திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருக்கழிப்பாலை, காரைமேடு |
பெயர்: | திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருக்கழிப்பாலை |
மாவட்டம்: | கடலூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பால்வண்ணநாதர் |
தாயார்: | வேதநாயகி |
தல விருட்சம்: | வில்வம் |
தீர்த்தம்: | கொள்ளிடம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | அப்பர், சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் |
வரலாறு | |
தொன்மை: | 1000-2000 வருடங்களுக்கு முன் |
அமைத்தவர்: | சோழர்கள் |
திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில் கடலூர் மாவட்டத்தல் உள்ள சிவத்தலமாகும். [1] இக்கோவில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இது 4வது தலம் ஆகும்.
தல வரலாறு
கபில முனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும் போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது. முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு, மணல் லிங்கத்தின்மீது பட்டு லிங்கம் பிளந்து விடுகிறது. வருந்திய முனிவர் பிளவுபட்ட லிங்கத்தை எடுத்துவிட்டு வேறு லிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்த போது, இறைவன் பார்வதி சமேதராக காட்சி தந்து,"முனிவரே! பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த லிங்கம் பிளவு பட்டிருந்தாலும் அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள். காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால்சொறிந்துள்ளது. எனவே இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள்" என்றார் இறைவன். இன்றும் கூட இக்கோயிலின் லிங்கம் வெண்ணிறமாகவே உள்ளது என்பது சிறப்பம்சமாகும்.
தலச் சிறப்பு
- குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது.
- லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் உருவ நிலையில் திருமணக்கோலத்தில் உள்ளனர்.
- கபிலமுனிவர் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் மூலவராக உள்ளது.
- இத்தலத்தில் சிவபெருமான் " பால்வண்ணநாதர் " என்ற திருப்பெயரிலும் உமையாள் " வேதநாயகி " என்ற திருப்பெயரிலும் அருள்கிறார்கள்.
- இவர்களுடன் புதல்வராக விநாயகர் " சித்தி புத்தி உடனுறை கணேசமூர்த்தி " என்ற திருப்பெயரிலும் முருகபெருமான் " வள்ளி தெய்வானை சமேதர் சண்முகநாதர் " திருப்பெயரிலும் அருள்கிறார்கள்.
- அதே போல் சுந்தரேஸ்வரர் உடனுறைய மீனாட்சி மற்றும் கொஞ்சிதபாதேசுவரர் உடனுறைய கோமதி என்ற திருப்பெயரிலும் அருள்கிறார்கள்.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில் - தினமலர் கோவில்கள்
திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருநெல்வாயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருநல்லூர்ப்பெருமணம் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 4 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 4 |