சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

"சித்ததைச் சிவன்பாலே வைத்தார்க்கும் மடியேன்" - திருத்தொண்டத் தொகை.

உத்தமனத்து அறம் பொருள் இன்பமோடு இயல் தெரிந்து
வித்தகானத்து தொருவழிக் கொண்டு விளங்ளச் சென்னி
மத்தம்வைத் திருப்பாதக் கமலமலரடிக் கீழ்ச்
சித்தம் வைத்தாரென்பர் வீடு பேறெய்திய செல்வர்களே - திருத்தோண்டத் திருவந்தாதி.


முதலிய ஐந்தொழில் செய்யும் பிரமன் முதலிய ஐம்பெருங் கடவுளர்களும் இருக்கும் ஐவகை தாமரைப் பீடங்களுடைய பதவிகளைக் கடந்து அட்டாங்க யோகத்துள் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம் என்னும் ஐந்திணையும் பயின்று சித்தத்தை நிறுத்துதலினாலே சிவத்தினிடத்தே நிலைபெற்ற சித்தத்தையுடையவர்கள் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தவர்கள் எனப் போற்றப்படுவர்.[1] இவர்கள் வேத காரணங்களாகிய அம்பலவர் திருவடித் தொண்டின் வழிநின்று அம்முதல்வரை அடைந்தவராவர்.

திருத்தொண்டர் புராணசாரம்
பாரணவும் அந்தக்கரணம் ஒன்றும்
படராமே நடுநாடிபயிலும் நாதம்
காரண பங்கயன் முதலாம் ஐவர் வாழ்வும்
கழியுநெறி வழிபடவும் கருதி மேலைப்
பூரணமெய்ப் பரஞ்சோதி பொலிவு நோக்கி
புணந்தணைந்த சிவானுபோக மேவும்
சீரணவும் அவரன்றே எம்மை ஆளும்
சித்ததைச் சிவன்பாலே வைத்துளாரே

நுண்பொருள்

தொண்டரின் பெருஞ்சீர் சிவயோகத்திற் பொருந்தி சிவசிந்தனையினாராயிருத்தல்.

காரண பங்கயம் ஐந்தின் கடவுளர்தம் பதம் கடந்து
பூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்திலங்கு நாதாந்தத்
தாரணையால் சிவத்தடைந்த சிவத்தார் தனி மன்றுள்
ஆரண காரணக் கூத்தர் அடித்தொண்டின் வழியடைந்தார் - பெரியபுராணம்

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்