அதிராவடிகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அதிராவடிகள் (அதிரா அடிகள்) என்னும் புலவர் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

இவர் இயற்றிய மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

இவரது தமிழ்நடை சங்கப்பாடல் நடைபோல் காணப்படுகிறது.
எனினும் வடசொற்கள் மருவி வருகின்றன.

ஆனைமுகன் பற்றிய கற்பனைக் கதைகள் தழுவப்பட்டுள்ளன.

இளம்பெருமான் அடிகள் இவர் வாழ்ந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
என்றாலும் அவரது கைக்கிளைத் திணைப் பொருள் பாணி அதிராவடிகள் பாடல்களில் காணப்படவில்லை.
எனவே இவரை ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனினும் பொருந்தும்.

காலம் கணித்த கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
"https://tamilar.wiki/index.php?title=அதிராவடிகள்&oldid=14267" இருந்து மீள்விக்கப்பட்டது