1902
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1902 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1902 MCMII |
திருவள்ளுவர் ஆண்டு | 1933 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2655 |
அர்மீனிய நாட்காட்டி | 1351 ԹՎ ՌՅԾԱ |
சீன நாட்காட்டி | 4598-4599 |
எபிரேய நாட்காட்டி | 5661-5662 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1957-1958 1824-1825 5003-5004 |
இரானிய நாட்காட்டி | 1280-1281 |
இசுலாமிய நாட்காட்டி | 1319 – 1320 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 35 (明治35年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2152 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4235 |
1902 (MCMII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
- ஜனவரி 8 - நியூயோர்க் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
- மார்ச் 7 - இரண்டாம் போவர் போர்: தென்னாபிரிக்காவின் போவர்கள் பிரித்தானியர்களுக்கு எதிரான கடைசிச் சமரில் வெற்றீயீட்டினர்.
- மார்ச் 11 - காங்கேசன்துறையில் இருந்து சாவகச்சேரி வரையான முதலாவது தொடருந்துப் பாதையை சேர் நெஸ்ட் ரிட்ஜ்வே திறந்து வைத்தார்.
- ஏப்ரல் 2 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது திரையரங்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திறக்கப்பட்டது.
- ஏப்ரல் 19 - குவாத்தமாலாவில் 7.5 நிலநடுக்கம் தாக்கியதில் 2,000 பேர் இறந்தனர்.
- மே 8 - கரிபியனில் மார்ட்டீனிக் தீவில் பெலீ மலை வெடித்ததில் 30,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- மே 20 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கியுபா விடுதலாஇ அடைந்தது.
- மே 31 - இரண்டாம் போவர் போர் முடிவுக்கு வந்தது.
- ஆகஸ்ட் 1 - ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வொலொங்கொங் நகரில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 100 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
- ஆகஸ்ட் 9 - யாழ்ப்பாணம் தின்னவேலியில் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை ஒன்றும் பாடசலை ஒன்றும் இந்துத் தீவிரவாதிகளால் சேதமாக்கப்பட்டது.
- செப்டம்பர் 5 - சாவகச்சேரியில் இருந்து பளை வரையான 14 மைல் நீள தொடருந்துப் பாதை திறந்து வைக்கப்பட்டது.
- டிசம்பர் 21 - போவர் போர்க் கைதிகள் அனைவரும் இலங்கையில் இருந்து தென்னாபிரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
- டிசம்பர் - புத்தர் சிலை ஒன்று யாழ்ப்பாண மாவட்டம் சுன்னாகத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டது.
திகதி அறியப்படாத நிகழ்வுகள்
- தமிழிலே முதன் முதலாகத் தோன்றிய இலக்கியக் கலைக்களஞ்சியம் அபிதானகோசம் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.
பிறப்புகள்
- ஜனவரி 5 - ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (இ. 1973)
- பெப்ரவரி 7 - தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (இ. 1981)
- நவம்பர் 8 - ஜீ. ஜீ. பொன்னம்பலம், ஈழத் தமிழ்த் தலைவர்
- டிசம்பர் 23 - சரண் சிங், இந்தியக் குடியரசின் ஏழாவது பிரதமர் (இ. 1987)
இறப்புகள்
- ஜூலை 4 - சுவாமி விவேகானந்தர், (பி. 1863)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - ஹென்ட்ரிக் லோரென்ட்ஸ், பீட்டர் சீமன்
- வேதியியல் - ஹேர்மன் எமில் ஃபீஷர்
- மருத்துவம் - ரொனால்ட் ரொஸ்
- இலக்கியம் - கிறிஸ்டியன் மத்தாயஸ் தியோடர் மொம்சென்
- அமைதி - ஏலி டுக்கோமுன், சார்ல்ஸ் கோபாட்