கரையபுரம் கரவீரேசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
கரவீரம் கரவீரேசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):கரவீரம்
பெயர்:கரவீரம் கரவீரேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கரையபுரம்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கரவீரேசுவரர்
தாயார்:பிரத்தியட்ச மின்னம்மை
தல விருட்சம்:அலரி
தீர்த்தம்:அனவரத தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

கரையபுரம் கரவீரேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 91ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலோடு இணைந்த தலமாகும். இத்தலத்தில் கௌதமர் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை. பெரிய திருக்கோயில் சிறிய ஊரில் அமைந்திருக்கின்றது.

பெயர்க்காரணம்

கரவீரம் என்ற சொல்லுக்கு பொன் அலரி என்பது பொருள். இத்தலத்தின் தல விருட்சம் அலரி ஆகும்.[1]

மேற்கோள்கள்

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 230

வெளியிணைப்புகள்

இவற்றையும் பார்க்க

படத்தொகுப்பு