வின்ஸ்டன் சர்ச்சில்
சர் வின்சன்ட் சர்ச்சில் | |
---|---|
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் | |
பதவியில் 26 அக்டோபர் 1951 – 7 ஏப்ரல் 1955 | |
ஆட்சியாளர்கள் | ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜார்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் |
Deputy | அந்தோனி ஈடன் |
முன்னையவர் | கிளமன்ட் அட்லி |
பின்னவர் | அந்தோனி ஈடன் |
பதவியில் 10 மே 1940 – 27 ஜூலை 1945 | |
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜார்ஜ் |
Deputy | கிளமன்ட் அட்லி |
முன்னையவர் | நெவிலி சாம்பர்லின் |
பின்னவர் | கிளமன்ட் அட்லி |
பிரிட்டனின் நிதியமைச்சர் | |
பதவியில் 6 நவம்பர் 1924 – 4 ஜூன் 1929 | |
பிரதமர் | ஸ்டான்லி பால்ட்வின் |
முன்னையவர் | பிலிப் ஸ்நோவ்டன் |
பின்னவர் | பிலிப் ஸ்நோவ்டன் |
உள்துறைச் செயலாளர் | |
பதவியில் 19 பிப்ரவரி 1910 – 24 அக்டோபர் 1911 | |
பிரதமர் | ஹெர்பர்ட் ஹென்றி அஸ்குயிட் |
முன்னையவர் | ஹெர்பர்ட் கிளாட்ஸ்டோன் |
பின்னவர் | ரெஜினால்ட் மெக்கெனா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெலன்ஹெய்ம், ஆக்ஸ்போர்ட்ஷயர், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் | 30 நவம்பர் 1874
இறப்பு | 24 சனவரி 1965 ஹைட் பூங்கா, இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் | (அகவை 90)
இளைப்பாறுமிடம் | செயின்ட் மார்ட்டின் (சர்ச்)ஆலயம், பிலாடன், இங்கிலாந்து. |
தேசியம் | ஐக்கிய இராச்சியம்,பிரித்தானிய. |
அரசியல் கட்சி | கன்சர்வேட்டிவ் கட்சி (ஐ.இரா) (1900–1904, 1924–1964) லிபரல் கட்சி (1904–1924) |
துணைவர் | கிளமன்டைன் சர்ச்சில் |
உறவுகள் | பமீலா ஹேரிமன், மருமகள் |
பிள்ளைகள் | டயானா சர்ச்சில் ரான்டல்ப் சர்ச்சில் சாரக் டச்சட் ஜெஸ்ஸன் மேரிகோல்ட் சர்ச்சில் மேரி சோம்ஸ் |
வாழிடம்(s) | 10 டவுனிங் வீதி (உத்தியோகப்பூர்வமான இல்லம்) சார்ட்வெல் (தனி இல்லம்) |
முன்னாள் கல்லூரி | ஹேரோ பள்ளி, சாண்டர்ஸ்ட் இராயல் இராணுவக் கல்விக்கழகம் |
தொழில் | நாடாளுமன்ற உறுப்பினர், ஆட்சி வல்லுநர், இராணுவ வீரர், பத்திரிகையாளர், வரலாற்றியலாளர், நூலாசிரியர், வரைவாளர் |
சர் வின்ஸ்டன் லியோநார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் (Sir Winston Leonard Spencer-Churchill) (நவம்பர் 30, 1874 - ஜனவரி 24, 1965) என்ற முழுப்பெயர் கொண்ட இவர், சிறப்புப் பட்டயப் பதவிப் பெயர்களான ஆங்கில அரசின் உயர்தளிச் சிறப்பு சின்னம் (Order of Garter-OG), காமன்வெல்த் சிறப்புத் தகை பட்டயம் (காமன்வெல்த்- மக்கள் அதிகாரம் செலுத்தும் அரசமைப்பு) (Order of Merit-OM), பிரித்தானிய-காமன்வெல்த் தனித்துவப் பட்டயம் (Order of Companions Honour-CH), இலண்டன் அரசனுக்குகந்த சமூகப் பட்டயம் (Royal Society -for the Improvement of Natural Knowledge-FRS), கனடா அரசியாரின் ஆலோசகர் (Queen's Privy Council for Canada-PC (Can)), ஆகிய பட்டயங்களையும் கொண்டுள்ளார். இவர் பிரித்தானிய அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவராவார். ஐக்கிய இராச்சியத்தின் 1940 முதல் 1945 வரை மீண்டும் 1951 முதல் 1955 வரை பிரதமராக பதவி வகித்த சர்ச்சில் இரண்டாம் உலகப்போரில் ஐக்கிய இராச்சியத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவராக கருதப்படுகிறார்.
சர்ச்சில் மிகச்சிறந்த பேச்சாளர், பிரித்தானிய இராணுவத்தின் அதிகாரி, வரலாற்றியலாளர், அவரது எழுத்திற்காக நோபல் பரிசு பெற்றவர், வரைவாளர் போன்ற சிறப்புப் பெருமைகளையும் கொண்டவர். போர் தந்திரமிக்கவர் என்பதை இராணுவத்தில் பணிபுரிந்தபோதே நிருபித்தவர். இந்தியா, சூடான், இரண்டாம் போயர் போர்களில் களம் கண்டவர். மேற்கு முன்னணியருடன் முதலாம் உலகப்போரில் பிரித்தானியா போர்புரிந்தபோது ராயல் ஸ்காட் பியூசிலர்ஸ் போரின் 6 வது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கி அதன் வெற்றியில் பங்கு கொண்டார். தீடீரென தோன்றிய இரண்டாம் உலகப்போரின் போது முதல் கோமகனின் கப்பற்படைத் தலைவராக நிவிலி சாம்பர்லின் பதவி விலகலைத் தொடர்ந்து மே 10., 1940 அன்று நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தின் பிரதமாராகப் பதவியேற்று பிரித்தானிய இராணுவத்தினரை அச்சு சக்திகளுக்கு எதிராகப் பயன்படுத்தியதன் மூலம் வெற்றியை நிலைநாட்டினார்.
1945 ல் நடந்தத் தேர்தலில் தோல்வியுற்றதால் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். மீண்டும் 1951 தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார் 1955 ல் ஒய்வு பெறும் வரை பதவியில் தொடர்ந்தார். இரண்டாம் இராணி எலிசபெத் ஆல் இலண்டன் கோமகன் (Duke of London) பதவி வழங்க விருப்பம் தெரிவித்தார் ஆனால் சர்ச்சிலின் மகன் ராண்டால்ப் சர்ச்சில்- சர்ச்சிலின் மறைவுக்குப் பின் மரபுரிமை பெறுவார் என்று எழுந்த எதிர்ப்பலையால் அம்முயற்சி கைவிடப்பட்டது. இராணி சர்ச்சிலின் இறப்பை இராச்சியத்தின் துயரமாக அனுசரிக்க ஆணையிட்டு சர்ச்சிலுக்கு இறுதி மரியாதை செய்தார்.
இலக்கியத்திற்கான நோபெல் பரிசு பெற்ற ஒரே பிரித்தானியப் பிரதமர் இவரே.[1]
அதுமட்டுமன்றி ஐக்கிய அமெரிக்காவின் கௌரவக் குடியுரிமை வழங்கப்பட்ட இரண்டாவது நபரும் இவரே.[2]
பிறப்பு, குடும்பம் மற்றும் ஆரம்ப கால வாழ்வு
வின்ஸ்டன் சர்ச்சில், இஸ்பென்சர் குடும்பம் என்ற மதிப்பு மிகு குடும்ப பாரம்பரியத்தின் கிளை வழியான மார்ல்ப்ரோ டியுக்சு என்ற மேற்குடித் தொடர்புடைய குடும்பத்தில் பிறந்தார். வின்ஸ்டன் லியோனார்டு இஸ்பென்சர் சர்ச்சில் தனது தந்தையைப் போன்று குடும்ப மரபுப் பெயரான சர்ச்சில் என்பதைப் பொது வாழ்விற்கான தனது பெயருடன் பயன்படுத்திக் கொண்டார்.[3]
சர்ச்சிலின் தந்தையாரான லார்டு ராண்டால்ப் சர்ச்சில், மார்ல்ப்ரோவினுடைய 7 ஆவது நிலப்பிரபுவான ஜான் இஸ்பென்சர் சர்ச்சில் உடைய மூன்றாவது மகன் ஆவார். இவர் ஒரு அரசியல்வாதியாக இருந்தார். சர்ச்சிலின் தாயார் லேடி ராண்டால்ப் சர்ச்சில் (இயற்பெயர் ஜென்னி ஜெரோம்) அமெரிக்க பெருங்செல்வந்தர் லியோனார்டு ஜெரோம் என்பவரின் மகள் ஆவார். 1874 ஆம் ஆண்டு, நவம்பர் 30 ஆம் தேதி ஆக்ஸ்போர்ட்சைர், உட்ஸ்டாக் எனுமிடத்தில் உள்ள பிளென்கிம் அரண்மனை யில் உள்ள அறையொன்றில் இரண்டு மாதங்கள் முன்னதான குறைபிரசவக் குழந்தையாக சர்ச்சில் பிறந்தார்.[4][5]
தனது ஆறாம் வயதிலிருந்து சர்ச்சில் தனது தாத்தா அரசின் சார்பில் மாநிலத்தை ஆளுபவர் ஆக நியமிக்கப்பட்டிருந்த டல்பின் நகரில் வாழ்ந்தார். இதே நகரில் சர்ச்சிலின் தந்தை வைசிராயின் தனிச் செயலராக இருந்தார். இதே நேரத்தில் சர்ச்சிலின் சகோதரர், ஜான் இஸ்ட்ரேஞ் இஸ்பென்சர் சர்ச்சில், அயர்லாந்தில் பிறந்தார். அயர்லாந்தின் குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ இல்லமான தங்கும் விடுதியில் (Vice Regal Lodge) இருந்து இராணுவ அணிவகுப்புக்களைக் கவனித்ததன் விளைவாகவே சர்ச்சிலுக்கு இராணுவ விவகாரங்களில் ஈர்ப்பு தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.[6][7]
சர்ச்சிலின் ஆரம்பகால கல்வி டப்ளினில் நிகழ்ந்தது, அங்கு வீட்டு ஆசிரியை ஒருவர் அவருக்கு படித்தல், எழுதுதல், அடிப்படைக் கணித அறிவு ஆகியவற்றைக் கற்பிக்க முயற்சித்தார். அந்த சமயத்தில் “கண்ணீரின்றி வாசிப்பது“ (Reading without tears) என்ற புத்தகத்தை சர்ச்சில் முதன் முதலாக வாசித்தார். அவரது பெற்றோருடன் மட்டுப்படுத்தப்பட்ட தொடர்பைக் கொண்டிருந்த சர்ச்சில், தனது பழைய உறவினரான 'திருமதி எலிசபெத் ஆன் எவரெஸ்டுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார், அவரை சர்ச்சில் வயதான ஊம் (Old Woom) என அழைத்தார். வேறு சில குறிப்புகள் “உமேனி“ என்று அழைத்ததாகவும் கூறப்படுகிறது.[8]).எலிசபெத் ஆன் எவரெஸ்ட் அவருடைய நம்பிக்கைக்குரியவராக, செவிலித் தாயாக, செவிலியராக பணியாற்றினார்.[9] போனிக்சு பூங்கா என்னும் இடத்தில் இருவரும் பல மணி நேரம் மகிழ்ச்சியாக விளையாடிக் கழித்தனர்.[10][11]
இயற்கையாகவே, சுதந்திர உணர்வும், புரட்சி செய்யும் குணமும் கொண்ட சர்ச்சில் பொதுவாக பள்ளியில் தனது கல்வி சார்ந்து மிகவும் மோசமான அடைவுகளையே கொண்டிருந்தார்..[12] அவர் பின்வரும் மூன்று வெவ்வேறு பள்ளிகளில் பயின்றார். அவை புனித ஜார்ஜ் பள்ளி, அஸ்காட், பெர்க்சைர்; பிரைட்டனுக்கு அருகில் உள்ள ப்ரன்ஸ்விக் பள்ளி, ஓவ், (இந்தப் பள்ளியானது இஸ்டோக் ப்ரன்ஸ்விக் பள்ளி என பெயர் மாற்றப்பட்டு மேற்கு சசெக்ஸில் ஆசர்ஸ்ட் உட் என்ற இடத்திற்கு இடம் மாற்றப்பட்டது) மற்றும் 1888 ஏப்ரல் 17 இலிருந்து ஆரோவ் பள்ளி. சர்ச்சில் ஆரோவ் பள்ளிக்கு (Harrow School) வந்த சில வாரங்களிலேயே ஆரோ துப்பாக்கி படைப்பிரிவில் சேர்ந்தார்.[13]
இளமையான வின்ஸ்டன் தனது பள்ளிப்படிப்பை ஆரோ பள்ளியில் தொடங்கிய போது அவர் இஸ்பென்சர் சர்ச்சில் என்ற ‘S’ வரிசையிலேயே பெயர் சேர்க்கப்பட்டார். அந்த நேரத்தில் வின்ஸ்டன் திக்கித் தடுமாறிப் பேசும் சிவப்பு முடி கொண்ட, தடித்த, குட்டையான ஒரு பையனாக இருந்தான். வின்ஸ்டன் தனது ஆரோ நுழைவு தேர்வில் கணிதத்தில் மிகவும் நன்றாக செய்திருந்தார், அதனால் அவர் அந்தப் பாடத்திற்கான பிரிவில் முதலாவதாக வைக்கப்பட்டிருந்தார். ஆரோவில் தனது முதல் ஆண்டில் அவர் வரலாற்றில் அவரது பிரிவில் சிறந்தவராக அறியப்பட்டார். வின்ஸ்டன் பள்ளியில் நுழைந்jததிலிருந்து மிகவும் தாழ் நிலை வகுப்பில் குறைவான அடைவு நிலையைக் கொண்ட சிறுவனாக இருந்தபோதும், அவர் தொடர்ந்து அந்த நிலையிலேயே இருந்தார். வின்ஸ்டனால் உயர் பள்ளியிலும் அதற்கு மேல் எதுவும் செய்ய இயலாத நிலையில் இருந்தார். ஏனென்றால், அவரால் மரபு சார்ந்த கல்வியில் பெரிதாக எதையும் சாதிக்க இயலாது.[14] தனது பள்ளி சார்ந்த வேலைகளில் அவர் மோசமாகச் செய்தாலும், அவர் ஆங்கில மொழியை நேசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அவர் ஆரோ பள்ளியயை வெறுத்தார். அவருடைய தாயார் அவரை அரிதாகவே சந்தித்தார். வின்ஸ்டன் தனது தாயாருக்கு கடிதங்களில் தன்னை தனது பள்ளியியல் வந்து சந்திக்குமாறோ அல்லது தன்னை பள்ளியை விட்டு வீட்டுக்கு வர அனுமதிக்க வேண்டியோ கெஞ்சினார். அவரது தந்தையுடனான உறவு சற்று விலகியே இருந்தது. ஒருமுறை அவர்கள் இருவரும் திறந்த மனதுடன் பேசிக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.[15] 1895 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 24 ஆம் நாள் அவருடைய தந்தை வின்ஸ்டனும் கூட இளைய வயதிலேயே இறந்து விடக்கூடும் என்ற திடமான நம்பிக்கையை வின்ஸ்டனின் மனதில் விதைத்து விட்டு இறந்து போனார். இதன் காரணமாக, வின்ஸ்டனுக்கு தான் தன்னை இந்த உலகில் தனது வாழ்விற்கான அடையாளத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.[16]
பங்கெடுத்த போர்கள்
இவர் இங்கிலாந்து இராணுவத்தில் பணி ஆற்றும் போது பல்வேறு போர்களில் பங்கெடுத்துள்ளார். அதில் கியூபாவிலும் இந்தியாவிலும் சூடானிலும் ஓல்டுகாமிலும் நடந்த போரிலும், மேற்குப் போர்முனையில்இரண்டாம் உலகப் போரின் போது நடந்த போரிலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.
பேச்சாளர்
வின்சுடன் சர்சில் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர். இவர் தான் உரையாற்றும் முன்னர் தான் பேசப்போகும் விடயங்களை பயிற்சி எடுத்துக் கொண்டே பேசும் பழக்கம் உள்ளவர். இவர் ஆற்றிய உரைகளில் சில மேற்கோள்களாகக் காட்டப்படுவது உண்டு. அதில் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.
“ | கடலில் போரிடுவோம்; விண்ணில் போரிடுவோம்; மலைகளிலும் குன்றுகளிலும் போரிடுவோம்; பள்ளத்தாக்குகளிலும், அகழிகளிலும் போரிடுவோம்; தெருக்களில் போரிடுவோம்; சந்துக்குச் சந்து, வீட்டுக்கு வீடு போரிடுவோம்; ஆனால் ஒரு போதும் சரணாகதி அடையமாட்டோம். | ” |
தமிழர்கள் பற்றி சர்ச்சில்
இந்திய விடுதலைப் போரில் இந்திய தேசிய இராணுவத்தில் அதிகம் மலேசிய இரப்பர் தோட்டத் தமிழ்த் தொழிலாளார்கள் சேர்ந்தார்கள். அதை ஏளனப்படுத்தி ஆங்கிலேயரான வின்சுடன் சர்ச்சில் பின்வருமாறு கூறினார்:[சான்று தேவை]
மலேசிய தோட்டத்தில் இரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உறைந்து உள்ளது.
அதற்கு நேதாஜி பின்வருமாறு பதிலடி கொடுத்தார்.
அந்த தமிழர்கள் தான் நாளை ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இரத்தத்தைக் குடிப்பார்கள்.
மேற்கோள்கள்
- ↑ "The Nobel Prize in Literature 1953". Nobelprize.org.
{{cite web}}
: Unknown parameter|access date=
ignored (|access-date=
suggested) (help) - ↑ "Churchill Honored with US Citizenship". International Curchil Society.
{{cite web}}
: Unknown parameter|access date=
ignored (|access-date=
suggested) (help) - ↑ Jenkins, pp. 1–20
- ↑ Jenkins, p. 7
- ↑ Johnson, Paul (2010). Churchill. New York, NY: Penguin. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-311799-8.
- ↑ "Introduction to Civil Defence in Ireland – Background". Civil Defence College (Ireland). Archived from the original on 22 January 2012. பார்க்கப்பட்ட நாள் 28 October 2011.
- ↑ O'Farrell, Padraic (2000). Down Ratra Road: Fifty Years of Civil Defence in Ireland. Dublin: Stationery Office; ISBN 978-0-7076-6506-1.
- ↑ "Winston's Nanny". National Churchill Museum. Westminster College, Fulton, Missouri, US. பார்க்கப்பட்ட நாள் 5 June 2016.
- ↑ Jenkins, p. 10
- ↑ Jordan, Anthony. Churchill: A Founder of Modern Ireland. Dublin: Westport Books (1995). pp. 11–12; ISBN 978-0-9524447-0-1.
- ↑ Prendeville, Tom (19 January 2012). "Secret history of the Phoenix Park". Irish Independent. http://www.independent.ie/lifestyle/secret-history-of-the-phoenix-park-2993645.html.
- ↑ "Sir Winston Churchill Biography". Encyclopædia Britannica.
- ↑ Lt Churchill: 4th Queen's Own Hussars, The Churchill Centre. Retrieved 28 August 2009.
- ↑ Michael Sheldon, Young Titan: The Making of Winston Churchill (2013)
- ↑ Jenkins, pp. 10–11
- ↑ Haffner, p. 32