1942
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1942 (MCMXLII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.[1][2][3]
நிகழ்வுகள்
- ஜனவரி 1 - ஐ.நா சபை உருவாக உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் மற்றும் இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் ஆகியோர் ஆவர்.
- ஜனவரி 2 - மணிலா ஜப்பானியரினால் கைப்பற்றப்பட்டது.
- ஜனவரி 11 - கோலாலம்பூர் ஜப்பானியரினால் கைப்பற்றப்பட்டது.
- ஜனவரி 19 - ஜப்பானியர் பர்மாவினுள் நுழைந்தனர்.
- ஜனவரி 25 - தாய்லாந்து ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவித்தது.
- பெப்ரவரி 15 - சிங்கப்பூர் யப்பானியரிடம் சரணடைந்தது.
- பெப்ரவரி 19 - 242 ஜப்பானிய போர் விமானங்கள் அவுஸ்திரேலியா டார்வின் நகரைத் தாக்கின.
- ஏப்ரல் 5 - ஜப்பானியக் கடற்படையினர் இலங்கையின் கொழும்பு நகரைத் தாக்கினர். தீவின் தென்மேற்கில் இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் (HMS Cornwall, HMS Dorsetshire) மூழ்கடிக்கப்பட்டன.
- ஏப்ரல் 9 - ஜப்பானியக் கடற்படையினர் இலங்கையின் திருகோணமலை நகரைத் தாக்கினர். பிரித்தானியக் கப்பல் (HMS Hermes), அவுஸ்திரேலியக் கப்பல் (HMAS Vampire) கிழக்குக் கரையில் மூழ்கடிக்கப்பட்டன.
- மே 5 - பிரித்தானியப் படையினர் மடகஸ்காரைத் தாக்கினர்.
- ஆகஸ்ட் 9 - மகாத்மா காந்தி பம்பாயில் கைது செய்யப்பட்டார்.
- அக்டோபர் 16 - பம்பாயில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில் 40,000 பேர் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 29 - கல்கத்தாவை ஜப்பான் தாக்கியது.
பிறப்புகள்
- சனவரி 8 - ஸ்டீபன் ஹோக்கிங், பிரித்தானிய இயற்பியலாளர்
- சனவரி 8 - ஜூனிசிரோ கொய்சுமி, சப்பானின் 56வது பிரதமர்
- சனவரி 17 - முகம்மது அலி, அமெரிக்க குத்துச்சண்டை வீரர்
- சனவரி 25 - எய்சேபியோ, மொசாம்பிக் போர்த்துக்கீச காற்பந்தாட்ட வீரர்
- மார்ச் 21 - அலி அப்துல்லாஹ் சாலிஹ், யெமன் முன்னாள் அரசுத்தலைவர்
- மார்ச் 28 - டானியல் டெனற், அமெரிக்க மெய்யியலாளர்
- ஏப்ரல் 12 - யாக்கோபு சூமா, தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர்
- மே 29 - மாதுலுவாவே சோபித்த தேரர், இலங்கைப் பௌத்த பிக்கு, மனித உரிமை செயற்பாட்டளர் (இ. 2015)
- சூன் 2 - டென்மார்க் சண், ஈழத்து திரைப்பட இசையமைப்பாளர்.
- சூன் 12 - பேர்ற் சக்மன், மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர்
- சூன் 17 - முகம்மது அல்-பராதிய், அமைதிக்கான நோபல் பரிசு எகிப்தியர்
- சூன் 18 - தாபோ உம்பெக்கி, தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர்
- சூலை 13 - ஹாரிசன் போர்ட், அமெரிக்க நடிகர்
- ஆகஸ்டு 17 - ரோஷன் சேத், பிரித்தானிய நடிகர்
- செப்டம்பர் 15 - வென் ஜியாபாவோ, சீனப் பிரதமர்
- அக்டோபர் 11 - அமிதாப் பச்சன், இந்திய நடிகர்
- அக்டோபர் 23 - மைக்கேல் கிரைட்டன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2008)
- நவம்பர் 27 - ஜிமி ஹென்றிக்ஸ், அமெரிக்க கித்தார் கலைஞர் (இ. 1970)
- டிசம்பர் 17 - முகம்மது புகாரி , நைஜீரிய அரசுத்தலைவர்
- டிசம்பர் 29 - ராஜேஷ் கன்னா, இந்திய நடிகர் (இ. 2012)
- முஅம்மர் அல் கதாஃபி, லிபியா தலைவர் (இ. 2011)
இறப்புகள்
- ஏப்ரல் 28 - உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (பி. 1855)
- மார்ச் 12 - வில்லியம் ஹென்றி பிராக், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (பி. 1862)
- ஏப்ரல் 17 - சான் பத்தீட்டு பெரென், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு அறிவியலாளர் (பி. 1870)
- ஆகத்து 9 - இதித் ஸ்டைன், செருமனிய மெய்யியலாளர் (பி. 1891)
நோபல் பரிசுகள்
- வழங்கப்படவில்லை
இவற்றையும் பார்க்கவும்
1942 நாட்காட்டி
வார்ப்புரு:நாட்காட்டி வியாழன் சாதாரண
மேற்கோள்கள்
- ↑ Levine, Alan (2000). Captivity, flight, and survival in World War II. Westport, CT: Praeger. p. 119. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780275969554.
- ↑ Hack, Karl (2004). Did Singapore have to fall?: Churchill and the impregnable fortress. London New York: RoutledgeCurzon. p. 224. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134396382.
- ↑ David M. Glantz (2005). Colossus Reborn: The Red Army at War: 1941-1943. University Press of Kansas. p. 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7006-1353-3.