சேரமான் பெருமான் நாயனார்
Jump to navigation
Jump to search
கழறிற்றறிவார் நாயனார் | |
---|---|
பெயர்: | கழறிற்றறிவார் நாயனார் |
குலம்: | அரசர் |
பூசை நாள்: | ஆடி சுவாதி |
அவதாரத் தலம்: | கொடுங்கோளூர் |
முக்தித் தலம்: | திருவஞ்சைக்களம் |
சேரமான் பெருமாள் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[1]. இவர் சேர நாட்டு மன்னன். மகோதை என்னும் ஊரில் இருந்துகொண்டு கி.பி. 871 ஆண்டுகளைச் சார்ந்து அரசாண்டு வந்தார்[2][3]. பெருமாக்கோதையார் என்ற இயற்பெயரும் கழறிற்றிவார் என்ற சிறப்புப் பெயரும் பெற்ற இவர் 63 நாயன்மார்களில் ஒருவராகச் சேர்க்கப்பட்டபோது சேரமான் பெருமாள் நாயனார் என வழங்கப்பட்டார். இவர் சிவ பூசையின்போது தில்லை நடராசப் பெருமானின் மணியோசையைக் கேட்கும் பேறு பெற்றிருந்தார் என்றும், அதனால் கழறிற்று அறிவார் [4] எனப் போற்றப்பட்டார் என்றும் பெரியபுராணம் என்னும் நூல் குறிப்பிடுகிறது.
அடிக்குறிப்புகள்
- ↑ 63 நாயன்மார்கள், தொகுப்பாசிரியர் (01 மார்ச் 2011). கழறிற்றறிவார் நாயனார். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=1971.
- ↑ செப்பேடு
- ↑ மகான்கள், தொகுப்பாசிரியர் (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=39.
- ↑ சிவபெருமான் கழறியதை அறிவார்
மேற்கோள்கள்
- பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்
வெளி இணைப்புகள்
- கழறிற்றறிவார் நாயனார் புராணம் (பெரிய புராணம்) பரணிடப்பட்டது 2008-12-01 at the வந்தவழி இயந்திரம்