதேவா மற்றும் தகதிமிதா ஆகியவற்றுடன் வெளியான இப்படம் வணிகரீதியாக நல்ல வரவேற்பைப் பெறவில்லை.[5]
குறிப்புகள்
- ↑ "Girivalam Tamil Movie Review | Critics Review | CineBee App". CineBee. Archived from the original on 2018-08-26. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
- ↑ "Dreams in the making". The Hindu. 24 September 2004.
- ↑ "Honour well deserved". The Hindu. 27 August 2004.
- ↑ "Girivalam Songs Download, Girivalam Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs". www.raaga.com.
- ↑ "Chennai weekend box-office (Apr 01-03)". Sify. Archived from the original on 2021-01-28. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.