பரிபாடல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

பரிபாடல் சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

பரிபாடல் இலக்கணம்

  • தொல்காப்பியம் பரிபாடலுக்கு இலக்கணம் கூறுகிறது. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நான்கு வகைப்பாவில் இது பரிபாடல் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவை நான்கினுக்கும் பொதுவாய் அமைந்த யாப்பினை உடையது பரிபாடல் என அது குறிப்பிடுகிறது.[1]
  • நான்கு பாவின் உறுப்புகளும் கொண்ட பாடல்.[2]
  • வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவி வந்து துள்ளலோசைப்படச் சொல்லப்படும்.[3]
  • வெண்பா உறுப்பாகப் பரிபாடல் வரும்.[4]
  • கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து ஆகிய நான்கு உறுப்புக்களையும் கொண்டிருக்கும். காமப் பொருளில் வரும்.[5]
  • சொற்சீர் அடியும், முடுகியல் அடியம் கொள்வது உண்டு.[6]
  • 25 முதல் 400 வரை அடிகள் கொண்டிருக்கும்.[7]
  • பரி(குதிரை) போல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூல் 'பரிபாடல்' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.[8][9][10]
  • இந்நுால் 'பாிபாட்டு' எனவும் வழங்கப்படும்.[11]

பரிபாடல் நூல் தொகுப்பு

பரிபாடலில் அமைந்த பாடல்களின் தொகுப்பை,

திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்

தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப

செய்யபரி பாடற் றிறம்.

மேற்கண்ட வெண்பாவின் துணைகொண்டு அறியலாகும்.

வெண்பாவின் விளக்கம்:

பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல்கள், செவ்வேளுக்கு (முருகனுக்கு) 31 பாடல்கள், காடுகாள் (காட்டில் இருக்கும் காளிக்கு அதாவது கொற்றவைக்கு) 1 பாடல், படிப்பதற்கு இனிமையுள்ள வையைக்கு 26 பாடல்கள், பெருநகரமாகிய மதுரைக்கு 4 பாடல்கள் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன. (ஆனால் இவை முழுமையாகக் கிடைக்கவில்லை.)

ஆனால் இன்று, திருமாலுக்கு 6 பாடல்கள், முருகனுக்கு 8 பாடல்கள், வையைக்கு 8 பாடல்கள் என 22 பாடல்களே உள்ளன.[12]

பதிப்பு வரலாறு

சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் பரிமேலழகர் உரையுடன் 1918-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும்வெளியிட்டுள்ளனர்."[13]

வெளியிணைப்புகள்

அடிக்குறிப்பு

  1. 'பரிபாடல்லே தொகை நிலை வகையின்,
    "இது பா" என்னும் இயல் நெறி இன்றி,
    பொதுவாய் நிற்றற்கும் உரித்து' என மொழிப. (தொல்காப்பியம் பொருளதிகாரம் 425 செய்யுளியல்)
  2. உரையாசிரியர் இளம்பூரணர் விளக்கம்
  3. பேராசிரியர் விளக்கம்
  4. நெடுவெண்பாட்டே, குறுவெண்பாட்டே,
    கைக்கிளை, பரிபாட்டு, அங்கதச் செய்யுளொடு,
    ஒத்தவை எல்லாம் வெண்பா யாப்பின. (தொல்காப்பியம் பொருளதிகாரம் 423 செய்யுளியல்)
  5. கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்தொடு,
    செப்பிய நான்கும் தனக்கு உறுப்பு ஆக,
    காமம் கண்ணிய நிலைமைத்து ஆகும். (தொல்காப்பியம் பொருளதிகாரம் 426 செய்யுளியல்)
  6. சொற்சீர் அடியும் முடுகியல் அடியும்
    அப் பா நிலைமைக்கு உரிய ஆகும். (தொல்காப்பியம் பொருளதிகாரம் 427 செய்யுளியல்)
  7. பரிபாடல்லே,
    நால்-ஈரைம்பது உயர்பு அடி ஆக,
    ஐ-ஐந்து ஆகும், இழிபு அடிக்கு எல்லை. (தொல்காப்பியம் பொருளதிகாரம் 464 செய்யுளியல்)
  8. "பாய் பரிப் புரவி' (மதுரைக்காஞ்சி 689)
  9. துள்ளி நடப்பது கலிப்பா, தவ்வி நடப்பது பரிபாடல்.
  10. முனைவர் பாண்டியன்
  11. மது.ச. விமலானந்தம் (2020). தமிழ் இலக்கிய வரலாறு. தி-நகர், சென்னை.: முல்லை நிலையம். p. பக்க எண். 45. {{cite book}}: Unknown parameter |மொழி-= ignored (help)
  12. மது.ச. விமலானந்தம் (2020). தமிழ் இலக்கிய வரலாறு. தி-நகர், சென்னை.: முல்லை நிலையம். p. பக்க எண். 45. {{cite book}}: Unknown parameter |மொழி-= ignored (help)
  13. சங்க இலக்கியப் பதிப்புரைகள்.பாரதி புத்தகாலயம், பக்கம் 192
"https://tamilar.wiki/index.php?title=பரிபாடல்&oldid=9828" இருந்து மீள்விக்கப்பட்டது