டொமினிக் ஜீவா
Jump to navigation
Jump to search
டொமினிக் ஜீவா | |
---|---|
முழுப்பெயர் | டொமினிக் ஜீவா |
ஆவுரம்பிள்ளை | |
யோசப் | |
பிறப்பு | 27-06-1927 |
பிறந்த இடம் | யாழ்ப்பாணம், |
மறைவு | 28-01-2021 |
கொழும்பு, | |
இலங்கை | |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
மல்லிகை ஆசிரியர் | |
பணி | இதழாசிரியர் |
பெற்றோர் | ஆவுரம்பிள்ளை |
யோசப், மாரியம்மா | |
வாழ்க்கைத் | இராணி |
துணை |
டொமினிக் ஜீவா (Dominic Jeeva, 27 சூன் 1927 – 28 சனவரி 2021) ஈழத்து எழுத்தாளரும், பதிப்பாளரும் ஆவார். இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. 1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்துத் தொடர்ந்து நடத்தி வந்தார். இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.
இவரது நூல்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
- தண்ணீரும் கண்ணீரும் (1960)
- பாதுகை (1962)
- சாலையின் திருப்பம் (1967)
- வாழ்வின் தரிசனங்கள் (2010)
- டொமினிக் ஜீவா சிறுகதைகள்
கட்டுரைத் தொகுப்புகள்
- அனுபவ முத்திரைகள்
- எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
- அச்சுத்தாளினூடாக ஓர் அனுபவ பயணம்
- நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்
- முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்
மொழிபெயர்ப்பு நூல்
- UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY (எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்) (மொழிபெயர்ப்பு: கந்தையா குமாரசாமி, மல்லிகைகைப்பந்தல், 2004)
ஜீவா பற்றிய ஆய்வு நூல்கள்
- டொமினிக் ஜீவா - கருத்துக் கோவை (தொகுப்பு: மேமன்கவி)
- மல்லிகை ஜீவா நினைவுகள் (லெ. முருகபூபதி, 2001)
- பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (தொகுப்பு: மேமன்கவி)
- மல்லிகை ஜீவா - மனப்பதிவுகள் (திக்குவல்லை கமால், 2004)
விருதுகள்
- 2013: இயல் விருது (கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து வழங்கியது)
- 2007: சங்கச் சான்றோர் விருது ( இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் வழங்கியது.)
மறைவு
டொமினிக் ஜீவா 2021 சனவரி 28 மாலை தனது 93-வது அகவையில் கொழும்பில் காலமானார். இறந்த பின்னர் இவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இவருக்கு கோவிட்-19 பெருந்தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அவரது உடல் 2021 ஜனவரி 30 சனிக்கிழமை சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய இறுதிக்கிரியைகள் நடத்தப்படாமல் கொழும்பில் தகனம் செய்யப்பட்டது.
மேற்கோள்கள்