திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர் கோயில்
அமைவிடம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பாலுகந்தநாதர், பாலுகந்தீஸ்வரர்[1]
தாயார்:பிருகந்நாயகி, பெரியநாயகி.
தல விருட்சம்:ஆத்தி
தீர்த்தம்:மண்ணியாறு, பால்குளம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்
திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர் கோயில்

அமைவிடம்

கும்பகோணம்-திருப்பனந்தாள் சாலையில் திருப்பனந்தாளுக்குத் தென்மேற்கே 1 1/2 கிமீ தூரத்தில் உள்ளது.

திருஆப்பாடி திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர் கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சண்டேசுவரர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). சண்டிகேசர் மோட்சம் அடைந்த தலம். தற்போது இத்தலம் திருவாய்பாடி என அழைக்கப்படுகிறது. கல்வெட்டில் இத்தல ஈசன் ஆப்பாடி உடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். மிகப்பழமையான கோவில். கம்பீரமான நடராஜர் திருமேனி இங்கு உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 40வது சிவத்தலமாகும்.[2]

இறைவன், இறைவி

இத்தலத்திலுள்ள இறைவன் பாலுகந்தநாதர், இறைவி பெரியநாயகி.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்