கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திருக்கீழ்வேளூர் கேடிலியப்பர் திருக்கோயில்
படிமம்:Kilvelurkediliyappartemple1.jpg
பெயர்
புராண பெயர்(கள்):இலந்தைவனம் (பதரிகாரண்யம்), திருக்கீழ்வேளூர்
பெயர்:திருக்கீழ்வேளூர் கேடிலியப்பர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கீழ்வேளூர்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அட்சயலிங்கேசுவரர், கேடிலியப்பர்
தாயார்:சுந்தரகுஜாம்பாள், வனமுலை நாயகி
தல விருட்சம்:இலந்தை
தீர்த்தம்:சரவணதீர்த்தம் முதலான ஏழுக்கும் மேற்பட்ட தீர்த்தங்கள்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்

கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில் அப்பர், சம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 84ஆவது சிவத்தலமாகும். இச்சிவாலயம் மூலவர் கேடிலியப்பர். தாயார் வனமுலையம்மன்.

அமைவிடம்

இச்சிவாலயம் தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் எனும் ஊரில் அமைந்துள்ளது.

அமைப்பு

இக்கோயில் மாடக்கோயில் அமைப்பைச் சார்ந்ததாகும். கோயிலின் வெளியே கோயில் குளம் உள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி பீடம், கொடி மரம், நந்தி ஆகியவை காணப்படுகின்றன. வெளித் திருச்சுற்றில் கருங்கல்லால் ஆன அழகான கட்டுமானம் உள்ளது. இதே திருச்சுற்றில் லெட்சுமி விநாயகர், முக்குறுணி விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோருக்கான சன்னதிகள் காணப்படுகின்றன. அஷ்டபுஜ பைரவர் உள்ளார். உயர்ந்த தளத்தில் உள்ள கருவறையின் முன்பாக பாலசுப்பிரமணியர், காசி விசுவநாதர், கொடுங்கை விநாயகர் (வலது), கொடுங்கை விநாயகர் (இடது) உள்ளார். அங்கு நந்தி, பலி பீடம் உள்ளன. கருவறைக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு வலது புறம் தேவநாயகர் சன்னதி உள்ளது. கோயிலின் திருச்சுற்றில் பதரி விநாயகர் சன்னதி, அறுபத்துமூவர், ஜுரதேவர் சன்னதிகளைத் தொடர்ந்து நவக்கிரகங்கள் உள்ளன. அடுத்து, அகஸ்தீஸ்வரர் சன்னதி, விஸ்வநாதர் சன்னதி, மகாலட்சுமி சன்னதி, ஜம்புகேஸ்வரர் சன்னதி, கைலாசநாதர் சன்னதி, பிரஹதீஸ்வரர் சன்னதி, அண்ணாமலை ஈஸ்வரர் சன்னதி, ஏகாம்பரேஸ்வரர் சன்னதி, குபேரர் சன்னதி, சோளீஸ்வர் சன்னதி, விசுவநாதர் சன்னதி, பைரவர் சன்னதி, சூரியர் சன்னதி உள்ளிட்ட சன்னதிகள் காணப்படுகின்றன. தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார். இத்திருச்சுற்றில் அம்மன் சன்னதி உள்ளது. அருகே நடராஜர் சன்னதி உள்ளது. அங்குள்ள இறைவி சுந்தரகுஜாம்பிகை (வனமுலைநாயகி) ஆவார். இதே திருச்சுற்றில் அஞ்சுவட்டத்தம்மன் சன்னதி உள்ளது.

வழிபட்டோர்

அகத்தியர், மார்க்கண்டேயர், வசிட்டர், முருகப்பெருமான் முதலானோர் வழிபட்ட திருத்தலம். முருகப்பெருமானின் வழிபாட்டுக்கு தடங்கல் ஏற்படா வண்ணம் காவல்காத்த அஞ்சுவட்டத்தம்மன் காளி கோயில் சிறப்பானது.[1] இத்தல விநாயகர் பதரிவிநாயகர்.

மேற்கோள்கள்

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 245,256

ஆதாரங்களும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

இவற்றையும் பார்க்க

படத்தொகுப்பு