1984
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1984 (MCMLXXXIV) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
- ஜனவரி 1 - புரூணை விடுதலை பெற்றது.
- ஜனவரி 24 - ஆப்பிள் மக்கின்டொஷ் விற்பனை ஆரம்பம்
- ஆகஸ்ட் 11 - அமெரிக்காவின் 40 ஆவது அதிபர் ரானல்ட் ரேகன் வானொலியில் வாராந்திர ஒலிபரப்பிற்கான ஒத்திகையில் ரஷ்யாவின் மீது குண்டு வீசுவோம் என்று கூறியது வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- செப்டம்பர் 1 - யாழ்ப்பாணம் திக்கத்தில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 20 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 31 - இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து வன்முறைகள் ஆரம்பம்.
- டிசம்பர் 4 - 1984 மன்னார் படுகொலைகள்: இலங்கையில் மன்னாரில் இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் 107 முதல் 150 தமிழர் வரை கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 31 - ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.
பிறப்புகள்
- சனவரி 8 – கிம் ஜொங்-உன், வடகொரிய அரசுத்தலைவர்
- சனவரி 10 – கல்கி கோய்ச்லின், இந்திய நடிகை
- சனவரி 15 – விக்டோர் ரசுக், அமெரிக்க நடிகர்
- சனவரி 23 – அர்ஜென் ரொபென், இடச்சு காற்பந்து வீரர்
- சனவரி 28 – ஆன்ட்ரே இக்வொடாலா, அமெரிக்கக் கூடைப்பந்தாட்ட வீரர்
- பெப்ரவரி 17 – ஏ பி டி வில்லியர்ஸ், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர்
- மார்ச் 8 – ராஸ் டைலர், நியூசிலாந்துத் துடுப்பாளர்
- மார்ச் 10 – ஒலிவியா வைல்ட், அமெரிக்க நடிகை
- மார்ச் 12 – சிரேயா கோசல், இந்தியப் பின்னணிப் பாடகி
- மார்ச் 24 – கிரிஸ் பாஷ், அமெரிக்கக் கூடைப்பந்தாட்ட வீரர்
- மார்ச் 30 – சமந்தா ஸ்டோசர், ஆத்திரேலியத் தென்னிசு ஆட்டக்காரர்
- ஏப்ரல் 1 – முரளி விஜய், இந்தியத் துடுப்பாளர்
- ஏப்ரல் 2 – ஷாவ்ன் ரோபர்ட்ஸ், கனடிய நடிகர்
- ஏப்ரல் 13 – கிரிஸ் பிரிட், ஆத்திரேலியத் துடுப்பாளர்
- மே 7 – கெவின் ஓவன்சு, கனடிய மற்போர் வீரர்
- மே 11 – ஆந்த்ரெ இனியஸ்தா, எசுப்பானியக் காற்பந்து வீரர்
- மே 14 – மார்க் சக்கர்பெர்க், முகநூல் நிறுவனர்
- மே 29 – கார்மெலோ ஆந்தனி, ஆப்பிரிக்க-அமெரிக்க கூடைப்பாந்தாட்ட வீரர்
- சூன் 22 – யான்கோ டிப்சாரெவிச், செர்பிய டென்னிசு வீரர்
- சூன் 26 – டெரான் வில்லியம்ஸ், அமெரிக்கக் கூடைப்பந்தாட்ட வீரர்
- சூலை 3 - செயட் ராசில், வங்காளதேசத் துடுப்பாளர்
- சூலை 7 – மொகமது அஷ்ரஃபுல், வங்காளதேசத் துடுப்பாளர்
- சூலை 12 – சாமி சைன், சிரிய-கனடிய மற்போர் வீரர்
- சூலை 23 – பிரான்டன் ராய், அமெரிக்கக் கூடைப்பந்தாட்ட வீரர்
- ஆகத்து 1 – பாஸ்தியான் இசுவைன்சுடைகர், செருமனியக் காற்பந்து வீரர்
- ஆகத்து 3 – ஜான் போஸ்டர், அமெரிக்க நடிகர்
- செப்டம்பர் 3 – காரெட் ஹெட்லண்டின், அமெரிக்க நடிகர்
- செப்டம்பர் 7 – பர்வீஸ் மஹ்ரூப், இலங்கைத் துடுப்பாளர்
- செப்டம்பர் 15 – வேல்சு இளவரசர் ஹாரி, பிரித்தானிய இளவரசர்
- அக்டோபர் 27 – இர்பான் பதான், இந்தியத் துடுப்பாளர்
- நவம்பர் 8 – குந்தல் சந்திரா, வங்காலதேசத் துடுப்பாளர் (இ. 2012)
- நவம்பர் 9 – கு ஹே-சன், தென்கொரிய நடிகை, பாடகி
- நவம்பர் 22 – ஸ்கார்லெட் ஜோஹான்சன், அமெரிக்க நடிகை
- நவம்பர் 24 – கு ஹே-சன், தென்கொரிய நடிகை
- நவம்பர் 25 – கஸ்பார்ட் உள்ளில், பிரெஞ்சு நடிகர்
- நவம்பர் 28 – ஆன்டுரூ போகட், ஆத்திரேலியக் கூடைப்பந்தாட்ட வீரர்
- நவம்பர் 28 – மேரி எலிசபெத் வின்ச்டீத், அமெரிக்க நடிகை
- டிசம்பர் 13 – சான்டியாகோ கசோர்லா, எசுப்பானியக் காற்பந்து வீரர்
- டிசம்பர் 14 – ஜேக்சன் ராத்போன், அமெரிக்க நடிகர், பாடகர்
- டிசம்பர் 16 – தியோ ஜேம்ஸ், ஆங்கிலேய நடிகர், பாடகர்
- டிசம்பர் 30 – இலெப்ரோன் ஜேம்சு, ஆப்பிரிக்க-அமெரிக்கக் கூடைப்பந்தாட்ட வீரர்
இறப்புகள்
- பெப்ரவரி 21 – மிகயில் ஷோலகவ், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (பி. 1905)
- சூன் 6 – ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா, சீக்கியத் தலைவர் (பி. 1947)
- சூன் 25 – மிஷேல் ஃபூக்கோ, பிரெஞ்சு மெய்யியலாளர் (பி. 1926)
- செப்டம்பர் 8 – ஃபிரேங் லாசன், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1925)
- அக்டோபர் 6 – ஜியார்ஜ் கேலார்ட் சிம்ப்சன், அமெரிக்கத் தொல்லுயிராளர் (பி. 1902)
- அக்டோபர் 14 – மார்ட்டின் இரைல், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ர ஆங்கிலேயர் (பி. 1918)
- அக்டோபர் 20 – கார்ல் பெர்டினான்ட் கோரி, மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரியர் (பி. 1896)
- அக்டோபர் 20 – பால் டிராக், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர் (பி. 1902)
- அக்டோபர் 31 – இந்திரா காந்தி, 3வது இந்தியப் பிரதமர் (பி. 1917)
- டிசம்பர் 13 – ஜோர்ஜ் ஜெயராஜசிங்கம், இலங்கை மெதடிஸ்த மதகுரு
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - கார்லோ ரூபியா, சைமன் வான் டெர் மீர்
- வேதியியல் - ராபர்ட் மெரிஃபீல்டு
- மருத்துவம் - நீல்சு ஜெர்ன், ஜோர்ஜசு கோலர், சேசர் மில்ஸ்Dஐன்
- இலக்கியம் - யாரொசுலாவ் செய்ஃபெர்ட்
- அமைதி - பிஷப் டெஸ்மண்ட் டூட்டு