இயமம்
Jump to navigation
Jump to search
இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
இந்து சமயம் |
---|
இயமம் மற்றும் அதையொத்த இன்னொரு வகைப்பாடான நியமம் ஆகியன, அறம்சார்ந்த வாழ்க்கைக்காக சைவநெறியும் யோகநெறியும் முன்வைக்கும் முக்கியமான கடமைகள் ஆகும். இயமமும் நியமமும் திருமூலர் குறிப்பிடும் எட்டு வகை யோகங்களில் இரண்டு ஆகும்.
சாண்டிலிய மற்றும் வராக உபநிடதங்களும், திருமூலரின் திருமந்திரத்திலும் பத்து இயமங்களும், பதஞ்சலி முனிவரின் "யோகசூத்திரம்" நூல், ஐந்து இயமங்களையும் முன்வைக்கின்றன.[1][2]
ஐந்து இயமங்கள்
பதஞ்சலி முனிவர், தன் யோக சூத்திரம் 2.30 இல் குறிப்பிடும் இயமங்கள்[3]
- கொல்லாமை (अहिंसा): அகிம்சை, பிறவுயிர்களைத் துன்புறுத்தாமை.[4]
- வாய்மை (सत्य): சத்யம், உண்மையைக் கடைப்பிடித்தல்[4][5]
- கள்ளாமை (अस्तेय): அஸ்தேய களவு செய்யாமை[4]
- காமம் கடத்தல் (ब्रह्मचर्य): பிரம்மச்சர்யம், துணைக்கு துரோகம் இழைக்காமை[5]
- அவாவறுத்தல் (अपरिग्रहः): பேராசையை அடக்குதல்[4] தனக்கு மட்டும் சொந்தம் கொண்டாடாமை[5]
பத்து இயமங்கள்
சாண்டிலிய உபநிடதம்[6] மற்றும் சுவாத்மாராமம் எனும் நூல்[7][8][9] ஆகியன வருவனவாற்றைப் பத்து இயமங்கள் என்கின்றன:
- கொல்லாமை (अहिंसा): அகிம்சை
- வாய்மை (सत्य): சத்யம்
- கள்ளாமை (अस्तेय): அஸ்தேயம்
- புலனடக்கம் (ब्रह्मचर्य): பிரம்மச்சர்யம்
- பொறையுடைமை (क्षमा): க்ஷமை - மன்னிக்கும் தன்மை[10]
- வெஃகாமை (अपरिग्रहः): பேராசையை அடக்குதல்[4] தனக்கு மட்டும் சொந்தம் கொண்டாடாமை[5]
- வஞ்சனையின்மை (धृति): த்ருதி - திடமான மனது
- இரக்கம் (दया): கருணை[10]
- நேர்மை (आर्जव): (ஆர்ஜவம்) - பாசாங்கு இல்லாமை[11]
- அளவுணவு (मितहार): மிதாகாரம் - போதுமான உணவு
- தூய்மை (शौच): சௌச்சம், புனிதம் பேணல்.
இயமங்களின் வேறுபட்ட எண்ணிக்கை
அறுபதுக்கும் மேலான இந்து மெய்ஞ்ஞானப் பழநூல்கள், இயமம் பற்றி விவாதிக்கின்றன.[12] எனினும் பொதுவாக, இயமங்கள் பத்து என்றே வரையறுக்கப்பட்டிருக்கின்றன.[12]
மேலும் பார்க்க
அடிக்குறிப்புகள்
- ↑ Ramaswami, Sŕivatsa (2001). Yoga for the three stages of life. Inner Traditions / Bear & Company. பக். 229. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-89281-820-4. http://books.google.co.in/books?id=sUzBl2k7Z98C.
- ↑ Devanand, G. K.. Teaching of Yoga. APH Publishing. பக். 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131301722. http://books.google.co.in/books?id=L3mBLHWxgPsC. "கடயோகப் பிரதீபிகை முதலான நூல்கள் பத்து இயமங்களைக் குறிப்பிடும்போதும், பதஞ்சலி முனிவர் ஐந்தைந்து இயம-நியமங்களைக் குறிப்பிடுகின்றார்."
- ↑ Āgāśe, K. S. (1904). Pātañjalayogasūtrāṇi. Puṇe: Ānandāśrama. பக். 102. https://archive.org/stream/patanjaliyoga/yoga_sutras_three_commentaries#page/n111/mode/2up.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 James Lochtefeld, "Yama (2)", The Illustrated Encyclopedia of Hinduism, Vol. 2: N–Z, Rosen Publishing. ISBN 9780823931798, page 777
- ↑ 5.0 5.1 5.2 5.3 Arti Dhand (2002), The dharma of ethics, the ethics of dharma: Quizzing the ideals of Hinduism, Journal of Religious Ethics, 30(3), pages 347-372
- ↑ KN Aiyar (1914), Thirty Minor Upanishads, Kessinger Publishing, ISBN 978-1164026419, Chapter 22, pages 173-176
- ↑ Svātmārāma; Pancham Sinh (1997). The Hatha Yoga Pradipika (5 ). Forgotten Books. பக். 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-60506-637-0. http://books.google.co.in/books?id=9sBFttVx6ukC. "அத யம-ந்யம: அஹின்ஸா சத்யாமாஸ்தேயம் ப்ரஹ்யசார்யமா க்ஷமா த்ரிதி: தயார்ஜவம் மிதாஹார: சௌச்சமா சைவ யம தச 17"
- ↑ Lorenzen, David (1972). The Kāpālikas and Kālāmukhas. University of California Press. பக். 186–190. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-01842-6. https://archive.org/details/kapalikaskalamuk0000lore.
- ↑ Subramuniya (2003). Merging with Śiva: Hinduism's contemporary metaphysics. Himalayan Academy Publications. பக். 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-945497-99-8. http://books.google.co.in/books?id=JupkNVxfwHgC. பார்த்த நாள்: 6 April 2009.
- ↑ 10.0 10.1 Stuart Sovatsky (1998), Words from the Soul: Time East/West Spirituality and Psychotherapeutic Narrative, State University of New York, ISBN 978-0791439494, page 21
- ↑ J Sinha, வார்ப்புரு:Google books, Volume 2, Motilal Banarsidas, வார்ப்புரு:Oclc, page 142
- ↑ 12.0 12.1 SV Bharti (2001), Yoga Sutras of Patanjali: With the Exposition of Vyasa, Motilal Banarsidas, ISBN 978-8120818255, Appendix I, pages 672-680