1928
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1928 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1928 MCMXXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1959 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2681 |
அர்மீனிய நாட்காட்டி | 1377 ԹՎ ՌՅՀԷ |
சீன நாட்காட்டி | 4624-4625 |
எபிரேய நாட்காட்டி | 5687-5688 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1983-1984 1850-1851 5029-5030 |
இரானிய நாட்காட்டி | 1306-1307 |
இசுலாமிய நாட்காட்டி | 1346 – 1347 |
சப்பானிய நாட்காட்டி | Shōwa 3 (昭和3年) |
வட கொரிய நாட்காட்டி | 17 |
ரூனிக் நாட்காட்டி | 2178 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4261 |
1928 (MCMXXIII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
- ஜனவரி 6-7 - தேம்ஸ் ஆறு லண்டனில் பெருக்கெடுத்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜனவரி 17 - லியோன் ட்ரொட்ஸ்கி மொஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.
- ஜனவரி 31 - லியோன் ட்ரொட்ஸ்கி கசக்ஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார்.
- பிப்ரவரி 28 - இராமன் விளைவு ச. வெ. இராமன்அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
- மார்ச் 12 - கலிபோர்னியாவில் சென் பிரான்சிஸ் அணைக்கட்டு உடைந்ததில் 400 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
- மார்ச் 12 - மால்ட்டா பிரித்தானியாவின் டொமினியன் ஆகியது.
- ஏப்ரல் 7 - வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.
- ஜூன் 4 - சீனக் குடியரசின் அதிபர் ஜாங் சுவோலின் ஜப்பானிய கூலிப்படைகளினால் படுகொலை செய்யப்பட்டார்.
- ஜூன் 9 - அவுஸ்திரேலியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் முதற்தடவையாக சார்ல்ஸ் கிங்ஸ்போர்ட் ஸ்மித் வானூர்தியில் கடந்தார்.
- ஜூலை 17 - மெக்சிக்கோ அதிபர் ஆல்வேரோ ஒப்ரெகோன் படுகொலை செய்யப்பட்டார்.
- ஜூலை 25 - ஐக்கிய அமெரிக்கா சீனாவில் இருந்து தனது படைகளைத் திரும்ப அழைத்தது.
- ஆகஸ்ட் 18 - சென்னை மியூசிக் அகாதமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 27 - போருக்கெதிராக கெலொக்-பிறையண்ட் உடன்பாட்டில் 60 நாடுகள் கைச்சாத்திட்டன.
- செப்டம்பர் 1 - அகமெட் சோகு அல்பேனியா நாட்டை முடியாட்சியாக அறிவித்துத் தன்னை அதன் மன்னராக அறிவித்தார்.
- செப்டம்பர் 16 - புளோரிடாவில் வீசிய சூறாவளி காரணமாக 2,500 பேர் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 28 - அலெக்சாண்டர் பிளெமிங் பெனிசினைக் கண்டுபிடித்தார்.
நாள் அறியப்படாதவை
- கொக்கக் கோலா ஆம்ஸ்டர்டாம் நகரில் இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களூடாக ஐரோப்பாவை அடைந்தது.
- துருக்கி அரபிக் எழுத்துகளை விடுத்து இலத்தீன் அமைப்புக் கொண்ட புதிய எழுத்துக்களை அறிமுகப்படுத்தியது.
- யாழ்ப்பாண வைபவ விமரிசனம் வெளியிடப்பட்டது.
- ஆனந்த விகடன் இதழ் தொடங்கப்பட்டது.
பிறப்புகள்
- சனவரி - எஸ். எஸ். ராஜேந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (இ. 2014)
- சனவரி 5 - சுல்பிக்கார் அலி பூட்டோ, பாகிஸ்தானின் அதிபர் (இ. 1979)
- சனவரி 25 - எடுவார்ட் ஷெவார்டுநாட்சே, ஜோர்ஜியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் (இ. 2014)
- மார்ச் 19 - விக்கிரமன், பத்திரிகையாளர், எழுத்தாளர் (இ. 2015)
- ஏப்ரல் 6 - ஜேம்ஸ் டூயி வாட்சன், அமெரிக்க உயிரியலாளர்
- ஏப்ரல் 10 - அப்துல் காதர் சாவுல் அமீட், இலங்கை அரசியல்வாதி (இ. 1999)
- மே 4 - ஹொஸ்னி முபாரக், எகிப்திய குடியரசுத் தலைவர்
- மே 15 - ஏ. ரி. பொன்னுத்துரை, இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (இ. 2003)
- சூன் 14 - சே குவேரா, சோசலிசப் புரட்சியாளர் (இ. 1967)
- சூன் 14 - அ. வின்சென்ட், திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (இ. 2015)
- ஜூலை 28 - கல்யாண் குமார், தென்னிந்திய திரைப்பட நடிகர், (இ. 1999)
- ஆகத்து 12 - தமிழண்ணல், தமிழறிஞர் (இ. 2015)
- ஆகத்து 16 - ரஜினி கோத்தாரி, அரசியல் அறிஞர் (இ. 2015)
- அக்டோபர் 1 - ஜூ ரோங்ஜி, சீனத் தலைவர்
- அக்டோபர் 1 சிவாஜி கணேசன், தென்னிந்திய திரைப்பட நடிகர், (இ. 2001)
- டிசம்பர் 7 - நோம் சோம்சுக்கி, அமெரிக்க மொழியியல் அறிஞர்
இறப்புகள்
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - ஓவன் ரிச்சார்ட்சன்
- வேதியியல் - அடொல்ப் விண்டாஸ்
- மருத்துவம் - சார்ல்ஸ் நிக்கோல்
- இலக்கியம் - சிகிரிட் ஊண்ட்செட்
- அமைதி - வழங்கப்படவில்லை