திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்
தேவாரம், திருவாசகம் பாடல் பெற்ற திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 11°10′31″N 79°48′35″E / 11.1753°N 79.8097°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | ஆதிசிதம்பரம், திருவெண்காடு, சுவேதாரண்ய க்ஷேத்திரம்[1] |
பெயர்: | திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவெண்காடு |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சுவேதாரண்யேஸ்வரர் |
தாயார்: | பிரமவித்யாம்பிகை |
தல விருட்சம்: | வடவால், கொன்றை, வில்வம் |
தீர்த்தம்: | முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்) |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம், திருவாசகம் |
பாடியவர்கள்: | சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கல்வெட்டுகள்: | புராதன தமிழ், கிரந்த மொழிக் கல்வெட்டுகள் [1] |
வரலாறு | |
தொன்மை: | 1000-2000 வருடங்களுக்கு முன் |
அமைத்தவர்: | சோழர்கள் |
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் (Swetharanyeswarar Temple) என்பது சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல்பெற்ற சிவாலயமாகும். இது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல்பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாகக் கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு
பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்கு துன்பம் செய்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து தேவர்களோடு போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவைக் கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம்பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம். தென்னிந்தியாவின் மிகப் புகழ்பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது. நவக்கிரக தலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இவருக்கு திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என்ற பெயர்களும் உண்டு. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.
வால்மீகி ராமாயணத்தில் திருவெண்காடு தலக்குறிப்பு
திருவெண்காடு வடமொழியில் "சுவேதாரண்ய க்ஷேத்திரம்" என்றழைக்கப்படுகின்றது. வால்மீகி ராமாயணத்தில்,
"சபபாத கரோபூமன் தஹ்யமான சராக்னி
நருத்ரேநேவ வினிர்தக்த ஸ்வேதாரண்யே யதாந்தகஹா"
(ஆரண்யகாண்டம் - ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்)
"யமனை ஸ்வேதாரண்ய க்ஷேத்திரத்தில் சுவேதாரண்யேஸ்வரர் வதம் செய்ததைப் போன்று கர, தூஷண அரக்கர்களை ராமபிரான் வதம் செய்தார்." என்று வால்மீகி ராமாயணம் திருவெண்காட்டு இறைவனைக் குறிப்பிடுகின்றது.[1]
அகோரமூர்த்தி
சிவபெருமானின் 64 வடிவங்களில் 43 வது வடிவம் அகோரமூர்த்தி. திருவெண்காட்டில் அகோரமூர்த்தி தரிசனம் சிறப்பு வாய்ந்தது.[1]
ஆதி சிதம்பரம்
சிவபெருமான் 1008 விதமான தாண்டவங்கள் புரிந்த திருத்தலம் என்பதால் ஆதிசிதம்பரம் என்றழைக்கப்படுகின்றது. சிவபெருமான் ஆனந்தத்தாண்டவம் புரிந்த திருத்தலம். 108 சக்தி பீடங்களில் ஒரு தலம். நவகோள்களில் சூரியன், சந்திரன், புதன் வழிபட்ட திருத்தலம்.[1]
சிறப்புகள்
- புதன் பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாகக் கூறப்படும் தலம்.
- சிவபெருமானது ஆனந்தத் தாண்டவத்தின் போது அவரது முக்கண்களிலிருந்தும் சிந்திய நீர்த்துளிகளே அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன.
- படிப்பில் மனம் ஈடுபடாத மாணவ மாணவிகள் இத்திருத்தல புதனைத் தரிசனம் செய்வது பரிகாரமாகக் கூறப்படுகின்றது.[1]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Swetharanyeswarar Temple
என்பதின் ஊடகங்கள் Wikimedia-விலும் உள்ளன.
- வேங்கடம் முதல் குமரி வரை 2/வெண்காடு மேவிய விகிர்தன்
- ஞானசம்பந்தரின் திருவெண்காட்டுப் பதிகத்தின் எளிய விளக்கம்
- விக்கிமேப்பியாவில் அமைவிடம்
- வரலாறு பரணிடப்பட்டது 2011-11-18 at the வந்தவழி இயந்திரம்
- அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், தினமலர்.
- http://www.kamakoti.org/tamil/tirumurai67.htm
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருப்பல்லவனீச்சுரம் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் கீழைத்திருக்காட்டுப் பள்ளி |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 11 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 11 |