ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திரு இரும்பூளை ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில்
திரு இரும்பூளை ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில் is located in தமிழ் நாடு
திரு இரும்பூளை ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில்
திரு இரும்பூளை ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில்
ஆபத்சகாயேசுவரர் கோயில், ஆலங்குடி, திருவாரூர், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று:10°49′48″N 79°24′38″E / 10.8299°N 79.4105°E / 10.8299; 79.4105
பெயர்
புராண பெயர்(கள்):திருஇரும்பூளை
பெயர்:திரு இரும்பூளை ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:ஆலங்குடி
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஆபத்சகாயேசுவரர், காசி ஆரண்யேசுவரர்
தாயார்:ஏலவார் குழலி
தல விருட்சம்:பூளைச் செடி
தீர்த்தம்:அமிர்த புஷ்கரிணி, பிரம்ம தீர்த்தம், ஞான கூபம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் (இரும்பூளை) (Apatsahayesvarar Temple, Alangudi) என்பது திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் அமைந்துள்ள சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும்.[1] தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் இது 98ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 70 மீட்டர் உயரத்தில், 10°49′48″N 79°24′38″E / 10.8299°N 79.4105°E / 10.8299; 79.4105 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, இக்கோயில் அமையப் பெற்றுள்ளது.[2]

சிறப்பு

முன் மண்டபம்

இத்தலத்தில் ஆலகால நஞ்சை உண்டு தேவர்களை இறைவன் காத்தான் என்பது தொன்நம்பிக்கை. இத்தலம் குருஸ்தலமாக போற்றப்படுகிறது. இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்திக்கு குருபெயர்ச்சியன்று சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்படுகின்றன. இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் குருபெயர்ச்சியன்றும் வியாழக்கிழமைகள் தோறும் ஆலங்குடி வந்து அருள்மிகு தெக்ஷிணாமூர்த்தியை தரிசனம் செய்து செல்கிறார்கள். மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மகாகுருவாரமாகக் கொண்டாடப்படுகிறது.

தலவரலாறு

  • அம்பிகை தவம் புரிந்து சிவபெருமானை திருமணம் புரிந்த திருத்தலம்
  • தட்சிணாமூர்த்தித் தலம்.

வழிபட்டோர்

விசுவாமித்திரர், முசுகுந்த சக்கரவர்த்தி, வீரபத்திரர் முதலானோர் வழிபட்ட திருத்தலம்.[3]

பரிவாரத் தலம்

பரிவாரத்தலங்களும் கடவுள்களும்

  • திருவலஞ்சுழி : விநாயகர்
  • சுவாமி மலை : முருகர்
  • திருவாவடுதுறை : நந்திதேவர்
  • சூரியனார் கோயில் : நவக்கிரகம்
  • தில்லை : நடராஜர்
  • திருவாரூர் : சோமஸ்கந்தர்
  • சீர்காழி : பைரவர்
  • திரு ஆப்பாடி : சண்டேசுவரர்
  • ஆலங்குடி : தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி தனிமூலவர்

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
  2. [1]
  3. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 205,206

வெளி இணைப்புகள்


Mlogo.png
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வரும்.,
Apatsahayesvarar Temple, Alangudi
என்பதின் ஊடகங்கள் Wikimedia-விலும் உள்ளன.