திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற திருக்கோளிலி பிரம்மபுரீஸ்வரர் கோயில்[1] | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | தென்கயிலை,
பிரம தபோவனம், கதகாரண்யம் (தேற்றாமரவனம்), புஷ்பவனம், திருக்கோளிலி |
பெயர்: | திருக்கோளிலி பிரம்மபுரீஸ்வரர் கோயில்[1] |
அமைவிடம் | |
ஊர்: | திருக்குவளை |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பிரமபுரீசுவரர், கோளிலி நாதேசுவரர், (புற்றிடங்கொண்ட மூர்த்தியாக அமைந்துள்ளார்) |
தாயார்: | வண்டார்பூங்குழலியம்மை |
தல விருட்சம்: | தேற்றாமரம் |
தீர்த்தம்: | பிரம தீர்த்தம், சத்தி, அமிர்த, அகத்திய, விநாயக தீர்த்தங்கள் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் |
பிரம்மபுரீஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில்அமைந்துள்ள 123ஆவது சிவத்தலமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர், தாயார் வண்டமர் பூங்குழலம்மை. இத்தலத்தின் தலவிருட்சமாக தேத்தா மரமும், தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும் உள்ளன. இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி.
ஏழு விடங்கத் தலங்களில் ஒன்றான திருத்தலம். இத்தலத்து தியாகராஜர் அவனி விடங்கத் தியாகர்,ஊழிப்பரன் என்றும் இவரது நடனம் வண்டு நடனம் என்றும் அறியப்படுகிறது
சிறப்பு
- குண்டையூரில் சுந்தரர் பெற்ற நெல் திருவாரூர் பரவையார் இல்லத்திற்குச் செல்ல இறைவனார் அருள் புரிந்த திருத்தலம்.
- நவக்கிரகங்கள் ஒன்பதும் தெற்கு நோக்கியவாறு அமைந்துள்ளன
வழிபட்டோர்
பிரமன், திருமால், முசுகுந்த சக்கரவர்த்தி,பஞ்ச பாண்டவர்கள், அகத்தியர், நவக்கிரகங்கள்[2]
திருக்கோளிலி அருகில் அமைந்துள்ள மற்ற சிவத்தலங்கள் - குண்டையூர்
குண்டையூர் திருத்தல இறைவன் சுந்தரேசுவரர், அம்பிகை மீனாட்சியம்மை. சுந்தரருக்கு நெல் அளித்த குண்டையூர் கிழார் வாழ்ந்த தலம் மற்றும் இவ்வடியாருக்காக இறைவனார் நெல் மலை அருளிய திருத்தலம்.
எட்டுக்குடி
எட்டுக்குடி திருத்தல இறைவன் சௌந்தரேசுவரர், அம்பிகை ஆனந்தவல்லி. தலமரம் வன்னி, தீர்த்தம் சரவணப்பொய்கை;இத்திருத்தலம் முருகப்பெருமானுக்கு சிறப்பான திருத்தலம்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இவற்றையும் பார்க்க
திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: கச்சனம் கைச்சின்னேஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 123 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 123 |