தேவாரத் திருத்தலங்கள்

தேவாரத் திருத்தலங்கள் என்பவை சைவக்குரவர்களான சம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும் அப்பர் ஆகிய இருவரும் ஏழாம் நூற்றாண்டிலும் சுந்தரர் எட்டாம் நூற்றாண்டிலும் தாம் இயற்றிய தேவாரப் பாடல்களில் பாடிய 276 சிவத்தலங்கள் [1] ஆகும். இத்தலங்களில் குடிகொண்டுள்ள சிவனைப் பற்றி பத்து பாடல்களைக் கொண்ட பதிகங்களை ஒருவரோ, இருவரோ, மூவரோ பாடியுள்ளனர்.

தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாடு (32), நடு நாடு (22), சோழ நாட்டு காவிரியாற்றின் வட கரை (63), சோழ நாட்டு காவிரியாற்றின் தென் கரை(128), பாண்டிய நாடு (14),கொங்கு நாடு (7), மலை நாடு (1), துளுவ நாடு (1), வட நாடு (5), ஈழ நாடு (2), புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி தென்கரைத் தலமான திருவிடைவாய் மற்றும் திருக்கிளியன்னவூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்ற 276 சிவன் கோயில்கள் அடங்கும். [2] [3]

தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கம் இத்திருத்தலங்களை அவை அமைந்துள்ள நாடுகளை அடிப்படையாகக்கொண்டு ஓர் எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் பட்டியலிட்டு உள்ளார்.[4][5]

இவற்றுள் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டவை 219. (+பிற்சேர்க்கை 1). இவை முதலாம், இரண்டாம், மூன்றாம் திருமுறைகளில் இடம்பெற்று உள்ளன. அப்பர் என்னும் திருநாவுக்கரசரால் பாடப்பட்டவை 125. இவை நான்காம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளில் இடம்பெற்று உள்ளன. சுந்தரமூர்த்தியால் பாடப்பட்டவை 84. இவை ஏழாம் திருமுறையில் இடம்பெற்று உள்ளன.

ஏழு திருமுறைகளிலுமுள்ள ஊர்களின் பெயர்களில் உள்ள திரு என்னும் அடைமொழி விலக்கி வைக்கப்பட்டுத் தொகுக்கப்பட்ட பின் ஊர்ப்பெயர்கள் அகர-வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

அகர வரிசைப்படி தலங்கள்
ஊர்கள்

(சுருக்கக் குறிப்பு : அ = அப்பர் எனப்படும் திருநாவுக்கரசர், ச = திருஞானசம்பந்தர், சு = சுந்தரமூர்த்தி)

  1. அகத்தியான்பள்ளி
  2. அச்சிறுபாக்கம்
  3. அஞ்சைக்களம் சு
  4. அண்ணாமலை அ , ச
  5. அதிகை வீரட்டானம் அ , ச, சு
  6. அம்பர் அ, ச
  7. அம்பர் பெருந்திருக்கோயில் ச.
  8. அம்பர் மாகாளம்
  9. அரசிலி ச தொண்டைநாடு
  10. அரிசிற்கரைப்புத்தூர் அ , ச, சு.
  11. அவிநாசி சு
  12. அழுந்தூர்தேரழுந்தூர் ச சங்ககாலத்தில் அழுந்தூர்
  13. அன்பிலாந்துறை (அன்பில்) ச, அ
  14. அன்னியூர் அ, ச. சங்ககால அரசன் அன்னி மிஞிலி
  15. அனேகதங்காவதம்

  1. ஆக்கூர்த் தான்தோன்றிமாடம் அ , ச
  2. ஆடானை
  3. ஆப்பனூர் ச (இது மதுரையின் ஒரு பகுதியான செல்லூர்)
  4. ஆப்பாடி அ (திருப்பனந்தாள் அருகில் மண்ணி ஆற்றங்கரையில் உள்ளது)
  5. ஆமாத்தூர் அ, ச, சு
  6. ஆரூர் அ, ச, சு,
  7. ஆரூர் அரநெறி
  8. ஆரூர் பரவையுண் மண்டளி சு
  9. ஆலங்காடு அ, ச, சு
  10. ஆலம்பொழில்
  11. ஆலவாய் அ, ச,
  12. ஆவடுதுறை அ, ச, சு,
  13. ஆவூர்ப் பசுபதீச்சரம் ச (சங்ககால ஆவூர்கிழார்)
  14. ஆனைக்கா அ, ச, சு

  1. இடும்பாவனம்
  2. இடைச்சுரம் ச தொ
  3. இடைமருது அ, ச, தெ, சு
  4. இடையாறு சு
  5. இந்திரநீலப் பருப்பதம்
  6. இராமனதீச்சரம் ச (திருக்கண்ணபுரம்)
  7. இராமேச்சரம் அ, ச
  8. இரும்பூளை ச (ஆலங்குடி வங்கனார் சங்ககாலப்புலவர்)
  9. இரும்பை மாகாளம்
  10. இளநகர்

  1. ஈங்கோய்மலை

  1. உறையூர்

  1. ஊறல் ச (தக்கோலம்)

  1. எதிர்கொள்பாடி சு
  2. எறும்பியூர்

  1. ஏடகம் (வைகை வடகரை) ச
  2. ஏமம்

  1. ஐயாறு அ, ச, சு

  1. ஒற்றியூர் அ, ச, சு (சென்னை)

  1. ஓணக்காந்தன்தளி சு
  2. ஓத்தூர் ச தொ ஆண்பனையைப் பெண்பனை ஆக்கியது (திருவந்திபுரம்)

  1. கச்சி அனேகதங்காவதம் சு (கச்சி என்பது பழம்பெயர். காஞ்சி என்பது பிற்காலப் பெயர்)
  2. கச்சி ஏகம்பம் அ, சு, ச
  3. கச்சி மேற்றளி அ, சு,
  4. கச்சிநெறிக் காரைக்காடு
  5. கச்சூர் ஆலக்கோயில் சு
  6. கஞ்சனூர்
  7. கடம்பந்துறை
  8. கடம்பூர் அ, ச,
  9. கடவூர் மயானம் சு, அ, ச
  10. கடவூர் வீரட்டம் அ, ச, சு (திருக்கடையூர்)
  11. கடிக்குளம் (கற்பகனார் குளம்) ச
  12. கடுவாய்க்கரைப்புத்தூர்
  13. கடைமுடி
  14. கண்டியூர் அ,
  15. கண்டியூர் வீரட்டம்
  16. கண்ணார்கோயில்
  17. கயிலாயம் அ, ச
  18. கரவீரம்
  19. கருகாவூர் அ, ச
  20. கருங்குடி ச (மருதாசலநல்லூர்)
  21. கருப்பறியலூர் ச, சு (தலைஞாயிறு)
  22. கருவிலிக்கொட்டிடை
  23. கருவூர் ஆனிலை
  24. கலயநல்லூர் சு (சாக்கோட்டை)
  25. கலிக்காமூர் ச (அன்னப்பன்பேட்டை)
  26. கழிப்பாலை அ, ச, சு (சிவபுரி),
  27. கழுக்குன்றம் அ, ச, சு
  28. கழுமலம் சு
  29. களர் – பாரிசாதவனம் ச
  30. கள்ளில் ச (சங்ககாலப் புலவர் கள்ளில் ஆத்திரையனார்)
  31. கற்குடி அ, ச, சு
  32. கன்றாப்பூர்
  33. கேதாரம் ச, தி,

கா

  1. காட்டுப்பள்ளி - கீழைத்திருக்காட்டுப்பள்ளி ச ,
  2. காட்டுப்பள்ளி – மேலைத்திருக்காட்டுப்பள்ளி ச, அ
  3. காவிரிப்பூம்பட்டினத்துத் திருப்பல்லீச்சரம்] ச காவிரிப்பூம்பட்டினம்
  4. காளத்தி அ, ச, சு - வேறு கருத்து திருக்காளத்தி
  5. காறாயில் – திருக்காறை வாசல் ச தெ
  6. கானப்பேர் காளையார்கோயில்
  7. கானூர் அ, ச

கு

  1. குடந்தைக்காரோணம் – காசிவிசுவநாதர் கோயில் ச
  2. குடந்தைக் கீழ்க்கோட்டம் அ,
  3. குடமூக்கு அ, ச, கும்பகோணம்
  4. குடவாயில்
  5. குத்தாலம் – திருத்துருத்தி ச
  6. குரங்கணில் முட்டம்
  7. குரங்காடுதுறை – தென்குரங்காடுதுறை அ, ச = ஆடுதுறை
  8. குரங்காடுதுறை - வடகுரங்காடுதுறை
  9. குரங்குக்கா
  10. குருகாவூர் ச, சு
  11. குற்றாலம் - குறும்பலா ச
  12. குறுக்கை அ , குறுக்கை வீரட்டம்

கூ

  1. கூடல், (வெஞ்சமாக்கூடல்) சு
  2. கூடலையாற்றூர் சு

கெ

  1. கெடிலம் அ (கடலூர்)

கே

  1. கேதாரம் ச, சு
  2. கேதீச்சரம் ச, ஈழநாட்டில் உள்ள ஊர்
  3. கேதீச்சரம் சு

கை

  1. கைச்சினம்
  2. கைலாயம்

கொ

  1. கொட்டையூர்
  2. கொடுங்குன்றம்
  3. கொடுமுடி – ச, சு, அ
  4. கொண்டீச்சரம்
  5. கொள்ளம்புதூர்
  6. கொள்ளிக்காடு

கோ

  1. கோகரணம்
  2. கோட்டாறு
  3. கோட்டூர்
  4. கோடிக்கா அ, ச
  5. கோடிக்குழகர் சு
  6. கோணமலை [6] ச ஈ (திருக்கோணமலை)
  7. கோயில் அ, ச,சு. கோயில் என்பதே சைவத் திருமுறைகளைப் பொருத்தமட்டில் தில்லை அம்பலவாணரின் கோயிலையே குறிக்கும்.
  8. கோயிலூர் – உசாத்தானம் ச
  9. கோலக்கா ச, சு
  10. கோவலூர் வீரட்டம் அ, ச, நடுநாடு
  11. கோழம்பம் அ, ச, இக்காலத்தில் திருக்குழம்பியம் என வழங்கப்படுகிறது.
  12. கோளிலி – திருக்குவளை ச, அ, சு,

  1. சக்கரப்பள்ளி ச (இது தஞ்சாவூர் ஐயம்பேட்டை)
  2. சத்திமுற்றம்

சா

  1. சாத்தமங்கை
  2. சாய்க்காடு அ, ச

சி

  1. சிக்கல்
  2. சிராப்பள்ளி அ, ச, திருச்சிராப்பள்ளி
  3. சிவபுரம் – சண்பகவனம் ச, அ,
  4. சிறுகுடி

சு

  1. சுழியல் சு

செ

  1. செங்காட்டங்குடி அ, ச
  2. செங்குன்றூர் – திருக்கொடிமாடச் செங்குன்றூர் ச கொ
  3. செங்கோடு ச - (திருச்செங்கோடு)
  4. செம்பொன்பள்ளி அ, ச - இக்காலச் செம்பொனார் கோயில்

சே

  1. சேய்ஞலூர்
  2. சேறை அ, ச

சோ

  1. சோபுரம் ச நடு
  2. சோற்றுத்துறை அ, ச, சு,

  1. தண்டலை நீணெறி
  2. தருமபுரம்
  3. தலைச்சங்காடு ச - தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில்
  4. தலையாலங்காடு அ - சங்ககாலத் தலையாலங்கானம் = ஆலங்கானம்

தி

  1. திங்களூர்
  2. திட்டை – திருத்தென்குடித்திட்டை
  3. திருந்துவேதன்குடி
  4. திலதைப்பதி
  5. தினைநகர் சு

து

  1. துருத்தி = குத்தாலம் என்னும் ஊர் அ,
  2. துறையூர் சு

தூ

  1. தூங்கானைமாடம் அ, ச - பெண்ணாடம்

தெ

  1. தெங்கூர் ச
  2. தெளிச்சேரி ச

தே

  1. தேவூர் ச (சேலம் மாவட்டத் தேவூர் வேறு)

  1. நணா – பவாநி ச (பவானி)
  2. நரையூர் அ, ச,
  3. நல்லம் அ, ச, தற்போதுள்ள கோனேரிராசபுரம்
  4. நல்லூர் -
  5. நல்லூர் - அறையணி நல்லூர் – அறைகண்ட நல்லூர் ச
  6. நல்லூர் ச , அ
  7. நல்லூர் சு
  8. நல்லூர் அ, ச
  9. ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் கோயில்
  10. நள்ளாறு அ, ச, சு,
  11. நறையூர்ச் சித்தீச்சரம் ச, சு
  12. நன்னிலத்துப் பெருங்கோயில் சு
  13. நனிபள்ளி – புஞ்சை- பொன்செய் , நாகபட்டினம் மாவட்டம் அ, ச, சு

நா

  1. நாகேச்சரம் அ, ச, சு,
  2. நாகைக்காரோணம் அ, ச, சு,
  3. நாட்டியத்தான்குடி சு
  4. நாலூர் மயானம் ச
  5. நாவலூர்] சு

நி

  1. நின்றியூர் அ, ச, சு,

நீ

  1. நீடூர் சு
  2. நீலக்குடி

நெ

  1. நெடுங்களம் ச தெ
  2. நெய்த்தானம் அ, ச,
  3. நெல்லிக்கா ச
  4. நெல்வாயில்
  5. நெல்வாயில் அரத்துறை அ, ந, சு,
  6. நெல்வெண்ணெய் – திருமுக்கால் ச நடுநாடு - நெய்வணை இக்காலப் பெயர்.
  7. நெல்வேலி ச - திருநெல்வேலி

நொ

  1. நொடித்தான்மலை சு

  1. பட்டீச்சரம் ச - பழையாறைப் பட்டீச்சரம்
  2. பயற்றூர் அ, - இக்காலத்தில் திருப்பயத்தங்குடி என வழங்கப்படுகிறது
  3. பரங்குன்றம் ச சு - திருப்பரங்குன்றம்
  4. பராய்த்துறை அ, ச
  5. பருப்பதம்
  6. பழமண்ணிப்படிக்கரை சு
  7. பழனம் அ, ச
  8. பழுவூர்
  9. பழையாறை வடதளி
  10. பறியலூர் வீரட்டம் ச
  11. பனங்காட்டூர் சு
  12. பனந்தாள்
  13. பனையூர் ச, சு,

பா

  1. பாச்சிலாச்சிரமம் ச, சு,
  2. பாசூர் அ, ச.
  3. பாதாளீச்சரம் – பாம்பணி, பாமணி ச தெ
  4. பாதிரி நியமம் ச
  5. பாம்புரம் ச தெ
  6. பாலைத்துறை அ
  7. பாவநாசம் அ
  8. பாழி
  9. பாற்றுறை

பி

  1. பிரம்மபுரம் அ, ச - சீர்காழி

பு

  1. புகலூர் அ, ச, சு,
  2. புகலூர் வர்த்தமானீச்சரம்
  3. புக்கொளியூர், திருப்புக்கொளியூர் சு (அவிநாசி)
  4. புத்தூர் அ, ச - புத்தூர்
  5. புலியூர் (ஓமாம்புலியூர்) அ, ச,
  6. புலியூர் ( திருஎருக்கத்தம் புலியூர்) ச நடு
  7. புலியூர் ச, அ - திருப்பாதிரிப்புலியூர்
  8. புலியூர் (பெரும்புலியூர்)
  9. புள்ளமங்கை
  10. புள்ளிருக்குவேளூர்
  11. புறம்பயம் அ, ச, சு,
  12. புறவார்பனங்காட்டூர் ச நடுநாடு
  13. புன்கூர் அ, ச, சு
  14. புனவாயில்

பூ

  1. பூண்டி, முருகன்பூண்டி சு (திருமுருகன்பூண்டி)
  2. பூவணம் அ, ச, சு
  3. பூவனூர்

பெ

  1. பெருந்துறை - திருப்பந்துறை பேணுபெருந்துறை ச காவிரியின் தென்கரை

பே

  1. பேரெயில்

பை

  1. பைஞ்ஞீலி

  1. மங்கலக்குடி அ, ச,
  2. மணஞ்சேரி அ, ச,
  3. மயிலாடுதுறை அ, ச
  4. மயிலாப்பூர்
  5. மயேந்திரப்பள்ளி
  6. மருகல் அ, ச
  7. மழபாடி
  8. மறைக்காடு அ, ச, சு
  9. மன்னார்குடி (பாமனி நாகநாதர் சுவாமி திருக்கோயில்

மா

  1. மாகறல்
  2. மாணிகுழி ச நடுநாடு
  3. மாந்துறை
  4. மாற்பேறு அ, ச

மீ

  1. மீயச்சூர் ச தெ

மு

  1. முக்கூடல்
  2. முண்டீச்சரம்
  3. முதுகுன்றம் அ, ச, சு
  4. முல்லைவாயில்
  5. முல்லைவாயில் சு
  6. முள்ளூர்

மூ

  1. மூக்கீச்சுரம் (உறந்தை) - உறையூர்

  1. வக்கரை
  2. வடுகூர் - ச நடுநாடு
  3. வலஞ்சுழி அ, ச - திருவலஞ்சுழி
  4. வலம்புரம் அ, ச, சு
  5. வல்லம்
  6. வலிதாயம்
  7. வலிவலம் அ, ச
  8. வன்னியூர்

வா

  1. வாஞ்சியம் அ, ச, சு,
  2. வாட்போக்கி
  3. வாய்மூர் அ, ச,
  4. வாழ்கொளிபுத்தூர் ச, சு,
  5. வான்மியூர் அ, ச - திருவான்மியூர்

வி

  1. விசயமங்கை அ, ச,
  2. விடைவாய்,விடைவாசல்
  3. வியலூர்
  4. விற்கோலம்

வீ

  1. வீழிமிழலை அ, ச, சு

வெ

  1. வெண்காடு அ, ச, சு
  2. வெண்டுறை ச
  3. வெண்ணியூர் அ, ச
  4. வெண்பாக்கம் சு

வே

  1. வேட்களம் அ, ச
  2. வேட்டக்குடி
  3. வேதிகுடி அ, ச
  4. வேள்விக்குடி சு, ச
  5. வேளூர் அ, ச
  6. வேளூர் அ, ச
  7. வேளூர்
  8. வேற்காடு - திருவேற்காடு ஊர், திருவேற்காடு

வை

  1. வைகல் மாடக்கோயில்
  2. வைகாவூர்

இவற்றையும் பார்க்க

அடிக்குறிப்புகள்

  1. தலை என்னும் சொல் வடதலை என்னும்போது இடைச்சொல்லாய் அமைந்து ஓர் இடத்தைக் குறிக்கிறது. இந்தத் தலை என்னும் சொல் பெயர்ச்சொல்லாகி ஆகுபெயராய் ஊரை உணர்த்தலாயிற்று. தலை என்பது தலம் ஆயிற்று. ஸ்தலம் என்னும் வடசொல்லின் திரிபு என்பது அவரவர் மனப்பாங்கு.
  2. http://www.tamilvu.org/library/l41H0/html/l41H0cnt.htm திருமுறைத் தலங்கள்
  3. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள்,வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 5ஆம் பதிப்பு, 2009, பக்.10-13
  4. சோழநாட் டொருநூற்றுத் தொண்ணூற் றொன்று
    தொல்லிங்கை இரண்டுதமிழ்ப் பாண்டி நாட்டி
    லோழிரண்டு மலைநாட்டி லொன்று கொங்கி
    லோழுநடு நாட்டிலிரு பத்தி ரண்டே
    ஏழைந்தோ டிருபதாம் தொண்டை நாட்டி
    லெணொன்றே துளுவத்தில் வடநாட் டைந்தே
    ஏழுபத்தைந் துடனிரண்டு நூறு கொண்ட
    தீசனுறை தேவாரத் திருத்த லங்கள்
  5. இராய சொக்கலிங்கம்; திருத்தலப்பயணம்; வெளியீடு: க. வெ. சித. வெ. வேங்கடாசலம் செட்டியார், அழகப்பா அறநிலையச் செயலர், காரைக்குடி; மு. பதி. 1966; பக். 2
  6. தாயினும் நல்ல தலைவரென் றடியார் தம்மடிப் போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்தும் மருவிநின் றகலா மாண்பினர் காண்பல வேடர் நோயிலும் பிணியும் தொழிலர்பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம் கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே. திருஞானசம்பந்தர்; பாடல் எண் 5

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தேவாரத்_திருத்தலங்கள்&oldid=131749" இருந்து மீள்விக்கப்பட்டது