அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில்
Jump to navigation
Jump to search
தேவாரம் பாடல் பெற்ற அகஸ்தியன் பள்ளி அகத்தீஸ்வரர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | அகத்தியான் பள்ளி |
பெயர்: | அகஸ்தியன் பள்ளி அகத்தீஸ்வரர் கோயில் |
அமைவிடம் | |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அகத்தீசுவரர் |
தாயார்: | மங்கை நாயகி |
தல விருட்சம்: | வன்னி, அகத்தி |
தீர்த்தம்: | அகத்திய தீர்த்தம், அக்கினி தீர்த்தம்(கடல் அருகிலுள்ளது) |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
அகத்தீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் உள்ள 126ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் அகத்தீஸ்வரர், தாயார் மங்கை நாயகி. தலவிருட்சமாக வன்னி மரமும், அகத்தி மரமும் உள்ளன. இத்தலத்தில் அகத்திய தீர்த்தம் மற்றும் அக்னி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் அகத்தியர் கோவில் என்று வழங்கப்படுகிறது. இயமன் வழிபட்ட தலமிது. அகத்தியருக்குக் கோயில் இங்குள்ளது.[1]
திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல்
"வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள்
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி
ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையினார்கட்கு இல்லையாம் பாவமே!"
மேற்கோள்கள்
- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம் ; பக்கம்; 284
வெளி இணைப்புகள்
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்
- கோவில் பற்றிய விபரமும் பதிகமும் பரணிடப்பட்டது 2015-01-19 at the வந்தவழி இயந்திரம்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வரும்.,
Akattiyanpalli Akatticuvarar Temple
என்பதின் ஊடகங்கள் Wikimedia-விலும் உள்ளன.
Akattiyanpalli Akatticuvarar Temple
என்பதின் ஊடகங்கள் Wikimedia-விலும் உள்ளன.
இவற்றையும் பார்க்க
படத்தொகுப்பு
அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் கோடியக்காடு கோடிக்குழகர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 126 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 126 |