பொய்யடிமையில்லாத புலவர்
Jump to navigation
Jump to search
"பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்" -திருத்தொண்டத் தொகை.
மதுரைத் திருவாலவாயில் நிலைபெற்ற தமிழ்சங்கத்திலிருந்து திருவாலவாயரன் சேவடிக்கே பொருளமைத்து அகப்பொருட் செய்யுட்களைப் பாடிய சங்கப் புலவர்களாகிய கபிலர், பரணர், நக்கீரர் முதலிய 49 புலவர்களும் அவர்களைப் போன்று பொய்ப்பொருட்களுக்கு அடிப்படாது மெய்ப்பொருளாகிய இறைவனுக்கே அடித்தொண்டு செய்யும் இயல்புடைய புலவர்கள் பலரும் பொய்யடிமை இல்லாத புலவர்கள் எனப் போற்றப்பெறுவர்.
நுண் பொருள்
தம் நுண்மான் நுழைபுலத்தால் மெய்ப்பொருட்காட்சி பெற்ற திறவோர் நாக்கொண்டு மானிடம்பானது தாம்கண்ட மெய்ப்பொருட்காட்சியையே பாடுவர் பதினோராம் திருமுறையிலுள்ள அருட்பாக்கள் சிலவற்றை பாடிய கபிலர், பரணர், நக்கீரர் ஆதிய சான்றோர்கள் அத்தகையர்.
உசாத்துணைகள்
- பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்