திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
(திருவிளநகர் உச்சிரவனேஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திருவிளநகர் உசிரவனேசுவரர் திருக்கோயில்
பெயர்
பெயர்:திருவிளநகர் உசிரவனேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருவிளநகர்
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:துறைகாட்டும் வள்ளல், உச்சிவனேஸ்வரர், உசிரவனேசுவரர்
தாயார்:வேயுறுதோளியம்மை
தல விருட்சம்:விழல்[1]
தீர்த்தம்:காவிரி, மெய்ஞ் ஞான தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 40ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் வேடுவ வேடத்தில் வந்து சம்பந்தருக்கு ஆற்றைக் கடக்க உதவினார் என்பது தொன்நம்பிக்கை.

இறைவன், இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் உசிரவனேசுவரர்,இறைவி வேயுறுதோளியம்மை.

அமைப்பு

இத்திருக்கோயில் ஞாழற் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி பீடம், நந்தி காணப்படுகின்றன. இடப்புறம் ஆஸ்தான மண்டபம் உள்ளது. அடுத்து உள்ளே செல்லும்போது இடப்புறம் நடராஜர் சன்னதியும், நவக்கிரக சன்னதியும் உள்ளன. மூலவர் சன்னதியில் துறை காட்டும் வள்ளலார் உள்ளார். அவரது சன்னதிக்கு இடப்புறம் வேயுறுதோளியம்மை சன்னதி உள்ளது. மூலவருக்கு முன் பலிபீடம், நந்தி உள்ளது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை உள்ளனர். திருச்சுற்றில் விநாயகர், சோமாஸ்கந்தர், வள்ளி தெய்வானையுட்ன் கூடிய சுப்பிரமணியர், நால்வர், அருணாசலேஸ்வரர், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

குடமுழுக்கு

1929 சூன் 1929 மற்றும் 2 பிப்ரவரி 1959 ஆகிய நாள்களில் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டுகள் உள்ளன. தற்போது (நவம்பர் 2016) கோயிலில் திருப்பணி நடைபெற்று வருகிறது.

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

படத்தொகுப்பு