திணைமாலை நூற்றைம்பது
Jump to navigation
Jump to search
திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இஃது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல். கணிமேதாவியார் என்பவர் இதனை இயற்றினார். இன்னொரு பதினெண்கீழ்க்கணக்கு நூலான ஏலாதியும் இவர் இயற்றியதே.
இந்நூல் ஐந்து நிலத்திணைகளினது பின்னணியில் இயற்றப்பட்டுள்ளது. இது பின்வரும் முறையில் வகுக்கப்பட்டுள்ளன.
1 | குறிஞ்சி | 1 | தொடக்கம் | 31 | வரை | 31 | பாடல்கள் |
2 | நெய்தல் | 32 | தொடக்கம் | 62 | வரை | 31 | பாடல்கள் |
3 | பாலை | 63 | தொடக்கம் | 92 | வரை | 30 | பாடல்கள் |
4 | முல்லை | 93 | தொடக்கம் | 123 | வரை | 31 | பாடல்கள் |
5 | மருதம் | 124 | தொடக்கம் | 153 | வரை | 30 | பாடல்கள் |
எடுத்துக்காட்டு
- பாலையாழ்ப் பாண்மகனே! பண்டுநின் நாயகற்கு
- மாலையாழ் ஓதி வருடாயோ? - காலையாழ்
- செய்யும் இடமறியாய் சேர்ந்தாநின் பொய்ம்மொழிக்கு
- நையும் இடமறிந்து நாடு.