1924
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1924 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1924 MCMXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1955 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2677 |
அர்மீனிய நாட்காட்டி | 1373 ԹՎ ՌՅՀԳ |
சீன நாட்காட்டி | 4620-4621 |
எபிரேய நாட்காட்டி | 5683-5684 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1979-1980 1846-1847 5025-5026 |
இரானிய நாட்காட்டி | 1302-1303 |
இசுலாமிய நாட்காட்டி | 1342 – 1343 |
சப்பானிய நாட்காட்டி | Taishō 13 (大正13年) |
வட கொரிய நாட்காட்டி | 13 |
ரூனிக் நாட்காட்டி | 2174 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4257 |
ஆண்டு 1924 (MCMXXIV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
- ஜனவரி 10 - பிரித்தானியாவின் நீர்மூழ்கிக் கப்பல் எல்-34 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜனவரி 23 - விளாடிமிர் லெனின் ஜனவரி 21 இல் இறந்ததாக சோவியத் ஒன்றியம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
- ஜனவரி 24 - சி. பி. முத்தம்மா, இந்தியப் பெண் சாதனையாளர் (இ. 2009)
- ஜனவரி 25 - முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்சில் ஆரம்பமாயின.
- ஜனவரி 26 - சென் பீட்டர்ஸ்பேர்க் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.
- ஜனவரி 27 - லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
- பெப்ரவரி 1 - ஐக்கிய இராச்சியம் சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது.
- பெப்ரவரி 14 - ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்ட்டது.
- ஆகத்து 18 - பிரான்ஸ் ஜெர்மனியில் இருந்து தானது படைகளைத் திரும்ப அழைக்க ஆரம்பித்தது.
- ஆகத்து 28 - ஜோர்ஜியா சோவியத் ஒன்றியத்துக்கெதிரான கிளர்ச்சியில் தோல்வியாடைந்தது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 9 - ஹவாய், கௌவை நகரில் சர்க்கரைத் தொழிற்சாலைத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது காவற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 25 - இந்தியாவில் சுபாஷ் சந்திர போஸ் பிரித்தானியரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
- அக்டோபர் 27 - உஸ்பெக்கிஸ்தான் சோவியத் ஒன்றியத்தில் இணைந்தது.
- டிசம்பர் 1 - எஸ்தோனியாவில் கம்யூனிசப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
- டிசம்பர் 24 அல்பேனியா குடியரசாகியது.
- டிசம்பர் 30 - பல நாள்மீன்பேரடைகளின் இருப்பு பற்றி எட்வின் ஹபிள் அறிவித்தார்.
பிறப்புகள்
- சனவரி 6 – கிம் டாய் ஜுங், தென்கொரியக் குடியரசுத் தலைவர் (இ. 2009)
- பெப்ரவரி 5 – துரைசாமி சைமன் லூர்துசாமி, கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் (இ. 2014)
- பெப்ரவரி 11 – வி. வி. வைரமுத்து, ஈழத்து நாடகக் கலைஞர் (இ. 1989)
- மார்ச் 4 – கு. கலியபெருமாள், தமிழகத்தில் நக்சல்பாரி இயக்கத்தைத் துவக்கியவர்களில் ஒருவர் (இ. 2007)
- சூன் 3 – மு. கருணாநிதி, தமிழக முதல்வர், அரசியல்வாதி
- சூன் 18 – கோபுலு, தமிழக ஓவியர் (இ. 2015)
- சூன் 23 – ரணசிங்க பிரேமதாசா, இலங்கை அரசுத்தலைவர் (இ. 1993)
- சூலை 1 – வரதர், ஈழத்து எழுத்தாளர் (இ. 2006)
- சூலை 3 – எஸ். ஆர். நாதன், சிங்கப்பூர் குடியரசுத் தலைவர்
- ஆகத்து 1 – அப்துல்லா, சவூதி அரேபிய மன்னர் (இ. 2015)
- ஆகத்து 12 – ஸியா-உல்-ஹக், பாக்கித்தான் அரசுத்தலைவர் (இ. 1988)
- செப்டம்பர் 20 – அ. நாகேஸ்வர ராவ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2014)
- அக்டோபர் 9 – இம்மானுவேல் சேகரன், தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தலைவர் (இ. 1957)
- நவம்பர் 29 – பாறசாலை பி. பொன்னம்மாள், கேரளக் கர்நாடக இசைக்கலைஞர் (இ. 2021)
இறப்புகள்
- ஜனவரி 9 – பொன்னம்பலம் அருணாசலம், இலங்கையின் தேசியத் தலைவர் (பி. 1853)
- ஜனவரி 21 – விளாதிமிர் லெனின், உருசியப் புரட்சியாளர், சோவியத் ஒன்றியத்தின் 1வது அரசுத்தலைவர் (பி. 1870)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Manne Siegbahn
- வேதியியல் - வழங்கப்படவில்லை
- மருத்துவம் - Willem Einthoven
- இலக்கியம் - Władysław Stanisław Reymont'
- அமைதி - வழங்கப்படவில்லை