வேணாட்டடிகள்
Jump to navigation
Jump to search
வேணாட்டடிகள் பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருவிசைப்பா பாடிய அருளாளர்களில் ஒருவராவார்.
வேணாடு
வேணாடு என்பது தென் திருவாங்கூர்ப் பகுதிக்குரிய பழம்பெயர் ஆகும். வேணாடு, சேர நாட்டிற்கும் தென் பாண்டி நாட்டிற்கும் நடுவே உள்ளது.[1]
வழிபாடு
இந்நிலப்பகுதியை ஆண்ட அரசர் குடும்பத்தில் பிறந்து இறைவனை தமிழால் பாடிப் போற்றிய குறுநில மன்னரே வேணாட்டடிகள். இவர் சிவபெருமானிடத்துக் கொண்ட அளவற்ற பக்திப் பெருக்கால் பல சிவத்தலங்களுக்கும் சென்று சிவபெருமானைப் பாடி வழிபட்டார்.
ஒரு பதிகம்
இவர் பாடிய திருவிசைப்பாப் பதிகம் ஒன்றே உள்ளது. அப்பதிகம் (கோயில்) சிதம்பரத்தில் எழுந்தருளிய இறைவன் மீது பாடப்பட்டதாகும்.[1]