இராஜேந்திர பட்டினம் சுவேதாரண்யேசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
எருக்கத்தம்புலியூர் சுவேதாரண்யேஸ்வரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):எருக்கத்தம்புலியூர், குமரேசபட்டினம், திருவெருக்கத்தம்புலியூர்
பெயர்:எருக்கத்தம்புலியூர் சுவேதாரண்யேஸ்வரர் கோயில்
அமைவிடம்
ஊர்:இராஜேந்திரபட்டினம் (இராசேந்திர பட்டணம்)
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர், நீலகண்டேசுவரர், சுவேதார்க்கவனேசுவரர், திருக்குமரேசர்)
தாயார்:வீறாமுலையம்மன் (அபின்னகுசநாயகி, நீலமலர்க்கண்ணி, நீலோற்பலாம்பாள், அபீதகுஜநாயகி)
தல விருட்சம்:வெள்ளெருக்கு
தீர்த்தம்:கந்தம், செங்கழுநீர், நீலோத்பவம், சுவேதம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்

சுவேதாரண்யேஸ்வரர் கோயில் என்பது சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கோயிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். [1]

அமைவிடம்

இச்சிவாலயம் இந்தியாவின், தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்திலுள்ள இராஜேந்திரபட்டினம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரானது எருக்கத்தம்புலியூர், குமரேசபட்டினம், திருவெருக்கத்தம்புலியூர் என்றும் புராணக் காலத்தில் அறியப்பட்டுள்ளது. இச்சிவாலயத்தில் கந்தம், செங்கழுநீர், நீலோத்பவம், சுவேதம் என நான்கு தீர்த்தங்கள் உள்ளன. இத்தலத்தின் தலமரமாக வெள்ளெருக்கு அறியப்படுகிறது.

கோயில் வரலாறு

வியாக்ரபாதர் வேடன் புலிக்கால் முனிவராக வழிபட்ட தலம்.[2] முருகக்கடவுள் உருத்திரசன்மராகத் தோன்றி வழிபட்டதால் குமரேசம் என்றும் தேவகணங்கள் வழிபட்டதால் கணேசுரம் என்றும் பெயர் பெற்ற தலம்[3]

கோயில் அமைப்பு

வைணவத் திருத்தலமான ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி இத்தலத்தின் அருகிலுள்ளது.[3]

கோயில் சிறப்பு

நைமிசாரண்ய முனிவர்கள் வெள்ளெருக்கு மரங்களாக இத்தலத்தில் உரு எடுத்தனர். திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அவதாரத்தலம்.[3]

மேற்கோள்கள்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-03-18. பார்க்கப்பட்ட நாள் 2014-08-09.
  3. 3.0 3.1 3.2 தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 82,83

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்