சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற திருச்சேய்ஞலூர் சத்தியகிரீஸ்வரர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | சேய்ஞலூர், திருச்சேய்ஞலூர்[1] |
பெயர்: | திருச்சேய்ஞலூர் சத்தியகிரீஸ்வரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | சேங்கனூர் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சத்தியகிரீஸ்வரர்,சத்தியகிரிநாதர். கிரீஸ்வரர் |
தாயார்: | சகிதேவியம்மை |
தல விருட்சம்: | ஆத்தி |
தீர்த்தம்: | மண்ணியாறு(வேறுபெயர்கள்: சத்திய புஷ்கரிணி,சத்தியநதி, சுப்ரமண்யநதி) |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | மலை மீதமைந்தது. கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயில் |
வரலாறு | |
தொன்மை: | புராதனக் கோயில் |
அமைத்தவர்: | கோச்செங்கட் சோழன் |
திருச்சேய்ஞலூர் சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் சம்பந்தர் பாடல் பெற்ற காவிரி வடகரைச் சிவத்தலமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. முருகப் பெருமான், சிபி சக்கரவர்த்தி, அரிச்சந்திரன் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 41வது தலம் ஆகும்.
தல வரலாறு
இப்போது சேங்கனுர் என்று அழைக்கப்படும் இவ்வூர் வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் யார் பலம் வாய்ந்தவர் என்கிற போட்டியில் ஆதிசேஷன் பிடியில் இருந்த மேரு மலையை வாயு பகவான் தகர்த்தபோது ஒன்பது சிகரங்களாக உடைந்து ஒன்பது கண்டங்களில் விழுந்தது. அதில் கந்தமாதனம் எனும் சிகரம் எழு சிகரங்களாக பாரதத்தில் எழு இடங்களில் விழுந்தன. அதில் சத்தியம் எனும் சிகரம் இவ்வாலயம் உள்ள இடத்தில் விழுந்தது. விழுந்தது மேருமலை என்பதால் இவ்வூர் புனிதம் மிக்கதாக கருதப்படுகிறது. எனவே முனிவர்களும், மகரிஷிகளும் இங்கு விலங்குகளாகவும், பறவைகளாகவும், மரங்களாகவும் இந்த தலத்தை வழிபட்டு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஸ்ரீ சண்டிகேஸ்வரர் அவதரித்த தலம் இதுவாகும். எச்சதத்தன் என்கிற அந்தணருக்கு மகனாகப் பிறந்தவர் விசாரசருமர்(சண்டிகேஸ்வரர்). இவர் மாடுமேய்க்கும் தொழிலை செய்துவந்தார். பசுக்கள் மேய்ச்சலின் போது பால் மிகுதி காரணமாக தானாக பாலை கிழே சொரிய ஆரம்பித்தன. பால் வீணாவதை விரும்பாத விசாரசருமர், அத்தி மரத்தடியில் மணலால் லிங்கம் செய்து பால் அபிசஷேகம் செய்துவந்தார். இதை பார்த்த ஊர்மக்களும், தந்தையும் கண்டித்தும் மீண்டும் மீண்டும் பால் வீணாவதை கண்டித்த தந்தையை பக்தி மயக்கத்தால் செய்வதறியாது அருகில் இருந்த கோலால் அடிக்க தந்தை இறந்தார். விசாரசருமர் முன் தோன்றிய தேவியும், பரமேஸ்வரரும் சிவபூசை தடைபட கூடாது என்பதற்காக ஈன்ற தந்தையை இழந்தாய். இனி யாமே உனக்கு தந்தையாய் இருப்பேன் எனக்கூறி கொன்றை மாலை ஒன்றை அனிவித்து நாம் உண்ட கலமும், உடுப்பனவும், சூடுவனவும் உனக்கே உரித்தானவை. என்னை வழிபட்டவர்கள் உன்னை வழிபட்டால்தான் என்னை வழிபட்ட பலன் கிடைக்கும். ஸ்ரீசண்டிகேசர் என்ற பட்டமும் அளித்தார். சிலகாலம் இங்கு தவம் செய்து இங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள திருவாய்ப்பாடியில் மோட்சம் அடைந்தார். தந்தைக்கு உபதேசம் செய்த முருகன் அங்கு குருவாக இருக்க நேர்ந்ததால் சிவத்துரோக தோஷம் பற்றியது. அது இங்கு நீங்கியதாக கூறுவர். சூரனை அழிப்பதற்கு இங்கு தங்கி ஈசனை வழிபட்டு சர்வசங்காரபடையை பெற்று போருக்கு சென்றார். சேய் என்றால் முருகன் எனவே இவ்வூர் திருசேய்ஞலூர் ஆயிற்று. இங்குள்ள சண்டிகேஸ்வரரின் திருமுடியில் பிறை, ஜடை, குண்டலம், கங்கை ஆகியவற்றை கொண்ட சண்டிகேஸ்வரர் சந்நிதி சிறப்பு வாய்ந்தது. வைணவப் பெரியவராகிய பெரியவாச்சான் பிள்ளை அவதரித்ததலம்.
இறைவன், இறைவி
இங்குள்ள இறைவன் சத்தியகிரீசுவரர் இறைவி சகிதேவியம்மை.
அமைவிடம்
கும்பகோணம்-திருப்பனந்தாள் சாலையில் திருவாய்பாடிக்கு வடமேற்கே 1 1/2 கிமீ தூரத்தில் மண்ணியாற்றின் கரையில் உள்ளது.
சிறப்புகள்
சண்டேசுவர நாயனார் அவதரித்த தலம்.[1] சோழ மன்னர்கள் முடிசூடும் ஐந்து தலங்களில் முதன்மையானதென இத்தலத்தை பெரிய புராணம் கூறும் திருத்தலம்.[2] சேங்கனூரில் சிவலோக நாதர் எனும் மற்றொரு சிவன் கோயிலும் வைணவக் கோயிலும் அமைந்துள்ளது.[1] கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில். சண்டேச நாயனார் அவதரித்த தலம்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 163,164
- ↑ சண்டிகேஸ்வரரின் அவதாரத் தலம், கட்டுரை, மு. வெ. சம்பத் இந்து தமிழ் நாளிதழ் 2021 மே, 20
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருந்துதேவன்குடி கற்கடகேசுவரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 41 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 41 |