திசம்பர் 10
Jump to navigation
Jump to search
<< | திசம்பர் 2025 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXV |
திசம்பர் 10 (December 10) கிரிகோரியன் ஆண்டின் 344 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 345 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 21 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 220 – சீனப் பேரரசர் சியான் முடி துறந்ததை அடுத்து ஆன் அரசமரபு முடிவுக்கு வந்தது.
- 1041 – பைசாந்தியப் பேரரசி சோயி தனது வளர்ப்பு மகனை ஐந்தாம் மைக்கேல் என்ற பெயரில் பேரரசனாக்கினாள்.
- 1317 – சுவீடன் மன்னன் பிர்கர் தனது இரண்டு சகோதரர்கள் வால்திமார், எரிக் ஆகியோரைக் கைது செய்து நிக்கோப்பிங் கோட்டை நிலவறையில் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் பட்டினியால் இறக்க வைத்தான்.
- 1520 – மார்ட்டின் லூதர் தனது திருத்தந்தையின் ஆணை ஓலையின் பிரதியைத் தீயிட்டுக் கொளுத்தினார்.
- 1541 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றியின் மனைவியும் அரசியுமான கேத்தரீன் உடன் தகாத உறவு வைத்திருந்தமைக்காக தோமசு கல்பெப்பர், கோடரியால் வெட்டப்பட்டும் ,பிரான்சிசு டெரெகம் தூக்கிலிடப்பட்டும் இறந்தனர்
- 1655 – யாழ்ப்பாணத்தின் போர்த்துக்கேய ஆளுநர் அன்டோனியோ டி மெனேசா மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் முகத்துவாரம் என்னும் இடத்தில் டச்சுப் படைகளினால் சிறைப் பிடிக்கப்பட்டார்.[1]
- 1684 – ஐசாக் நியூட்டன் புவியீர்ப்பு விதிகளின் கொள்கைகளில் எழுதிய கெப்லரின் விதிகளின் தீர்வுகள் அரச கழகத்தில் எட்மண்டு ஏலியினால் படிக்கப்பட்டது.
- 1768 – முதலாவது பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது.
- 1799 – பிரான்சு மீட்டரை அதிகாரபூர்வ நீள அலகாக அறிவித்தது.
- 1817 – மிசிசிப்பி ஐக்கிய அமெரிக்காவின் 20வது மாநிலமாக இணைந்தது.
- 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கென்டக்கியை அக்கூட்டமைப்பின் 13-வது மாநிலமாக ஏற்றுக் கொண்டது.
- 1868 – உலகின் முதலாவது சைகை விளக்குகள் இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு வெளியே நிறுவப்பட்டன.
- 1877 – உருசிய-துருக்கி போர்: உருசிய இராணுவம் பிளெவ்னா நகரைக் கைப்பற்றியது. மீதமிருந்த 25,000 துருக்கியப் படைகள் சரணடைந்தன.
- 1898 – பாரிசு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதை அடுத்து எசுப்பானிய அமெரிக்கப் போர் முடிவுக்கு வந்தது..
- 1901 – முதலாவது நோபல் பரிசு வழங்கும் நிகழ்வு ஸ்டாக்ஹோம் நகரில் இடம்பெற்றது.
- 1902 – எகிப்தில் அஸ்வான் அணை திறக்கப்பட்டது.
- 1902 – தாஸ்மேனியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.
- 1906 – அமெரிக்க அரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட் உருசிய-சப்பானியப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தமைக்காக [[அமைதிக்கான அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். இது ஒரு அமெரிக்கர் பெற்ற முதலாவது நோபல் பரிசாகும்.
- 1909 – செல்மா லோவிசா லேகர்லாவ் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
- 1932 – தாய்லாந்து அரசியல்சட்ட முடியாட்சி அரசானது.
- 1936 – இங்கிலாந்தின் எட்டாம் எட்வர்டு முடிதுறப்பதாக அறிவித்தார்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: மலாயாவுக்குக் கிட்டவாக பிரித்தானியாவின் இரண்டு அரச கடற்படைக் கப்பல்கள் சப்பானியர்களால் மூழ்கடிக்கப்பட்டன.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினர் பிலிப்பீன்சில் லூசோன் நகரை அடைந்தனர்.
- 1948 – மனித உரிமைகள் குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை ஐநா பொதுச் சபை அறிவித்தது. இந்நாள் உலக மனித உரிமைகள் நாள் ஆக அறிவிக்கப்பட்டது.
- 1949 – சீன உள்நாட்டுப் போர்: மக்கள் விடுதலை இராணுவம் செங்டூ மீதான தாக்குதலை ஆரம்பித்தது. சங் கை செக்கும் அவரது அரசும் சீனக் குடியரசுக்குப் பின்வாங்கினர்.
- 1953 – பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.
- 1963 – சான்சிபார் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று, சுல்தான் சாம்சிதுய் பின் அப்துல்லாவின் கீழ் அரசியல்சட்ட முடியாட்சி அரசைப் பெற்றது.
- 1978 – அரபு-இசுரேல் முரண்பாடு: இசுரேல் பிரதமர் பெகின், எகிப்தியத் தலைவர் அன்வர் சாதாத் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றனர்.
- 1983 – அர்கெந்தீனாவில் அரசுத்தலைவர் அராவூஃப் அல்போன்சின் தலைமையில் மக்களாட்சி அமைக்கப்பட்டது.
- 1984 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டது.
- 1989 – மங்கோலியா கம்யூனிசத்தில் இருந்து மக்களாட்சிக்கு அமைதியாக மாற்றம் பெற்றது.
- 2006 – ஈழப்போர்: வாகரை, மாங்கேணியில் இலங்கைப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
- 2016 – துருக்கி, இசுதான்புல் நகரில் உதைபந்தாட்ட அரங்கில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 38 பேர் கொல்லப்பட்டனர், 166 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
- 1815 – அடா லவ்லேஸ், ஆங்கிலேய கணிதவியலாளர் (இ. 1852)
- 1830 – எமிலி டிக்கின்சன், அமெரிக்கக் கவிஞர் (இ. 1886)
- 1851 – மெல்வில் தூவி, அமெரிக்க நூலகவியலாளர், தூவி வகைப்படுத்தலை உருவாக்கியவர் (இ. 1931)
- 1878 – சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி, இந்திய அரசியல்வாதி, இந்தியாவின் 45வது ஆளுநர், எழுத்தாளர் (இ. 1972)[2]
- 1891 – நெல்லி சாக்ஸ், நோபல் பரிசு பெற்ற செருமானிய-சுவீடிய எழுத்தாளர் (இ. 1970)
- 1902 – எஸ். நிஜலிங்கப்பா, இந்திய அரசியல்வாதி (இ. 2000)
- 1943 – மாணிக்க விநாயகம், தமிழகப் பின்னணிப் பாடகர், நடிகர் (இ. 2021)
- 1952 – சுஜாதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2011)
- 1960 – ரதி அக்னிகோத்ரி, இந்தியத் திரைப்பட நடிகை
- 1964 – ஜெயராம், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1969 – ஸ்டீபன் பில்லிங்டன், ஆங்கிலேய நடிகர்
- 1983 – சேவியர் சாமுவேல், ஆத்திரேலிய நடிகர்
- 1986 – மனோஜ் குமார், இந்தியக் குத்துச்சண்டை வீரர்
இறப்புகள்
- 1198 – இப்னு றுஷ்து, எசுப்பானிய வானியலாளர், இயற்பியலாளர், மெய்யியலாளர் (பி. 1126)
- 1896 – ஆல்பிரட் நோபல், சுவீடிய வேதியியலாளர், டைனமைட்டு கண்டுபிடித்தவர், நோபல் பரிசை தோற்றுவித்தவர் (பி. 1833)
- 1909 – சிகப்பு மேகம், அமெரிக்க பழங்குடித் தலைவர் (பி. 1822)
- 1960 – சிற்றம்பலம் கார்டினர், இலங்கைத் தொழிலதிபர், தயாரிப்பாளர் (பி. 1899)
- 1995 – எஸ். டீ. சௌலா, இந்திய அமெரிக்கக் கணிதவியலாளர் (பி. 1907)
- 2001 – அசோக் குமார், இந்திய நடிகர், பாடகர், தயாரிப்பாளர் (பி. 1911)
- 2006 – அகஸ்தோ பினோசெட், சிலியின் 30வது அரசுத்தலைவர் (பி. 1915)
- 2006 – மதன் லால் மேத்தா, இந்திய இயற்பியலாளர் (பி. 1932)
- 2013 – ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார், இந்திய அரசியல்வாதி (பி. 1946)
- 2016 – கல்வயல் வே. குமாரசுவாமி, ஈழத்துக் கவிஞர், கல்வியாளர் (பி. 1944)
- 2016 – வா. செ. குழந்தைசாமி, இந்தியப் பொறியியல் அறிஞர், கவிஞர் (பி. 1929)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 3
- ↑ Kanwalpreet Kaur. Independence. Sanbun Publishers. pp. 57–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89540-80-7.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.