இரா. பெருமாள் ராசு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இரா. பெருமாள் ராசு
இயற்பெயர்/
அறியும் பெயர்
இரா. பெருமாள் ராசு
பிறந்ததிகதி நவம்பர் 19, 1931 (1931-11-19) (அகவை 92)
பிறந்தஇடம் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
அறியப்படுவது ஓவியர், கவிஞர், எழுத்தாளர், ஆன்மீகச் செல்வர்
துணைவர் மகாலட்சுமி

இரா. பெருமாள் ராசு (பிறப்பு: நவம்பர் 19, 1931) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கவிஞர், எழுத்தாளர், ஓவியர், ஆன்மீகச் செல்வர் மற்றும் தற்காப்புக் கலை வித்தகரும் ஆவார். லெனின் நூற்றாண்டு விழா ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்று இந்திய - ரஷ்யக் கலாசாரக் குழுவுடன் உருசியா சென்றுவர தேர்ந்து எடுக்கப்பட்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ் நாடு மாநிலம் கிருஷ்ணகிரி மாவட்டம் கருமலை என்றழைக்கப்படும் கிருஷ்ணகிரியில் 1931-ல் பிறந்து, ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார் இரா. பெருமாள் ராசு. இவருடைய மனைவியின் பெயர் மகாலட்சுமி.

தமிழ்த் தொண்டு

தனிப்பட்ட முறையில் பல ஆண்டுகள் திருக்குறள் வகுப்புகளையும், 1967-ல் திருக்குறள் மாநாட்டையும் நடத்தி குன்றக்குடி அடிகளார், கி. வா. ஜ, கி. ஆ. பெ. விசுவநாதம், திருக்குறள் வீ. முனிசாமி போன்ற அறிஞர் பெருமக்களை அழைத்துப் பெருமைப்படுத்தியவர். பேராசிரியப் பெருமக்களையும் துறை சார்ந்த வல்லுனர்களையும் அழைத்து, கவியரங்கம், ஆய்வரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், நடத்திவருகிறார். 'ஆனந்த பரவசம்' என்ற ஆன்மீக மாத இதழின் 'கௌரவ' ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

படைப்புகள்

கவிதைத் தொகுப்பு

  • பிரணவப் பிரவாகம்
  • பிரபஞ்சக் கவிதைகள்
  • ஆனந்த பரவசம்
  • ஞானத் தூறல்
  • விடியலைத் தேடி

கவிதை நாடகம்

  • கூடல் சங்கமம்

வீர ராஜேந்திர சோழனையும் ஆகம வல்லாரையும் முன்னிலை படுத்தி வரலாற்றில் சுட்டப்பெறும் கூடல் சங்கமத்து போரை அடிப்படைக் களமாக கொண்டு இயற்றப்பட்ட வரலாற்று கவிதை நாடகம்.

கட்டுரை

  • ஆனந்த விகடன்-இல் வெளியான இவரது சிந்தனைத் தொடர் 'மாத்தியோசி', பின்னர் நூலாகவும் வெளிவந்தது.
  • உன்னைத் தேடு
  • இதோ ஒரு இதிகாசம்

ஓவியம்

ஓவியங்கள் வரைவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 'பிரணவப் பிரவாகம்' என்கிற கவிதைத் தொகுப்பில், திருமலையில் தொடங்கி, குமரி வரை இந்தியாவிலுள்ள 151 திருத்தலங்களைச் சுற்றிவந்து, அந்த ஆலயங்களை ஓவியங்களாகத் தீட்டியுள்ளார். லெனின் நூற்றாண்டு விழா ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்று இந்திய - ரஷ்யக் கலாசாரக் குழுவுடன் உருசியா சென்றுவர தேர்ந்து எடுக்கப்பட்டவர். இவரது ஓவிய கண்காட்சி, சென்னை பல்கலைக்கழக வளாகத்திலும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட்டுள்ளது.

ஆன்மிகம்

திருவண்ணாமலையில் வாழ்ந்த யோகி ராம் சுரத் குமாரிடம் நெருங்கிப் பழகிய அவருடைய பக்தர்.

பல ஆண்டுகளாக உபநிடத வகுப்புளை ஆன்மீக சேவையாக, எளிய முறையில் நடத்தி வருபவர். இவர் ஒரு நிறைநிலை எய்திய எளிய ஆனால் சிறந்த ஆன்மிகவாதி. மிக உயரிய ஆன்மீக அனுபவங்கள் பெற்ற ஆன்மீகச் செல்வர். இவரை ஆன்மீகத் தந்தையாக ஏற்றுக் கொண்டவர்கள் இவரை ”கருமலை சித்தர்” என்று போற்றுகிறார்கள்.

அவரது சிறந்த மேற்கோள்கள் சில...

"..என் வாழ்வில் தோல்விகளே இல்லை... ஏனென்றால் வெற்றி என்னுடைய இலக்கு அல்ல..."

"..என் வாழ்வில் ஏமாற்றங்களே இல்லை... ஏனென்றால் எதிர்பார்ப்புகள் இல்லை..."

"... நிமிர்ந்த மலையின் கம்பீரம், வித்தியாசம் பார்க்காமல் வீசும் காற்று, குறைவை நிறைவு செய்ய ஓடும் நீர் இப்படி எல்லாமே குருநாதர்களே! புரிந்து கொள்... வேதங்கள் புரியும் ...! உன்னையும் புரிந்து கொள்வாய் ...!"

"... சுமையாக எண்ணிய கடும் உழைப்பே என் உடலை உருக்காக மாற்றிய விந்தையை வியந்தேன் வல்லவனே ..."

இவற்றையும் காண்க

குறிப்புகள்

  • Parthasarathy, S. (2006). Amarakavyam, biography of Yogi Ramsuratkumar. Parthasarathy. 
  • Waves of Love, biography of Yogi Ramsuratkumar. Yogi Ramsuratkumar Bhavan, Mauritius. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இரா._பெருமாள்_ராசு&oldid=27299" இருந்து மீள்விக்கப்பட்டது