தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில்
Jump to navigation
Jump to search
தேவாரம் பாடல் பெற்ற தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில் (திருக்கருப்பறியலூர்) சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 27வது தலம் ஆகும்.
அமைவிடம்
இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது.
இறைவன், இறைவி
இக்கோயிலுள்ள இறைவன் குற்றம் பொறுத்த நாதர், இறைவி கோல்வளைநாயகி.[1] இக்கோயிலில் சட்டநாதருக்கான தனி சன்னதி மலைக்கோயில் என்ற பெயரில் அமைந்துள்ள கோயிலில் காணப்படுகிறது.
சிறப்புகள்
இந்திரன், இறைவன் என்றறியாமல் அவர்மீது வச்சிரம் எறிந்த குற்றத்தைப் பொறுத்தருளியமையால் குற்றம் பொறுத்த நாதர் ஆனார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
மேற்கோள்கள்
- ↑ வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014
இவற்றையும் பார்க்க
திருக்கருப்பறியலூர் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருக்குறுக்கை |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருக்குரக்குக்கா |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 27 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 27 |