திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோயில்

திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயமாகும். இக் கோவில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், ஆதிசங்கரர், குகை நமச்சிவாயர், ராமலிங்க அடிகள் ஆகியோரால் பாடல்பெற்றது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.

திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருநெல்வாயில் அரத்துறை, நெல்வாயில் அருத்துறை
அமைவிடம்
ஊர்:திருவட்டத்துறை
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:தீர்த்தபுரீஸ்வரர், ஆனந்தீஸ்வரர்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்

அமைவிடம்

இவ்வூர் திருநெல்வாயில் அரத்துறை என்றும், திருவரத்துறை என்றும், திருவட்டுறை என்றும் அழைக்கப்படுகிறது. கோயிலானது தொழுதூர் விருத்தாச்சலம் பேருந்து சாலையில் தொழுதூரிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [1]

இறைவன், இறைவி

இங்குள்ள இறைவன் ஆனந்தீசுவரர் என்றும் தீர்த்த புரீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி என்று அழைக்கப்படுகிறார். [1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009


இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:நடுநாட்டுத்தலங்கள்