பாபநாசம் பாலைவனேஸ்வரர் கோயில்
இக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில் கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக) |
பாபநாசம் பாலைவனேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்திருத்தலம் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் புலியின் தோலை உரித்து உடுத்திக் கொண்ட செயலைச் செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 19ஆவது சிவத்தலமாகும்.
தேவாரம் பாடல் பெற்ற திருப்பாலைத்துறை | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | பாலைவனம், பிரம்மவனம், அரசவனம், புன்னாகவனம் |
பெயர்: | திருப்பாலைத்துறை |
அமைவிடம் | |
ஊர்: | பாபநாசம் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பாலைவனேஸ்வரர், பாலைவனநாதர். |
தாயார்: | தவளவெண்ணகையாள், தவளாம்பிகை, தவளாம்பாள் |
தல விருட்சம்: | பாலை. (இப்போதில்லை) |
தீர்த்தம்: | வசிஷ்டதீர்த்தம், இந்திர தீர்த்தம், எம தீர்த்தம் |
ஆகமம்: | சிவாகமம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருநாவுக்கரசர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
தல வரலாறு
- பாண்டவர்களின் வனவாச காலத்தில், தௌமிய முனிவரின் ஆலோசனைப்படி அருச்சுனன் இத்தலத்திற்கு வந்து, வழிபட்டு, வில்வித்தையின் நுட்பங்களை உணர்ந்து, பாதாள உலகம் சென்று உலூபியை மணந்து வந்தான் என்று சொல்லப்படுகிறது.
- தாருகாவனத்து முனிவர்கள், இறைவனைப் புறக்கணித்து அவரையே அழிக்க எண்ணி, தீயவேள்வி செய்து, புலியை வரவழைத்து, அதை இறைவன் மீது ஏவ, இறைவனும் அப்புலியின் தோலை உரித்து உடுத்திக் கொண்ட செயலைச் செய்த தலம்.
தல சிறப்புகள்
- சுவாமி, அம்பாள் இருவரும் கல்யாணத் திருக்கோலத்தில் விளங்குகின்றனர்.
- வேதம்|வேதங்களின் நடுவணதாகிய யஜுர் வேதம்|யஜுர்வேதத்தின் நடுவின் பஞ்சாக்ஷரம் விளங்குவது போல, திருமுறைகளில் தேவாரத்துள் நடுவணதாகிய அப்பர் தேவாரத்துள், குறுந்தொகையில், நடுப்பதிகமாகிய 51-ஆவது பதிகம் இத்தலத்துப் பதிகமாகும். இப்பதிகத்தின் நடுப்பாடலாக உள்ள "விண்ணினார் பணிந்து " என்று தொடங்கும் பாடலின் நடுவில் சூட்சும பஞ்சாக்ஷரம் விளங்குகிறது. இச்சிறப்பினையுடைய (பதிகத்திற்கு) உரிய தலம் ஆகும்.
- கோயில் கீழ்ப்பகுதி கருங்கல்லிலும், மேற்பகுதி செங்கற் கட்டமைப்பிலும் காணப்படுகிறது.
- கோயிலுள் பெரிய நெற்களஞ்சியம் உள்ளது - வட்ட வடிவில் கூம்பு முனையுடன் செங்கல்லால் கட்டப்பட்டுள்ள இக்களஞ்சியம் 12 ஆயிரம் கலம் கொள்ளளவுடையது. இவ்வளவு அதிகமான நெல் வருவாயைக் கொண்டதாக இக்கோயில் விளங்கியதென்பது நமக்குத் தெரிகிறது. தற்போது இது பயன்படுத்தப்படாமல் உள்ளது.
- பிராகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், வசிஷ்டர், மகாலட்சுமி, பார்த்திபன், மலையத்துவசன் ஆகியோர் வழிபட்ட சிவலிங்கள் உள்ளன.
- இக்கோயிலில் முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் இராசராசன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோருடைய காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.
- இக்கல்வெட்டுக்களில் இவ்வூர், "நித்தவிநோத வளநாட்டு நல்லூர் நாட்டைச் சேர்ந்த ஊர் " என்றும்; இறைவன் "திருப்பாலைத்துறை மகாதேவர் " என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
- முதற் குலோத்துங்கன் காலத்தில் இக்கோயில் கருங்கல் திருப்பணியாக ஆக்கப்பெற்றிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்கள் கருத்தாக உள்ளது.
திருத்தலப் பாடல்கள்
இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
திருநாவுக்கரசர் பாடிய பதிகம்
விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும்
மண்ணி னார்மற வாதுசி வாயவென்
றெண்ணி னார்க்கிட மாவெழின் வானகம்
பண்ணி னாரவர் பாலைத் துறையரே.
தொடருந் தொண்டரைத் துக்கந் தொடர்ந்துவந்
தடரும் போதர னாயருள் செய்பவர்
கடலின் நஞ்சணி கண்டர் கடிபுனற்
படருஞ் செஞ்சடைப் பாலைத் துறையரே..
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
- தல வரலாறு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் பரணிடப்பட்டது 2015-08-03 at the வந்தவழி இயந்திரம்
- தலவரலாறு, சிறப்புகள், அமைவிடம் பரணிடப்பட்டது 2015-08-03 at the வந்தவழி இயந்திரம்
- அப்பர் பாடிய நடுப்பதிகமாகிய 51-ஆவது பதிகம் பரணிடப்பட்டது 2013-03-14 at the வந்தவழி இயந்திரம்
- அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்