முதலாம் திருமுறை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி
சைவத் திருமுறைகள்

சைவ சின்னம்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

திருநாவுக்கரசு நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார்

மாணிக்க வாசகர்

திருமூலர்

11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)

சேக்கிழார்


முதலாம் திருமுறை என்பது பன்னிரு சைவத் திருமுறைகளில் இடம்பெற்றுள்ள முதலாம் தொகுப்பாகும். இவை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடிய தேவாரங்களில் ஒரு பகுதியை உள்ளடக்கியது. இத் திருமுறையில் 136 பதிகங்களில் அடங்கும் 1469 பாடல்கள் உள்ளன. இவற்றுள் சம்பந்தர் மூன்று வயதில் பாடிய முதல் தேவாரமும் அடங்குகின்றது. இத்தேவாரங்கள் தமிழ்நாடு முழுவதிலும் பரந்துள்ள பல்வேறு கோயில்களில் உள்ள சிவபெருமானைக் குறித்துப் பாடப்பட்டவையாகும். முதலாம் திருமுறையிலுள்ள பதிகங்கள் வாயிலாகப் பாடப்பட்ட கோயில்கள் 88 ஆகும். அவ்விடங்களின் பெயர்களையும் அங்குள்ள இறைவன்மீது பாடப்பட்ட பதிகங்களின் எண்ணிக்கைகளையும் கீழே காண்க.

  1. அச்சிறுபாக்கம் -1
  2. அண்ணாமலை -2
  3. அதிகை வீரட்டானம் -1
  4. அம்பர் மாகாளம் -1
  5. அன்பிலாலந்துறை -1
  6. அன்னியூர் -1
  7. ஆப்பனூர் -1
  8. ஆரூர் -2
  9. ஆலங்காடு -1
  10. ஆலவாய் -1
  11. ஆவூர்ப்பசுபதீச்சரம் -1
  12. இடும்பாவனம் -1
  13. இடைச்சுரம் -1
  14. இடைமருதூர் -5
  15. இராமனதீச்சரம் -1
  16. இலம்பையங்கோட்டூர் -1
  17. ஈங்கோய்மலை -1
  18. ஊறல் -1
  19. எருக்கத்தம்புலியூர் -1
  20. ஐயாறு -3
  21. ஓத்தூர் -1
  22. கச்சிஏகம்பம் -1
  23. கடைமுடி -1
  24. கண்ணார்கோயில் -1
  25. கயிலாயம் -1
  26. கரவீரம் -1
  27. கழுக்குன்றம் -1
  28. கள்ளில் -1
  29. கற்குடி -1
  30. காட்டுப்பள்ளி -1
  31. காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரம் -1
  32. காழி (திருப்பிரமபுரம்) -3 (வேணுபுரம் -1, புகலி -3, வெங்குரு -1, தோணிபுரம் -1, சிரபுரம் -2, புறவம் -2, சண்பை -1, சீகாழி -4, கழுமலம் -4)
  33. கானூர் -1
  34. குடந்தைக்காரோணம் -1
  35. குரங்கணில்முட்டம் -1
  36. குற்றாலம் -1
  37. கொடிமாடச்செங்குன்றூர் -1
  38. கொடுங்குன்றம் -1
  39. சிதம்பரம் -1
  40. கோலக்கா -1
  41. கோளிலி -1
  42. சிராப்பள்ளி -1
  43. சிவபுரம் -4
  44. செங்காட்டங்குடி -1
  45. செம்பொன்பள்ளி -1
  46. சேய்ஞ்ஞலூர் -1
  47. சோபுரம் -1
  48. சோற்றுத்துறை -1
  49. தருமபுரம் -1
  50. தூங்கானைமாடம் -1
  51. நல்லம் -1
  52. நல்லூர் -1
  53. நள்ளாறு -2
  54. நறையூர்ச்சித்தீச்சரம் -2
  55. நாகைக்காரோணம் -1
  56. நின்றியூர் -1
  57. நெடுங்களம் -1
  58. நெய்த்தானம் -1
  59. பரங்குன்றம் -1
  60. பராய்த்துறை -1
  61. பருப்பதம் -1
  62. பழனம் -1
  63. பறியலூர் -1
  64. பனையூர் -1
  65. பாச்சிலாச்சிராமம் -1
  66. பாதாளீச்சரம் -1
  67. பாம்புரம் -1
  68. பாற்றுறை -1
  69. புகலூர் -1
  70. புத்தூர் -1
  71. புள்ளமங்கை -1
  72. புன்கூர் -1
  73. பூவணம் -1
  74. பேணு பெருந்துறை -1
  75. மயிலாடுதுறை -1
  76. மருகல் -1
  77. மறைக்காடு -2
  78. மாற்பேறு -2
  79. முதுகுன்றம் -4
  80. வடுகூர் -1
  81. வல்லம் -1
  82. வலிதாயம் -1
  83. வலிவலம் -2
  84. வாழ்கொளிபுத்தூர் -1
  85. வியலூர் -1
  86. வீழிமிழலை -7
  87. வேட்களம் -1
  88. வேற்காடு -1
"https://tamilar.wiki/index.php?title=முதலாம்_திருமுறை&oldid=14205" இருந்து மீள்விக்கப்பட்டது