1927
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1927 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1927 MCMXXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1958 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2680 |
அர்மீனிய நாட்காட்டி | 1376 ԹՎ ՌՅՀԶ |
சீன நாட்காட்டி | 4623-4624 |
எபிரேய நாட்காட்டி | 5686-5687 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1982-1983 1849-1850 5028-5029 |
இரானிய நாட்காட்டி | 1305-1306 |
இசுலாமிய நாட்காட்டி | 1345 – 1346 |
சப்பானிய நாட்காட்டி | Shōwa 2 (昭和2年) |
வட கொரிய நாட்காட்டி | 16 |
ரூனிக் நாட்காட்டி | 2177 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4260 |
1927 (MCMXXVII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- ஜனவரி 1 - மெக்சிக்கோவில் கத்தோலிக்க மதத் தடையை எதிர்த்து மதத் தீவிரவாதிகள் அரசுடன் போர் தொடுத்தனர்.
- ஜனவரி 7 - அட்லாண்டிக் கடலைத் தாண்டி முதலாவது தொலைபேசி அழைப்பு நியூ யோர்க்கிற்கும் லண்டனுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
- ஜனவரி 19 - பிரித்தானியா சீனாவுக்கு படைகளை அனுப்பியது.
- பெப்ரவரி 12 - முதலாவது பிரித்தானியப் படைகள் ஷங்காய் நகரை அடைந்தன.
- பெப்ரவரி 14 - யூகொஸ்லாவியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 700 பேர் இறந்தனர்.
- ஏப்ரல் 12 - பெரிய பிரித்தானியாவும் அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியம் என்ற பெயர் மாற்றப்பட்டு பெரிய பிரித்தானியாவும் வட அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியம் என மாற்றப்பட்டது. அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இருந்து விலக்கப்பட்டது.
- மே]] - உலகின் முதலாவது பரீட்சார்த்த இலத்திரனியல் தொலைக்காட்சிப் படங்கள் ஃபீலோ ஃபார்ன்ஸ்வேர்த் என்பவரால் அனுப்பப்பட்டன.
- மே 7 - நிக்கராகுவாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- மே 9 - ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் முதற்தடவையாக கன்பராவில் தொடக்கி வைக்கப்பட்டது.
- மே 18 - மிச்சிகனில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு நிகழ்வில் பெரும்பாலும் குழந்தைகள் அடங்கிய 45 பேர் கொல்லப்பட்டனர்.
- மே 20 - சவுதி அரேபியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- மே 20-21 - அட்லாண்டிக் பெருங்கலுக்கிடையே முதலாவது நேரடி விமான சேவை நியூயோர்க்கிற்கும் பாரிசுக்கும் இடையே இடம்பெற்றது.
- மே 22 - சீனாவில் 8.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200,000 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூலை 15 - ஆஸ்திரியாவின் வியென்னா நகரில் இடதுசாரிகளுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 85 ஆர்ப்பாட்டக்காரரும் 5 காவற்துறையினரும் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 12 - மகாத்மா காந்தி]]யின் இலங்கைக்கான முதலாவதும் கடைசியுமான பயணம் மேற்கொள்ளப்பட்டது.
- நவம்பர் 12 - லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சோவியத்தின் முழு அதிகாரத்தையும் ஜோசப் ஸ்டாலின் தனதாக்கிக் கொண்டார்.
நாள் அறியப்படாதவை
- ஹரோல்ட் பிளாக் பின்னூட்ட ஒலிபெருக்கியை (feedback amplifier) கண்டுபிடித்தார்.
- உலக மக்கள் தொகை 2 பில்லியனை எட்டியது.
பிறப்புகள்
- ஜனவரி 9 - துரைசாமி உருத்திரமூர்த்தி, ஈழத்துக் கவிஞர் (இ. 1971)
- பெப்ரவரி 17 - யுவான் அல்மெய்டா, கியூப புரட்சியாளர் (இ. 2009)
- மார்ச் 6 - கபிரியேல் கார்சியா மார்க்கேஸ், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளர் (இ. 2014)
- ஏப்ரல் 16 - திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், 265வது திருத்தந்தை
- ஜூன் 24 - கண்ணதாசன், கவிஞர் (இ. 1981)
- ஜூன் 27 - டொமினிக் ஜீவா, ஈழத்தின் சிறுகதையாசிரியர், பதிப்பாளர்
- ஆகஸ்ட் 8 - எஸ். வரலட்சுமி, நடிகை, பாடகி (இ. 2009)
- அக்டோபர் 1 - சிவாஜி கணேசன், நடிகர் (இ. 2001)
- அக்டோபர் 10 - நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, தென்னிந்திய கருநாடக இசைப் பாடகர், (இ. 2014)
- அக்டோபர் 16 - கூன்டர் கிராசு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (இ. 2015)
- நவம்பர் 17 - கமில் சுவெலபில், செக் நாட்டுத் தமிழறிஞர் (இ. 2009)
- டிசம்பர் 12 - ராபர்ட் நாய்சு, பொறியியலாளர் (இ. 1990)
- டிசம்பர் 25 - ராம் நாராயண், இந்துஸ்தானி இசைக்கலைஞர்
இறப்புகள்
- அம்பலவாணர் கனகசபை, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் (பி. 1856]])
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - ஆர்தர் கொம்ப்டன் (Arthur Holly Compton), சார்ல்ஸ் தொம்சன் ரீஸ் வில்சன் (Charles Thomson Rees Wilson)
- வேதியியல் - Heinrich Otto Wieland
- மருத்துவம் - Julius Wagner-Jauregg
- இலக்கியம் - ஹென்றி பேர்க்சன் (Henri Bergson)
- அமைதி - Ferdinand Buisson, Ludwig Quidde