வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
வைத்தியநாதர் கோவில்
பெயர்
புராண பெயர்(கள்):புள்ளிருக்குவேளூர்
பெயர்:வைத்தியநாதர் கோவில்
அமைவிடம்
ஊர்:வைத்தீசுவரன்கோவில்
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வைத்தியநாதர்
தாயார்:தையல்நாயகி
தல விருட்சம்:வேம்பு
தீர்த்தம்:சித்தாமிர்தம்
ஆகமம்:காமிக ஆகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவில் (Vaitheeswaran Koil) திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள். இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் பெயர் முத்துக்குமார சுவாமி. இவன்மீது முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூல் பாடப்பட்டுள்ளது.[1][2] தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 16வது சிவத்தலமாகும்.

இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், வைத்தீசுவரன் கோவில் எனும் ஊரில் அமைந்துள்ளது.

சங்கப்பாடல் குறிப்பு

வேளூர்வாயில் என்பது புள்ளிருக்கு வேளூரின் சங்ககாலப் பெயர். 'வேள்' என்னும் சொல் முருகப்பெருமானைக் குறிக்கும். 'புள்' என்னும் சொல் கருடனையும், 'இருக்கு' என்னும் சொல் இருக்கு வேதத்தையும் குறிக்கும் என்று மு. அருணாசலம் விளக்கம் தருகிறார். இடையன் நெடுங்கீரனார் என்னும் சங்ககாலப் புலவர் இந்த ஊரிலுள்ள தெய்வம் பொய் சொல்வோர் உயிரைப் பலியாகக் கொள்ளும் என்று குறிப்பிடுகிறார்.[3]

ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான புதன் கிரகத்தையும் அதனுடன் அங்கராதனையும் சேர்த்து வழிபடும் தலமாகும். அங்காரகன் தொழுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்ட கடவுளாக நம்பப்படுகின்றது. நாடி சோதிடர்கள் நிறைந்திருக்கும் புகழ்பெற்ற இடமாகும்.

இக்கோயில் சிதம்பரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சையிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இத்தலத்தை தொடர்வண்டி மூலம் மயிலாடுதுறையை அடைய மைசூரிலிருந்து மைசூர் விரைவுத் தொடர்வண்டி (வழி) பெங்களூர், சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வழியாக மயிலாடுதுறையை அடையலாம்.

வைத்தீசுவரன்

வைத்தீசுவரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்துவது ஆகும். இக்கடவுளை வழிபடுவோர் நோய்நொடி நீங்கி வாழ்வர் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகின்றது. இக்கடவுள் நோய்தீர்க்கும் வல்லவர் என்று போற்றப்படுகின்றார்.

இக்கோயிலில் அமைந்திருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித நீராக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்று அங்கு வழிபடும் மக்களால் நம்பப்படுகின்றது.

வரலாற்று சிறப்பு மிக்க வைத்தீசுவரன் கோவிலின் தோற்றம்

சம்பாதி, சடாயு, என்ற கழுகரசர் இருவர்களும், முருகப்பெருமானும், பூசித்துப் பேறுகளைப் பெற்ற தலமாதலால் இப்பெயர் பெற்றது.

இத்தலத்துச் சிவபெருமானைப் பற்றிய புகழ்ப் பாக்களில்

சடாயு, சம்பாதி இவர்கள் வழிபட்ட செய்திகள் உள்ளன.[4]

புள்ளிருக்குவேளூர் பெயர்க்காரணம்

சடாயு[5] என்னும் புள் [5](பறவை), இருக்கு- வேதம் (ரிக்கு வேதம்[5]), முருகவேள்[5], சூரியனாம் ஊர்[5] ஆகிய நால்வரும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கியதால் இத்தல நாயகர் புள்ளிருக்குவேளூர்[5] எனவும் திருபுள்ளிருக்குவேளூர்[5] என தனிச்சிறப்புடனும் அழைக்கப்படுகின்றார்.

தல புராணம்

ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான அங்காரகன், தொழுநோயால் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டதின் விளைவாக கடவுள் சிவனார் வைத்தியநாத சுவாமியாக எழுந்தருளி அவரின் பிணிதீர்த்தார். ஆகையால் இக்கோயில் ஒன்பது கிரக கோயில்களில் இது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் கோயில் தலமாக விளங்குகின்றது.[6] என்னும் அப்பர் பெருமானின் தேவாரப் பகுதியில் இறைவன் வைத்திய நாதர் என்னும் பெயர் பூண்ட காரணத்தைப் புலப்படுத்துவதாகும்.

திருநாவுக்கரசர் தீவிர வயிற்றுப்பிணியினால் அவதியுற்றபொழுது அவர் தமக்கையார் வைத்தியநாதனை நினைந்து பிணிநீக்க தொழுதிட்டார், அவ்வாறே எழுந்தருளி பிணிநீக்கினார். அன்று முதல் இத்தல சிவனாரை அவரின் பக்தகோடிகளால் வைத்தியநாதன் என்றழைக்கபெற்று வழிபடலாயினர்.

வைத்தீசுவரன் கோவில் பிரகாரம் (வழிபாட்டாளர்கள் சுற்றிவரும் பாதை)

கல்வெட்டு

தமிழ் ஆண்டு சகம் 1814 (பொ.ஊ. 1891 ஜூன் 26) நாட்டுக்கோட்டை நகரத்தாரால் திருப்பணியும் குடமுழுக்கும் செய்யப்பட்டன. தமிழ் ஆண்டு சகம் 1689 (பொ.ஊ. 1767) ராசாமகாராசர் [7] காலத்தில் முத்துக்குமாரசாமித் தம்பிரானால் [8] திருப்பணி செய்யப் பட்டது. தமிழ் ஆண்டு சகம் 1682 (பொ.ஊ. 1770) துளசாமகாராசர் [9] காலத்தில் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டது. தமிழ் ஆண்டு சகம் 1802 (பொ.ஊ. 1880) கொடிக்கம்பம் தங்கமயம் ஆக்கப்பட்டது என்று கோயில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

மூலவர் காட்சி மற்றும் செவிவழிச் செய்திகள் (ஐதீகங்கள்)

இக்கோயிலில் வைத்தீசுவர சுவாமி மற்றும் அவரின் இணையான தையல்நாயகி அம்பாள் இருவரும் இணைந்து மூலிகை தைலத்துடன் நின்று பக்தர்களுக்கு காட்சித் தருகின்றனர்.

இக்கோயிலுக்கு இராமர், இலட்சுமணன் மற்றும் ஏழுகடல் முனிவர்களும் (சப்தரிஷி) இத்தலம் வந்து வணங்கியதாக செவிவழிச் செய்திகள் (அய்தீகங்கள்) உண்டு.

இத்தலம் இந்துக்களின் கடவுளாக கூறப்படும் இராமரின் மனைவி சீதையை இலங்கை மன்னன் இராவணன் கவர்ந்து சென்றபொழுது கழுகு மன்ன்னான சடாயு இடைமறித்து தடுத்ததினால், இராவணனின் தாக்குதலுக்குள்ளாகி மாண்ட சடாயுவின் சடலத்தை இராமன் மற்றும் அவரின் தமையனாரான இலக்குவணன் இருவரும் இணைந்து (ஜடாயு) இங்கு அமைந்துள்ள குளத்தின் அருகே வைத்து சடாயுவின் சிதைக்கு தீமூட்டி எரிக்கப்பட்டதினால் இக்கோயிலில் அமைந்துள்ள குளத்தை சடாயு குந்தம் என்றழைக்கப்படுகின்றது.

இக்கோயிலினுள் உள்ள சிறிய தலத்தில் கடவுள் தன்வந்தரியும், தமிழ்க்கடவுளாம் முருகன் முத்துகுமாரசாமியாகவும் எழுந்தருளியுள்ளனர்..

மூலவருக்காக படைக்கப்படுகின்ற பொருட்கள் மற்றும் காணிக்கைகள்

கடவுளுக்கு படைத்த பொருட்காளாக (பிரசாதங்களாக) திருநீரும் , சாம்பல் (திருச்சந்தன உருண்டை (அ)திருச்சாந்து உருண்டை) நோய்தீர்க்கும் மருந்தாக வழங்கப்படுகின்றது. இது தீக்குழியிலிருந்து (ஒமகுண்டத்திலிருந்து) தயாரிக்கப்படுகின்றது. இன்னொரு வகையான மருந்தாக (சந்தன துகள்கள்) சந்தனம், குங்குமப்பூ கலந்து வழங்கப்படுகின்றது.

மக்கள் இங்கு வருகை புரியும் பொழுது மிளகு மற்றும் வெல்லத்துடன் கலந்த் உப்பு இவற்றை சித்தாமிர்தத்தில் (குளம்) வைத்து நோய்தீர்க்க வேண்டி கடவுளுக்கு படைக்கின்றனர். கடவுளுக்காக வெள்ளித்தட்டுகள், மோதிரங்களை காணிக்கையாக பிணிதீர்க்க வேண்டி உண்டியலில் செலுத்துகின்றனர்.

மூலவர் காட்சி, சேவைகள் மற்றும் திருவிழாக்கள்

ஆண்டுத் திருவிழா (பிரம்மோற்சவம்) ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மற்றும் தை (தமிழ் மாதங்கள்) மாதங்களில் கொண்டாடப்படுகின்றது. கார்த்திகை மாதத்திலும் விழா எடுக்கப்படுகின்றது. தமிழ்க் கடவுளாம் முத்துகுமாரசுவாமிக்கு தனி விழாவாக அமாவசை அல்லது பௌர்ணமிக்குப் பின்வரும் காலத்தன்று (சஷ்டியன்று) விழா எடுக்கப்படுகின்றது.

நாடி சோதிடம் இங்கு புகழ்பெற்ற ஒன்று இது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது ஆனால் இது பொய்யுரையாகவும் இருக்கலாம்.

பாடல்பெற்ற தலம்

திருநாவுக்கரசர் மற்றும் திருஞான சம்பந்தர், வள்ளலார் வைத்தியநாத சுவாமிகள் குறித்து பாடியத்தலமாகும். ஆகையால் இது பாடல் பெற்ற தலமாக விளங்குகின்றது.

குடமுழுக்கு விபரம்

  1. கர வருஷம் ஆனி மாதம் 16ஆம் (26/06/1891)தேதி நாட்டுக்கோட்டை நகரத்தாரில் கானாடுகாத்தான் கரு.தூ குடும்பத்தினரால் பெரும் பொருட்செலவில் கோவில் முழுவதும் பழுது பார்த்து சீர்திருத்தம் செய்யப்பட்டு தருமை ஆதீனம் தலைமையில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.[10]
  2. பிரபல வருஷம் ஆவணி மாதம் 10ஆம் (01/09/1927) தேதி நாட்டுக்கோட்டை நகரத்தாரில் கானாடுகாத்தான் கரு.தூ குடும்பத்தினரால் பெரும் பொருட்செலவில் கோவில் முழுவதும் பழுது பார்த்து சீர்திருத்தம் செய்யப்பட்டு தருமை ஆதீனம் தலைமையில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.[10]
  3. பொ.ஊ. 1947இல் கோயில் தருமை ஆதீனத்தால் முழுவதும் பெரும் பொருட்செலவில் பழுதுபார்க்கப்பட்டுள்ளது.
  4. 02/07/1969இல் தருமை ஆதீனத்தால் கோவில் முழுவதும் பழுது பார்த்து குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
  5. பொ.ஊ. 1998இல் கோவில் முழுவதும் பழுது பார்த்து தருமை ஆதீனம் தலைமையில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. குமரகுருபரர். ஸ்ரீ குமரகுருபர சிவாமிகள் பிரபந்தங்கள். சென்னை, கேசரி அச்சகம்: திருப்பனந்தாள் மடம், காசிவாசி சுவாமிநாத சுவாமிகள், (உ. வே. சாமிநாதையர் குறிப்புரையுடன்) நூல் பதிப்பு 1939,. p. 257.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினேழாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 98. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. நறு விரை தெளித்த நாறுஇணர் மாலை, பொறி வரி இன வண்டு ஊதல கழியும், உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்,பழம் பல் நெல்லின் வேளூர்வாயில், (அகநானூறு 166)
  4. தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
    புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே (ஞானசம்பந்தரின் தேவாரம்)
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 திருபுள்ளிருக்குவேளூர்-புனித இந்தியா-இணையத்தளம் பரணிடப்பட்டது 2009-11-24 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 21-06-2009
  6. மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான்
  7. ராஜாமகாராசர்
  8. இறைப்பணி செய்யும் துறவி அல்லது மடத்தலைவன்
  9. துளஜாமகாராசர்
  10. 10.0 10.1 பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் (1953). நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு. p. 201.

வெளி இணைப்புகள்