அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற அவளிவள் நல்லூர் சாட்சிநாதர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | புல்லாரண்யம், சாட்சிநாதபுரம், பாதிரிவனம்,அவளிவள் நல்லூர்[1],அவளிவநல்லூர் |
பெயர்: | அவளிவள் நல்லூர் சாட்சிநாதர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | அவளிவநல்லூர்[2] |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சாட்சிநாதர்,ஸ்ரீகம்பரிஷியுடையார் |
தாயார்: | சௌந்தர நாயகி, சௌந்தர வல்லி |
தல விருட்சம்: | பாதிரி |
தீர்த்தம்: | சந்திர தீர்த்தம் (சிவ புஷ்கரணி கோவிலின் முன்பமைந்துள்ளது) |
சிறப்பு திருவிழாக்கள்: | தை அமாவாசை |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் |
அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும்.
அமைவிடம்
சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில்அம்மாப்பேட்டை அருகே அமைந்துள்ளது. காவிரி தென்கரைத்தலங்களில் 100ஆவது சிவத்தலமாகும். தஞ்சாவூர்-நாகூர் இருப்புப் பாதையில் சாலியமங்கலம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடகிழக்கே ஆறரை மைல் தொலைவில் உள்ள திருத்தலமிது. கோயில் வெண்ணி இருப்புப்பாதை நிலையத்திலிருந்தும் செல்லலாம். தஞ்சாவூரிலிருந்து அம்மாப்பேட்டை வழியே கும்பகோணத்திற்கு செல்லும் பேருந்துப்பாதையில் 33 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[2]
சிறப்புகள்
இத்தலத்தில் அர்ச்சகரின் மூத்த மகளுக்கு அம்மை போட்டு உருவம் மாறியதால் யாத்திரை போய்த் திரும்பிய கணவன் இளையவளே தன் மனைவி என்று கூறிய போது இறைவன் இறைவியுடன் ரிஷப வாகனத்தில் தோன்றி சாட்சி கூறி ’அவள் இவள்’ என்று காட்டித் தந்து அருள் புரிந்தார். கர்ப்பகிருகத்தில் சிவபெருமானும் உமையம்மையும் ரிஷப வாகனத்தில் காட்சி தருகின்றனர்[2] இறைவனாரின் அருள்படி மூத்தவள் சுசீலை இத்தலத் தீர்த்தத்தில் நீராடி அழகிய வடிவையும் கண் பார்வையையும் பெற்றாள். இங்கு எழுந்தருளிய சிவபிரானுக்குத் தம்பரிசுடையார், சாட்சிநாதர் என்றும் இறைவிக்குச் செளந்தரியவல்லி என்றும் பேர். தீர்த்தம் சந்திரபுட்கரணி. தலவிருட்சம் பாதிரி.
தொன்நம்பிக்கைகள்
வராகமூர்த்தியும் (திருமால்) காசியப்பமுனிவரும் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். தன்மனைவியை விடுத்து அவள் தங்கையைத் தம் மனைவியென வாதிட்ட கணவனுக்கு, அவன் மனைவியாகிய அவள் தான் சுட்டும் இவள் என்று காட்டியதால், நல்லூர், அவள் இவள் நல்லூர் என்று பெயர் பெற்றதாம். இக்கதை கர்ப்பகிருகத்தின் பின் பக்கத்தில் செதுக்கப்பட்டிருக்கின்றது என்பர்.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில் - தினமலர் நாளிதழ்
- அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில் - கோயில் சித்தன் பரணிடப்பட்டது 2012-03-30 at the வந்தவழி இயந்திரம்
- கூகிள் மேப்
அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் பரிதியப்பர்கோவில் பரிதியப்பர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 100 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 100 |