சிவபுரம் சிவகுருநாதசுவாமி கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
(சிவபுரம் சிவகுருநாதர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
சிவபுரம் சிவகுருநாதசுவாமி கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):பூகயிலாயம், குபேரபுரம், சண்பகாரண்யம்.[1]
பெயர்:சிவபுரம் சிவகுருநாதசுவாமி கோயில்
அமைவிடம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவபுரநாதர், சிவபுரீசுவரர், சிவகுருநாத சுவாமி, பிரம்மபுரீசுவரர்
தாயார்:சிங்காரவல்லி, பெரிய நாயகி, ஆரியாம்பாள்
தல விருட்சம்:சண்பகம்
தீர்த்தம்:சுந்தர தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
வரலாறு
தொன்மை:புராதனக்கோயில்
அமைத்தவர்:சோழர்கள்

சிவபுரம் சிவகுருநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 67ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்

சாக்கோட்டைக்கு வடகிழக்கில் இரண்டு கி.மீ தொலைவில் அரசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.[1] சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது.

சிறப்புகள்

இத்தலத்தில் திருமால் வெள்ளைப் பன்றி வடிவிலிருந்து பூசித்தார் என்பதும் குபேரன் இராவணன் ஆகியோர் பூசித்தனர் என்பதும் என்பது தொன்நம்பிக்கைகள். இவ்வூரில் பூமிக்கடியில் சிவலிங்கம் இருப்பதால் சம்பந்தர் அங்கப் பிரதட்சணம் செய்து இறைவனை வழிபட்டார் எனப்படுகிறது.

இறைவன், இறைவி

இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி.[1]. இறைவன் சிவகுருநாதசுவாமி, இறைவி ஆர்யாம்பாள்.

அமைப்பு

மூலவர் விமானம்
சிவபுரம் கோயில் படங்கள்

ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி பீடம், நந்தி உள்ளன. இந்த திருச்சுற்றில் கால பைரவர் சன்னதி உள்ளது. கால பைரவர் தெற்கு நோக்கி உள்ளார். அடுத்த கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. அடுத்து பலி பீடமும், நந்தியும் உள்ளன. அடுத்துள்ள மூலவர் கருவறைக்கு முன்பாக வலது புறம் விநாயகர் உள்ளார். இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் கருவறை கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. உள் திருச்சுற்றில் விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் உள்ள சுப்பிரமணியர் சன்னதி, கஜலட்சுமி சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றில் தேயுலிங்கம், வாயுலிக்ம், பிரிதிவிலிங்கம், அக்னி, இந்திராணி, இந்திரன், குபேரன், பாலமுருகன், பைரவர், சந்திரன், சனீஸ்வரர் ஆகியோர் உள்ளனர். கோயிலின் எதிரில் கோயில் குளம் உள்ளது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 175

இவற்றையும் பார்க்க

வெளியிணைப்புகள்