நவம்பர் 14
Jump to navigation
Jump to search
| << | நவம்பர் | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
| MMXXVI | ||||||
நவம்பர் 14 (November 14) கிரிகோரியன் ஆண்டின் 318 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 319 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 47 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1579 – "கிறித்தவ சமயப் போதனை" என்ற நூல் போர்த்துக்கீசிய யூதர் என்றிக்கே என்றிக்கசினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
- 1708 – கொழும்பு மதப்பள்ளி ஒல்லாந்தரினால் ஆரம்பிக்கப்பட்டது.[1]
- 1751 – இரண்டாம் கர்நாடகப் போர்: பிரித்தானியா-பிரான்சுக்கிடையில் ஆற்காடு சண்டை முடிவுக்கு வந்தது.
- 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்டைக் கைப்பற்றும் இராணுவத் தளபதி அம்புரோசு பர்ன்சைடின் யோசனையை அங்கீகரித்தார்.
- 1886 – பிரீட்ரிக் சொன்னெக்கென் என்பவர் முதல்தடவையாக காகித துளை கருவியை வடிவமைத்தார்.
- 1889 – நெல்லி பிளை என்ற பெண் ஊடகவியலாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது திட்டத்தை 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்.
- 1918 – செக்கோசிலோவாக்கியா குடியரசாகியது.
- 1922 – பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: இங்கிலாந்தில் கவெண்ட்ரி நகரம் செருமனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதமடைந்தது. கவெண்ட்ரி தேவாலயம் முற்றாக அழிந்தது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: வானூர்தி தாங்கிக் கப்பல் ஆர்க் ரோயல் மூழ்கியது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: பெலருசில் செருமனியப் படையினர் பர்பரோசா நடவடிக்கையில் ஈடுபட்டு ஒரே நாளில் 9,000 யூதர்களைக் கொன்றனர்.
- 1943 – இந்திய-இலங்கை விரைவுத் தொடருந்து சென்னையில் இருந்து 100 மைல் தூரத்தில் சேந்தனூர் என்ற இடத்தில் தடம் புரண்டதில் 30 பேர் வரை உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.[2]
- 1963 – ஐசுலாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்சி என்னும் தீவு வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது.
- 1965 – வியட்நாம் போர்: லா ட்ராங் என்ற இடத்தில் அமெரிக்கப் படைகளுக்கும் வடக்கு வியட்நாம் படைகளுக்கும் இடையில் பெரும் போர் வெடித்தது.
- 1967 – அமெரிக்க இயற்பியலாளர் தியோடோர் மைமான் உலகின் முதலாவது லேசருக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
- 1969 – அப்பல்லோ திட்டம்: நாசாவின் அப்பல்லோ 12 விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது.
- 1970 – சோவியத் ஒன்றியம் பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பில் இணைந்தது.
- 1970 – மேற்கு வர்ஜீனியாவில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் மார்சல் பல்கலைக்கழக காற்பந்தாட்ட அணியினர் உட்பட 75 பேர் உயிரிழந்தனர்.
- 1971 – மரைனர் 9 செவ்வாய் கோளை சென்றடைந்தது. இதுவே பூமியில் இருந்து வேறொரு கோளின் செயற்கைச் செய்மதியாகச் செயற்பட்ட முதலாவது விண்கலமாகும்.
- 1973 – கிரேக்க இராணுவ ஆட்சிக்கு (1667-74) எதிரான பெரும் ஆர்ப்பாட்டம் கிரேக்கத்தில் ஆரம்பமானது.
- 1975 – மேற்கு சகாராவை விட்டு எசுப்பானியா விலகியது.
- 1978 – பிரான்சு ஆப்ரோடைட்டு என்ற அணுவாயுத சோதனையை நிகழ்த்தியது.
- 1982 – போலந்தின் சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா 11 மாதங்கள் சிறையில் இருந்த பின்னர் விடுவிக்கப்பட்டார்.
- 1990 – கிழக்கு செருமனி மற்றும் மேற்கு செருமனிகளின் இணைப்பிற்குப் பின்னர் போலந்துக்கும் செருமனிக்கும் இடையிலான எல்லைகள் வரையறுக்கப்பட்டன.
- 1991 – நாடு கடந்த நிலையில் வாழ்ந்த கம்போடியாவின் இளவரசர் நொரடோம் சீயனூக் 13 ஆண்டுகளின் பின்னர் நோம் பென் திரும்பினார்.
- 1996 – தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
- 2001 – ஆப்கானித்தானின் தலைநகர் காபூலை ஆப்கான் வடக்குக் கூட்டணிப் படைகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.
- 2003 – 90377 செட்னா என்ற திரான்சு-நெப்டியூனிய வான்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
- 2016 – நியூசிலாந்தில் கைக்கோரா என்ற இடத்தில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்தனர்.
- 2024 – இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2024: அரசுத்தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் இடதுசாரி தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது.[3]
பிறப்புகள்
- 1650 – மூன்றாம் வில்லியம், இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து மன்னர் (இ. 1702)
- 1765 – ராபர்ட் ஃபுல்டன், நீராவிக் கப்பலைக் கண்டுபிடித்த அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1815)
- 1840 – கிளாடு மோனெ, பிரான்சிய ஓவியர் (இ. 1926)
- 1889 – ஜவகர்லால் நேரு, இந்தியாவின் 1வது பிரதமர் (இ. 1964)
- 1891 – பீர்பால் சகானி, இந்திய தாவரவியலாளர் (இ. 1949)
- 1907 – ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென், சுவீடிய எழுத்தாளர் (இ. 2002)
- 1917 – பார்க் சுங்-கீ, தென்கொரியாவின் 3-வது அரசுத்தலைவர் (இ. 1979)
- 1922 – தி. கோ. சீனிவாசன், தமிழக எழுத்தாளர், இதழாசிரியர், அரசியல்வாதி (இ. 1989)
- 1922 – புத்துருசு புத்துருசு காலீ, ஐநாவின் 6வது பொதுச் செயலர் (இ. 2016)
- 1924 – பாறப்புறத்து, மலையாள சிறுகதை, புதின எழுத்தாளர் (இ. 1981)
- 1926 – பிலு மோடி, இந்திய அரசியல்வாதி (இ. 1983)
- 1930 – எட்வேர்ட் வைட், அமெரிக்க விண்வெளி வீரர் (இ. 1967)
- 1931 – இரா. பெருமாள் ராசு, இந்தியக் கவிஞர்
- 1942 – இந்திரா கோஸ்வாமி, அசாமிய எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், கவிஞர் (இ. 2011)
- 1946 – பரதன், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 1998)
- 1947 – பி. ஜெ. ஓரூக், அமெரிக்க ஊடகவியலாளர்
- 1948 – சார்லசு, வேல்சு இளவரசர்
- 1954 – காண்டலீசா ரைஸ், அமெரிக்க அரசியல்வாதி
- 1957 – ஆர். பார்த்திபன், தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர்
- 1971 – அடம் கில்கிறிஸ்ற், ஆத்திரேலியத் துடுப்பாளர்
- 1984 – மம்தா மோகன்தாஸ், இந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
- 565 – முதலாம் ஜஸ்டினியன், பைசாந்தியப் பேரரசர் (பி. 482)
- 683 – முதலாம் யசீத், உமையா கலீபா (பி. 647)
- 1263 – அலெக்சாந்தர் நெவ்ஸ்கி, உருசியப் புனிதர் (பி. 1221)
- 1682 – ரைக்லாவ் வொன் கூன்சு, ஒல்லாந்தக் கிழக்கிந்தியப் பகுதி ஆளுநர் (பி. 1619)
- 1916 – சாகி, பிரித்தானிய சிறுகதை எழுத்தாளர் (பி. 1870)
- 1920 – சுபோத் சந்திர மல்லிக், இந்தியத் தொழிலதிபர், பல்லூடகவாதி (பி. 1879)
- 1716 – கோட்பிரீட் லைப்னிட்ஸ், செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1646)
- 1831 – எகல், செருமானிய மெய்யியலாளர் (பி. 1770)
- 1916 – சாகி, பிரித்தானிய சிறுகதை எழுத்தாளர் (பி. 1870)
- 1938 – ஆன்சு கிறிட்டியன் கிராம், தென்மார்க்கு நுண்ணுயிரியியலாளர் (பி. 1853)
- 1938 – மகாத்மா அன்சுராசு, ஆரிய சமாசத் தலைவர், கல்வியாளர் (பி. 1864)
- 1977 – பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா, கிருஷ்ண பக்திக் கழக நிறுவனர் (பி. 1896)
- 1987 – ஏ. எல். அப்துல் மஜீத், கிழக்கிலங்கை அரசியல்வாதி (பி. 1933)
- 2013 – ஓம் முத்துமாரி, தமிழகக் கிராமியக் கூத்துக்கலைஞர்
- 2015 – கே. எஸ். கோபாலகிருஷ்ணன், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1929)
- 2025 – வி. சேகர், தமிழகத் திரைப்பட இயக்குநர் (பி. 1951)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ "Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
- ↑ "Principal Ceylon Events, 1943". Ferguson's Ceylon Directory, Colombo. 1944.
- ↑ "Sri Lankan president's coalition wins big majority in general election". Reuters. 15 November 2024. Archived from the original on November 21, 2024. Retrieved 15 November 2024.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "நவம்பர் 14 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்