செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
(செம்பொனார்கோவில் சுவர்ணபுரீஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் திருக்கோயில்
செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் திருக்கோயில் is located in தமிழ் நாடு
செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் திருக்கோயில்
செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் திருக்கோயில்
புவியியல் ஆள்கூற்று:11°06′19″N 79°44′25″E / 11.1053°N 79.7404°E / 11.1053; 79.7404
பெயர்
புராண பெயர்(கள்):இந்திரபுரி, இலக்குமிபுரி
பெயர்:செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:செம்பனார்கோயில்
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சுவர்ணபுரீசுவரர்,
தேவப்பிரியர்,
சுவர்ண லட்சுமீசர்,
செம்பொன் பள்ளியார்[1]
தாயார்:மருவார் குழலி,
புஷ்பாளகி,
தாட்சாயணி,
சுகந்த குந்தளாம்பிகை,
சுகந்தவன நாயகி
தல விருட்சம்:வன்னி, வில்வம்
தீர்த்தம்:சூரிய தீர்த்தம் (திருக்குளம்)
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 42ஆவது சிவத்தலம் ஆகும்.

அமைவிடம்

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து பத்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இறைவன்,இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் சுவர்ணபுரீசுவரர், இறைவி மருவார்குழலி ஆவர்.

அமைப்பு

கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ள மாடக்கோயில். பலிபீடம், நந்தி மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது வலப்புறத்தில் தெற்கு நோக்கிய நிலையில் அம்மன் சன்னதி உள்ளது. மாடக்கோயில் அமைப்புள்ள இக்கோயிலில் பலிபீடம், நந்தி உள்ளன. மண்டபத்தில் சூரியமகா கணபதி, சூரியலிங்கம், சந்திரலிங்கம், சுப்பிரமணியர், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி உள்ளனர். கோஷ்டத்தில் கோஷ்ட கணபதி, தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் சேத்ரகால பைரவர் சன்னதியும், நவக்கிரக சன்னதியும் உள்ளன. அடுத்து பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, சாமுண்டி, வைஷ்ணவி, வராகி, மகேந்திரி, விநாயகர், சாஸ்தா ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் பின்புறம் பிரகாச பிள்ளையார், நால்வர், பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.

வழிபட்டோர்

பிரம்ம தேவர், இந்திரன், குபேரன், வசிட்டர், அகத்தியர் முதலானோர் வழிபட்ட திருத்தலம்.[1]

சிறப்பு

தாட்சாயணிக்கு அருள் கிடைத்ததும் வீரபத்திரர் தோன்றியதும் இத்தலத்தில் எனப்படுகிறது. இத்தலத்தில் இந்திரன் விருத்திராசுரனைக் கொல்ல வச்சிராயுதம் பெற்றான் என்பதும் தொன்நம்பிக்கை.

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 தமிழகச் சிவாலயங்கள் 308; திருமகள் நிலையம்;பக்கம் 123

வெளியிணைப்புகள்

இவற்றையும் பார்க்க