கைக்கிளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கை என்னும் சொல் கைகோள் என்னும்போது ஒழுக்கத்தை உணர்த்துகிறது. கிளை என்னும் சொல் கிளைஞர் என்னும்போது கால்வழிக் கால்வழியாகக் கிளைத்துக்கொண்டே செல்லும் உறவுமுறையை உணர்த்துகிறது. விளையாடுவோர் 'அந்தக் கையில் நின்று ஆடு' என்னும்போது 'அந்தப் பக்கம்' என்று பொருள்படுவதைக் காணலாம். நம் உடலில் உள்ள உறுப்புக்கூட ஒரு 'பக்க-உறுப்பு'தானே! இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கையில் 'கை' என்னும் சொல் ஒருபக்க இருப்பை உணர்த்துவது தெளிவாகும்.

எனவே 'கைக்கிளை' என்பது ஒருபக்க உறவு. இதனை இலக்கண உரையாசிரியர்கள் ஒருதலைக் காமம் எனக் குறிப்பிடுகின்றனர்.

__DISAMBIG__

__DISAMBIG__

"https://tamilar.wiki/index.php?title=கைக்கிளை&oldid=13299" இருந்து மீள்விக்கப்பட்டது