கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள்
Jump to navigation
Jump to search
ஒருவர் பிறந்த திகதியை வைத்து அல்லது வரலாற்றுக் குறிப்புகளை வைத்து காலம் முதலில் தரப்படுகின்றது. வாழ்க்கைக்காலம் அடுத்த நூற்றாண்டிலேயே முக்கியம் பெற்றால், அந்த நூற்றாண்டில் சேர்க்கப்படுகின்றார். காலம் தெளிவாகத் தெரியாமல், நூற்றாண்டுக்கு மேலாக ஊகிக்க வேண்டியிருப்பின், ஆகப் பிந்திய கணிப்பிலேயே நபர்கள் சேர்க்கப்படுகின்றார்கள்.
0 | 1 - 100 | 100 | 200 | 300 | 400 | 500 | 600 | 700 | 800 | 900 | 1000
1100 | 1200 | 1300 | 1400 | 1500 | 1600 | 1700 | 1800 | 1900 | 2000
தொல்பழங்காலம்/சங்ககாலம்
- தலைச்சங்கம் - 4449 பாடிய புலவர்கள் - தமிழர் மரபுவழி வரலாறு
- இடைச்சங்கம் - 3700 பாடிய புலவர்கள் - தமிழர் மரபுவழி வரலாறு
- கடைச்சங்கம் - 449 பாடிய புலவர்கள் - தமிழர் மரபுவழி வரலாறு
- அகத்தியர்
- தொல்காப்பியர் - தொல்காப்பியம்
- சாத்தனார் - கூத்தநூல்
- ஔவையார்
- புறநானூற்றுப் புலவர்கள் - புறநானூறு
- சங்கத் தமிழ் பெண் புலவர்கள்
- நக்கீரன்
- இளவேட்டனார்
- அரிசில் கிழார்
- குறுங்கோழியூர்க் கிழார்
- பிசிராந்தையார்
- ஈழத்துப் பூதந்தேவனார்
கிமு 100-1
1 - 100
101 - 200
201 - 300
301 - 400
- மாறன் பொறையனார் - ஐந்திணை ஐம்பது எழுதியவர்
401 - 500
- இளங்கோ - சிலப்பதிகாரம்
- கணிமேதாவியார் - ஏலாதி
- காரியதாசன் - சிறுபஞ்சமூலம்
- சீத்தலை சாத்தனார் - மணிமேகலை
- திருமூலர் - திருமந்திரம் எழுதியவர் (காலம்: ஆக பிந்திய கணிப்பு)
- நல்லாதனார் - திரிகடுகம்
- புத்ததத்தர் - விநயவிச்சயம் எழுதியவர் [1]
- முன்றுரை அரையனார் - பழமொழி நானூறு
- விளம்பிநாகனார் - நான்மணிக்கடிகை
501 - 600
- காரைக்கால் அம்மையார்
- பிற்காலக் கபிலர் - இன்னா நாற்பது
- பூதஞ்சேந்தனார் - இனியவை நாற்பது
- பெருவாயின் முள்ளியார் - ஆசாரக்கோவை
601 - 700
- ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
- காக்கை பாடினியார் - பெண் புலவர் - காக்கை பாடினியம் [2]
- கொங்குவேள் - பெருங்கதை ஆசிரியர் [3]
- திருநாவுக்கரசு நாயனார்
- திருத்தக்க தேவர் - நரிவிருத்தம்
- திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
701 - 800
- ஆதிசங்கரர் - விவேக சூடாமணி [2][தொடர்பிழந்த இணைப்பு]
- சுந்தரமூர்த்தி நாயனார் - திருத்தொண்டர் புராணம்
- திவாகர முனிவர் - ஆதி நிகண்டு எனப்படும் திவாகர நிகண்டு செய்தவர்.
801 - 900
- அவிநாயனார் - அவிநயம், பன்னிருபடலம், நாலடிநாற்பது, அவிநாயனார் யாப்பு, அவிநாயனார் காலவியல்[4]
- ஆண்டாள் (திருப்பாவை)
- திருத்தக்கதேவர் - சீவக சிந்தாமணி என்ற விருத்தத்தை இயற்றியவர்.
- திருமழிசையாழ்வார்
- திருமாளிகைத் தேவர் - திருவிசைப்பா 45 பாடல்கள்
- நக்கீர தேவ நாயனார்
- நம்மாழ்வார்
- பூதத்தாழ்வார்
- பெருந்தேவனார் - பாரதவெண்பா பாடியவர்
- பேயாழ்வார்
- பொய்கையாழ்வார்
- மதுரகவி ஆழ்வார்
- மாணிக்கவாசகர் - திருக்கோவையார், திருவாசகம்
901 - 1000
- அமிர்தசாகரர்/தீபங்குடி அளப்பருங்கடலார் - யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை [3] பரணிடப்பட்டது 2009-02-06 at the வந்தவழி இயந்திரம்
- கண்டராதித்த சோழன் - திருவிசைப்பா பாடல்
- கருவூர்த்தேவர் - திருவிசைப்பா 105 பாடல்கள்
- கையனார் - கையனார் யாப்பியல்
- திருத்தக்க தேவர் - சீவகசிந்தாமணி
- தோலாமொழித்தேவர்/சீவர்த்ததேவர் - சூளாமணி இயற்றியவர்
- பிங்கல முனிவர் - பிங்கலந்தை எழுதியவர்
1001 - 1100
- கருவூர்த் தேவர் - ஒன்பதாம் திருமுறை, ராஜராஜ சோழன் குரு
- குணசாகரர் - (1015-1040) - யாப்பருங்கல உரையாசிரியர்
- நம்பியாண்டார் நம்பி - திருமறை நூற்தொகுப்பு [4][தொடர்பிழந்த இணைப்பு]
- நாதமுனிகள் - நாலாயிரத்திவ்ய பிரபந்தம் தொகுத்தவர்.
- பட்டினத்தார்
- புத்தமித்திரன் வீரசோழியம் இயற்றியவர்; சமணர், வீரசோழன் (ஆட்சி 1063-70) காலத்தவர்.
- ஜெயங்கொண்டார் - கலிங்கத்துப் பரணி
1101 - 1200
- அடியார்க்கு நல்லார் - சிலப்பதிகாரம் உரையாசிரியர்
- அம்பிகாபதி - கம்பநாடன் சிறப்புப் பாயிரம், அம்பிகாபதி கோவை
- அழகிய மணவாளச்சீயர் - பன்னீராயிரப்படி எழுதியவர் [5]
- அனபாயன் - தண்டியலங்காரம்
- ஒட்டக்கூத்தர்
- கச்சியப்ப சிவாசாரியார் - கந்தபுராணம் இயற்றியவர்
- கம்பர்
- குணவீர பண்டிதர் - நேமிநாதம் எழுதியவர்
- சேக்கிழார் - பெரிய புராணம் எழுதியவர்
- திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார் - திருக்களிற்றுப் படியார்
- தேவநாயனார் - சைவ சிந்தாந்த நூல் திருவுந்தியார் இயற்றியவர்
- நாற்கவிராச நம்பி - அகப்பொருள் விளக்கம்
- பவணந்தி - நன்னூல் இயற்றியவர்
- புகழேந்தி
- பெருந்தேவன் (உரையாசிரியர்) வீரசோழிய உரையாசிரியர் (சமணர்)
1201 - 1300
- அருணந்தி சிவாச்சாரியார் - சிவஞான சித்தியார் சைவசிந்தாந்த நூல், இருபாவிருபஃது
- அருணுலை விசாகன் - பாரதம் மொழி பெயர்ப்பாளர், நூல் கிடைக்கவில்லை [6]
- இளம்பூரணர் - தொல்காப்பிய உரையாசிரியர்
- உமாபதி சிவாச்சாரியார்
- சேனாவரையர் - தொல்காப்பிய உரையாசிரியர்
- நஞ்சீயர் - பல வைணவ ஆக்கங்களின் உரையாசிரியர்
- பொய்யாமொழிப் புலவர்
- பேராசிரியர் - தொல்காப்பிய உரையாசிரியர்
- மணக்குடவர்
- மெய்கண்ட தேவர்
- வேதாந்த தேசிகர் [5][தொடர்பிழந்த இணைப்பு]
1301 - 1400
- அதிமதுரக்கவிராயன் - [6] பரணிடப்பட்டது 2012-08-21 at the வந்தவழி இயந்திரம்
- அதிவீரராம பாண்டியர் - நைடதம்
- இரட்டைப் புலவர்: இளஞ்சூரியர், முதுசூரியர் - ஏகாம்பரநாதர் உலா
- சிவாலய முனிவர் 1375-1400, அகத்தியர் தேவாரத் திரட்டு
- சிற்றம்பல நாடிகள் - துகளறு போதம், இரங்கல் மூன்று, திருப்புன்முறுவல் - [7]
- சீகாழி தத்துவப் பிரகாசர் - தத்துவப் பிரகாசம் என்ற சித்தாந்த நூல் இயற்றினார்.[7]
- பத்திரகிரியார் - மெய்ஞ்ஞானப் புலம்பல்
- பரிமேலழகர் - திருக்குறள் உரையாசிரியர்
- போசராசபண்டிதர் - சரசோதிமாலை - 1310 ஈழத்தில் இருந்தும் வெளியான, இன்று எமக்கு கிடைக்கும் தொன்மையான நூல்[8]
- நமச்சிவாய மூர்த்திகள் - திருவாடுதுறை ஆதீனம் நிறுவியவர்.
- வேதாந்த தேசிகர்
1401 - 1500
- அகப்பேய்ச் சித்தர் - [8] பரணிடப்பட்டது 2012-08-19 at the வந்தவழி இயந்திரம்
- அம்பலவாண தேசிகர் - பத்து பண்டார சாத்திரங்கள் இயற்றியவர், மூன்று இதர நூல்களையும் இயற்றியவர்[9]
- அருணகிரிநாதர்
- உத்திரநல்லூர் நங்கை- பாய்ச்சலூர்ப் பதிகம்
- கடவுள் மாமுனிவர்
- கயாதர முனிவர்
- காழி கண்ணுடைய வள்ளல் - ஒழிவிலொடுக்கம்
- காளமேகப் புலவர் - யமகண்டம், பிரப்பிரம்ம விளக்கம், சித்திரமடல்
- காளிமுத்தம்மை வருணகுலாதித்தன் மடல் நூலாசிரியை. காளமேகப்புலவர் காலம். ஈடற்ற காமச்சுவை, கவிச்சுவை நூல் என்பர். மடலூர்தலுக்கு இணையற்ற நூல் என்பர் (தமிழ்க் கலைகளஞ்சியம்).
- சட்டைநாத வள்ளல் (1475-1500). சிவஞான வள்ளலின் மாணாக்கர், சதாசிவரூபம் நூல் எழுதியவர். 626 அடிகள் உள்ள அகவற்பா. சீகாழிக்காரர்.
- சிங்கை பரராசசேகரன்
- சிவஞான வள்ளல், கண்ணுடைய வள்ளலின் மாணாக்கர். 20 நூல்கள் கொண்ட ஞானநூல் தொகுதி, கொல்லாமையை வற்புறுத்தி பாடிய பாடல்கள் புகழ் பெற்றவை.
- சிவப்பிரகாசர், மதுரை காலம் ~1488. உரையாசிரியர், இவருக்கு முன் இருந்த 20 ஆசிரியர்களைப் பற்றி அறியத் தருவது.
- சொக்கநாதப் புலவர் - கிள்ளைவிடு தூது
- தத்துவராயர் - 18 சமய நூல்கள்
- திருநெறி விளக்க ஆசிரியர் (சிவாலய முனிவரின் மாணாக்கர்) 1400-1425.
- பகழிக் கூத்தர்
- மணவாள மாமுனிவர்
- வில்லிபுத்தூரார் - பாரதம் இயற்றியவர்
- வீரராகவ முதலியார், முத்தமிழ்க்கவி 15 ஆவது நூற்றாண்டு.. நூல்கள்: திருவேங்கடக் கலம்பகம், திருக்கண்ண மங்கைமாலை, வரதராசர் பஞ்சரத்தினம், பாலூர்க் கலம்பகம், செய்யூர்ப் பிள்ளைத்தமிழ், தனிப்பாடல்கள்.
1501 - 1600
- அதிவீரராம பாண்டியர்
- அரசகேசரி
- அருட்டிரு தாண்டவராயர் - கைவல்ய நவநீதம்
- அநதாரியப்ப முதலியார் (1564) சுந்தரபாண்டியம் (நூல்) என்னும் நூலாரிசியர் 3000 பாடல்கள். 2034 கிடைத்துள்ளன.
- ஆலிப் புலவர் - புலவர் சிரோன்மணி - மிகுராசு மாலை
- ஆறுமுசுவாமிகள் - நிட்டானுபூதி இயற்றியவர் [10]
- இரேவண சித்தர் - அகராதி நிகண்டு எழுதியவர், அகர வரிசையில் அமைந்த முதலாவது நிகண்டு
- குருஞான சம்பந்தர் - தருமபுர சைவ ஆதீன அமைப்பாளர், எட்டு தமிழ் சைவ மெய் நூல்களின் ஆசியர்
- செரூபானந்தர் - அத்துவைத சிந்தாந்த அறிஞர்; சிவப்பிரகாசப் பெருந்திரட்டு நூலின் ஆசிரியர்
- நச்சினார்க்கினியர்
- பரஞ்சோதி முனிவர் - திருவிளையாடற்புராணம்
- பரஞ்சோதியார் (16ம் நூற்றாண்டு) - சிதம்பரப் பாட்டியல்
- மண்டலபுருடர், வீரை என்னும் வீரபுரம், சூடாமணி நிகண்டு, திருப்புகழ் புராணம், சூடாமணி உள்ளமுடையான் கிருஷ்ணதேவராயர் காலத்தவர் (மு. இராகவையங்கார், ஆராய்ச்சித்தொகுதி பக். 483)
- முத்துத் தாண்டவர் - தமிழிசை
- யாகோபுச் சித்தர் - பாடல்கள்
- வண்ணப் பரிமளப் புலவர் - ஆயிரமசலா
- ஹென்றிகே ஹென்றிகஸ் (1520-1600) தம்பிரான் வணக்கம், முதலில் அச்சு இயந்திரம் கொண்டு தமிழ் நூல் பதிப்பித்தவர்.
1601 - 1700
- அகோர முனிவர் - கும்பகோணப் புராணம், திருக்கானிப்பேர்ப் புராணம், தேதாரணிய புராணம் ஆகியன இயற்றியவர்
- அந்தகக்கவி வீரராகவ முதலியார் - திருவாரூர் உலா, சீட்டுக்கவி
- அம்மைச்சி - வருணகுலாதித்தன் மடல் இயற்றியவர்
- அமிர்ந்த கவிராயர் - ஒரு துறைக்கோவை - நாணிக் கண் புதைத்தல்
- அமுத பாணியார் - வள்ளுவர் பிள்ளைத் தமிழ், மணிவாசகர் வரலாறு [11]
- அருளையர் (1659) தாயுமானவரின் சின்னம்மாவின் மகன். கிடைத்துள்ள பாடல்கள் சில.
- ஆதிச்சிற்றம்பலக் கவிராயர் - 23 நூல்கள்
- உமறுப் புலவர் - சீறாப் புராணம்
- கனகவிராயர் - ஷேகு நயினார்கான் - கனகாபிடேக மாலை எழுதியவர்
- காசீம் புலவர் - நபிகள் நாயகத்தை பாட்டுத் தலைவராக கொண்டு திருப்புகழ் இயற்றியவர்.
- குமரகுருபரர்
- சதக்கதுல்லா அப்பா
- சிவப்பிரகாசர் (துறைமங்கலம்) - பல நூல்கள், பிரபுலிங்க லீலை
- சீகன்பால்க் (Ziegenbalg, Bartholomaeus), (1683 - 1719) [9]- தமிழில் விவிலிய மொழிபெயர்ப்பு
- சுப்பிரமணிய தீட்சிதர் - பிரயோக விவேகம் இலக்கண நூல் எழுதியவர்
- நல்லாப்பிள்ளை
- படிக்காசுப் புலவர்
- முத்துராசா கவிராசர் - கைலாயமாலை
- ராபர்ட் தெ நோபிலி - நவீன தமிழ் உரைநடையின் தந்தை, 24 உரைநடை நூல்கள்
- வரத பண்டிதர்
- வராத்துங்க ராம பாண்டியன் - இன்ப விளக்கநூல் - கொக்கோகம் [10][தொடர்பிழந்த இணைப்பு]
- வீரமா முனிவர் (1680 - 1747) - தேம்பாவணி, திருக்குறள் இலத்தீன் பெயர்ப்பும் உரையும்
- வேங்கட நாதர்
- வேலைய சுவாமி 17 ஆம் நூற்றண்டு; துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமியின் தம்பி, நல்லூர்ப்புராணம், வீரசிங்கநாதன் புராணம், மயிலை இரட்டைமணி மாலை, சீகாளத்தி புராணத்தில் கடைசி 12 சுருக்கங்கள்
- வைத்தியநாத நாவலர் இலக்கண விளக்கம், திருவாரூர் பன்மணிமாலை, நல்லூர்ப்புரானம், மயிலம்மைப் பிள்ளைத்தமிழ்
- வைத்தியநாத முனிவர் யாழ்ப்பாண அளவெட்டி ஊரினர். வியாகிரபாத புராணம் (தமிழ்ப் புலவர் சரிதம்) பாடியவர்.
1701 - 1800
- அதிவராக கவி - வடமொழி நூல் காதம்பரி மொழிபெயர்ப்பாளர்
- அந்தோணிக்குட்டி அண்ணாவியார் தூத்துக்குடி, கிறிஸ்தவ இசைக் கீர்த்தனைகள் பாடியுள்ளார்
- அபிராமி பட்டர் - அபிராமி அந்தாதி எழுதியவர்
- அம்பலவாணக் கவிராயர் (சேலம்) - அறப்பளீச்சுர சதகம் பாடியவர் [12]
- அம்பலவாணக் கவிராயர் (மருதூர்) - ஆதித்தபுரி புராணம் பாடியவர் [12]
- அரங்கநாதக் கவிராயர், அஷ்டாவதானம் (~1753) 2477 பாடல்களில் பாரதம் பாடினார்.
- அருணாசலக் கவிராயர் - தமிழிசை
- அழகிய திருச்சிற்றம்பலத் தம்பிரான் - திரிபதார்த்த தீபம் எழுதியவர் [12]
- அழகிய நம்பி - குரும்பரம்பரை எழுதியவர் [12]
- அனந்தபாரதி ஐயங்கார் - உத்தர ராமாயணகீர்த்தனை, பாகவத தசமஸ்கந்த நாடகம், யானைமேழகர் நொண்டிச்சிந்து ஆகியன இயற்றியவர்.[12]
- அஷ்டாவதானம் கிருஷ்ணய்யங்கார் எழுதிய சமுத்திர வருணனை
- ஆண்டிப் புலவர் - ஆசிரிய நிகண்டு, உரையறி நன்னூல், நன்னூல் உரை ஆகியன இயற்றியவர்.[12]
- ஆளவந்தார், வீரை. 18 ஆவது நூற்றாண்டு. ஞானவசிட்டத்தை செந்தமிழ் விருத்தத்தில் பாடினார்.
- ஆனந்தரங்கம் பிள்ளை - ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள்
- இலக்குமண பாரதியார் பிறப்பு 1768-1859. சிவமலைக் குறவஞ்சி, தமிழ் இசைப்பாடல்கள் பாடியுள்ளார்.
- ஈசுர பாரதி - பல்பொருட் சூடாமணி
- எல்லப்ப நாவலர் - அருணாசல புராணம்
- ஃபிரான்சிஸ் வொயிட் எல்லிஸ் (இந்தியாவில்: 1796-1819) - திருக்குறளுக்கு உரை
- ஃபிலிப் தெ மெல்லோ (1723-1790)- தமிழில் விவிலிய மொழிபெயர்ப்பு
- ஃபெப்ரீசியஸ் Fabricius, Johann Philip (1711-1791) முதல் தமிழ்-ஆங்கில அகராதி தொகுத்தவர்[13]
- கச்சியப்ப முனிவர் - தணிகை புராணம் [11] பரணிடப்பட்டது 2012-02-26 at the வந்தவழி இயந்திரம்
- கந்தசாமிப் புலவர், முத்தாலங்குறிச்சி, திருவனந்தபுரம் நொண்டி நாடகம், கட்டபொம்மு காலத்தவர்.
- கவிராஜ பண்டிதர், திருச்செங்கோட்டுப் புராணம் பாடினார். இவர் தந்தையார் காசித்தல புராணம் பாடினார்.
- காஞ்சிபுரம் இராமசாமியார் (1735 - 1817) - தமிழ் நூல்களை பதிப்பித்தவர்
- கீழையூர்ச் சடகோபதாசர் - அரிசமய தீபம்
- குணங்குடி மஸ்தான் சாகிபு (1788 - 1835) - நிராமயக்கண்ணி உட்பட்ட 14 நூல்கள்
- கூழங்கைத் தம்பிரான்/கனகசபாபதி யோகி [8]
- சவ்வாதுப் புலவர் - முகியித்தீன் பிள்ளைத் தமிழ்
- சிவஞான முனிவர் - சிவஞான பாடியம் உட்பட்ட 28 நூல்கள்; இலக்கணம், இலக்கியம், தருக்கம், சைவ சிந்தாந்தம், மொழிபெயர்ப்பு வல்லமை
- சிவஞான முனிவர் (1785) - சூத்துரவிருத்தி
- சேகாதிநயினார் - திருமணக்காட்சி காப்பியம் இயற்றியவர்
- சேனாதிராச முதலியார், (1750-1840)
- தாயுமானவர் (1705 - 1742)
- திரிகூடராசப்பக் கவிராயர் - திருக்குற்றாலக் குறவஞ்சி
- நல்லூர் சின்னத்தம்பிப் புலவர், (1716-1780)
- பனீ அகமது மரைக்காயர் - சின்ன சீறா காப்பியம் இயற்றியவர்
- பாடுவார் முத்தப்பர் (1767 - 1829)
- பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
- மயில்வாகனப் புலவர் - யாழ்ப்பாண வைபவ மாலை
- மாரிமுத்துப் பிள்ளை - தமிழிசை
- மிரோன் வின்ஸ்லோ (1789-1864)[14]
- முத்துக்குமாரக் கவிராயர் (1780 - 1851)
- ராமநாத கவிராயர், ஆழ்வார் குறிச்சி. 18 ஆம் நூற்றாண்டு (ஆறை அழகப்ப முதலியார் 1676-1780 காலத்தில் வாழ்ந்தவர்)
- ரேனியஸ் (1789 - 1838)
- வரத பண்டிதர் - [12] பரணிடப்பட்டது 2011-09-16 at the வந்தவழி இயந்திரம்
- வேதநாயக சாஸ்திரி (தஞ்சை வேதநாயகர், 1774 - 1864)
1801 - 1900
- ஆவுடை அக்காள் (பிந்திய கணிப்பு)
- அகுமது லெப்பை அலாம் சாகிபு தாய் மகள் ஏசல் என்னும் நூல்[15]
- அயோத்திதாசர்
- இராகவையங்கார் மு
- இராமசாமி வ என்னும் வ.ரா. (1889-1951)
- இராமசாமிக் கவிராயர் என்னும் பெயரில் 7 பேர் (சேதனப்ப்ட்டு, மதுரை, மிதிலைப்பட்டி, சேற்றூர், உடுமலை, தென்குழந்தாபுரி, மானாமதுரை)
- இராமசாமி செட்டியார் 3 பேர் இருந்தனர் (கானாடு காத்தான், உறையூர், திருவெவ்வுளூர்)
- ஈசுரமூர்த்தியா பிள்ளை மு.பொ, திருநெல்வேலி, "நாட்டுப்பெண் கும்மி", நீதி நெறித் தாலாட்டு"..
- உலகநாத சுவாமி திருவிடைமருதூர், ரிபு கீதை எழுதியவர், 1924 பாடல்கள் மற்றும் பல..
- உலகநாத பிள்ளை, ஆராய்ச்சிப் பெரும்புலவர், இறப்பு 1941.
- ஆனை-ஐயா இருவர், (1800-1832) இசைப்பாடல்கள் இயற்றினர். மகா வைதியநாதையருடைய குரு.
- குணசேகர முதலியார் - அரேபிய இரவுகள் தமிழ் மொழிபெயர்ப்பு - 1825 [16]
- ஆலால சுந்தரம் பிள்ளை (1852-1922), காஞ்சி
- அரங்கப்பிள்ளை கவிராயர் "அரிச்சந்திர விலாசம்" எழுதியவர் 1867ல் வெளியாகியது
- கால்டுவெல் (1814-1891)- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
- போப் ஜி. யு (1820 - 1908) திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு
- அங்கமுத்துப் புலவர் கடிகை ~ 1808, 219 பாடல்கள் கொண்ட நூலாசிரியர்.
- மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1815 - 1876)
- அப்துல் காதிறு நெய்னா லெப்பை ஆலிம் புலவர் - நாகயந்தாதி உட்பட பல காவியங்கள்
- ஆறுமுக நாவலர் (1822 - 1879)
- வேதநாயகம் பிள்ளை (1826 - 1889) "மாயூரம் வேதநாயகர்" - முதல் தமிழ் புதினம்: பிரதாப முதலியார் சரித்திரம்
- அசலாம்பிகை அம்மை, பண்டிதை, பிறப்பு 1875, ஆனந்தபோதினி இதழில் எழுதியவர்.
- தியாகராசச் செட்டியார் பூவாளூர் (1826 - 1888)
- கிருஷ்ணபிள்ளை எச். ஏ. (1827 - 1900) இரட்சணிய யாத்திரீகம்
- இராமலிங்க அடிகளார் (1823-1874)
- இராசகோபால பிள்ளை, கோமளபுரம், 1869ல் தொல்காப்பியம் வெளியிட்டார்; பல நூல்கள்.
- மாம்பழக் கவிச்சிங்க நாவலர் (1836 - 1864)
- பொன்னுசாமித் தேவர் முகவை (1837 - 1870)
- கார்ல் கிரால் (Karl Graul) (1838-1879) - திருக்குறள் செர்மானிய மொழிபெயர்ப்பு
- தண்டபாணி சுவாமிகள் (1839 - 1899)
- செந்தில்வேலு முதலியார் சர்க்கரை வீ. (1842 - 1911)
- பாம்பன் சுவாமிகள் (1851 - 1929)
- கலியாணசுந்தர முதலியார் பூவை (1854 - 1918)
- நரசிம்மலு நாயுடு (1854 - 1922)
- குமாரசுவாமிப்புலவர் (1854 - 1922)
- சாமிநாதையர் உ. வே. (1855 - 1942)
- கனகசபை பிள்ளை (1855 - 1906)
- சுந்தரம்பிள்ளை மனோன்மணீயம் பெ. (1855 - 1897)
- சிங்காரவேலு முதலியார் ஆ. - (1855-1932) அபிதான சிந்தாமணி
- சிந்நயச் செட்டியார் (1855 - 1900)
- சொக்கலிங்க ஐயா (1856 - 1931)
- கார்த்திகேய முதலியார் (1857 - 1916)
- சுப்பிரமணிய முதலியார் வெ. ப. (1857 - 1942)
- ஆபிரகாம் பண்டிதர் (1859 - 1930)
- வேலுப்பிள்ளை கல்லடி (1860 - 1944)
- நாராயணசாமி ஐயர் பின்னத்தூர் அ. (1862 - 1914)
- வடிவேலு செட்டியார் கோ (1863 - 1936)
- செல்வக்கேசவராய முதலியார் (1864 - 1921)
- இலக்குமணப் பிள்ளை தி (1864- 1950)
- அண்ணாமலை ரெட்டியார் (1865 - 1891)
- பூர்ணலிங்கம் பிள்ளை மு. சி. (1866 - 1947)- தமிழ் இலக்கிய வரலாறு
- சங்கரதாஸ் சுவாமிகள் (1867 - 1922)
- பாண்டித்துரைத் தேவர் (1867 - 1911)
- அரசஞ் சண்முகனார் (1862 - 1915)
- சூரிய நாராயண சாஸ்திரி (1870 - 1903)
- இராகவையங்கார் இரா (1870 - 1946)
- கதிரவேற்பிள்ளை நா (1871 - 1907)
- சுப்பிரமணிய சிவா (1871 - 1925)
- மாணிக்க நாயக்கர் பா. வே. (1871 - 1931)
- சிதம்பரனார் வ. உ. (1872 - 1936)
- ஞானியார் அடிகள் (1873 - 1942)
- பம்மல் சம்பந்த முதலியார் (1873 - 1964)
- செய்குத்தம்பிப் பாவலர் (1874 - 1950)
- தேசிக விநாயகம் பிள்ளை (1876 - 1954)
- நமச்சிவாயம் கா (1876 - 1936)
- மறைமலை அடிகள் (1876-1950)
- வையாபுரிப்பிள்ளை ச (1891-1956)
- வேங்கடசாமி நாட்டார் ந. மு.
- வேங்கடாசலம் பிள்ளை அ
- சேதுப்பிள்ளை ரா. பி
- சுப்பிரமணியப் பிள்ளை கா
- சோமசுந்தர பாரதியார் நாவலர் ச (1879 - 1959)
- சதாசிவ பண்டாரத்தார் தி. வை. (1892-1960) சோழர் வரலாறு முதலிய பல நூலக்ள்.
- தாமோதரம்பிள்ளை சி. வை (1832 - 1901)
- அபிநவ காளமேகம் (1869 - )
- பூண்டி அரங்கநாத முதலியார் (1844 – 1893)
- அ. நாராயண ஐயங்கார் (1861 – 1947)
- செவ்வந்திப்பூ அம்மாள்
1901 - 2000
- அ. சிதம்பரநாதன்
- அவ்வை துரைசாமி பிள்ளை
- அவ்வை நடராசன்
- இன்குலாப்
- இரா. அருளப்பா (1912-1996) திருக்குறளில் கிறித்தவ சிந்தனைகள் பற்றிய ஆய்வாளர்
- இரா. இளங்குமரனார்
- எஸ். டி. சுந்தரம் (1922 - 1979)
- எஸ். வையாபுரிப்பிள்ளை
- கண்ணதாசன்
- கம்பதாசன் (1916 - 1964)
- கல்கி (1899 - 1954)
- கா. அப்துல் கபூர் (1924 - 2002)
- கார்த்திகேசு சிவத்தம்பி - (1932)
- கி. ஆ. பெ. விசுவநாதம் - (1899 - 1994)
- கு. மோகனராசு திருக்குறள் ஆய்வாளர்
- கொத்தமங்கலம் சுப்பு (1910 - 1974)
- ச. தண்டபாணி தேசிகர்
- சதாசிவ பண்டாரத்தார்
- சவரிமுத்து இராசமாணிக்கம் தத்துவ போதகர் பற்றிய ஆய்வாளர்
- சி. இலக்குவனார்
- சி. பா. ஆதித்தனார் - (1905 - 1981)
- சுப்பிரமணிய பாரதியார் சி (1882 - 1921)
- சேவியர் தனிநாயகம் அடிகள் (1913-1980)
- திரு. வி. கல்யாணசுந்தரனார்
- தேவநேயப் பாவாணர் (1902- 1981)
- ந. பிச்சமூர்த்தி
- நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்
- நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை (1876 - 1954)
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்(1930 - 1959)
- பரந்தமனார் அ. கி. (1902 - )
- பாரதிதாசன் (1891 - 1964)
- புதுமைப்பித்தன் (1906-1948)
- புலவர் குழந்தை (1906 - 1978)
- பூலோகசிங்க அருளப்ப நாவலர்
- பெருஞ்சித்திரனார்
- மா. இராசமாணிக்கனார்
- ம. பொ. சிவஞானம்
- மு. மேத்தா
- மு. வரதராசனார்
- லா. ச. ராமாமிர்தம் (1916 - 2007)
- வண்ணதாசன்
- வா. செ. குழந்தைசாமி
- வி. செல்வநாயகம்
- வி. மரிய அந்தோணி தேம்பாவணி உரையாளர்
- வி.மி. ஞானப்பிரகாசம் வீரமாமுனிவர் பற்றிய ஆய்வாளர்
- வைரமுத்து
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ அ. தட்சிணாமூர்த்தி. (1994). தமிழர் நாகரிகமும் பண்பாடும். சென்னை: ஐந்திணைப் பதிப்பகம். பக்கம் 436.
- ↑ இரா. இளங்குமரன். "காக்கை பாடினியம்". 1985. இலக்கண கருவூலம் - பகுதி 1. அண்ணாமலை: அண்ணாமலைப் பல்கலைக்கழகம். பக்கம் 17.
- ↑ பா. இறையரசன். (1997). தமிழ் இலக்கிய வரலாறு. சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
- ↑ க.ப. அறவாணன். "அவிநயம் - ஓர் அறிமுகமும் ஒரு மானுடவியல் விளக்கமும்". 1985. இலக்கண கருவூலம் - பகுதி 1. அண்ணாமலை: அண்ணாமலைப் பல்கலைக்கழகம். பக்கம் 1.
- ↑ தமிழ்க் கலைக்களஞ்சியம் - தொகு 1
- ↑ வாழ்வியற் களஞ்சியம் - தொ 1, பக் 781
- ↑ சோ.ந.கந்தசாமி. (2004). இந்திய தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம். தொகுதி 1: பக்கம் 35
- ↑ 8.0 8.1 காலநிதி ச. சிவலிங்கராஜா. (2004). ஈழத்துத் தமிழ் உரைமரபு. கொழும்பு: குமரன் புத்தக இல்லம்.
- ↑ தமிழ்க் கலைக்களஞ்சியம் - தொ 1
- ↑ தமிழ்க் கலைக்களஞ்சியம்
- ↑ வாழ்வியற் களஞ்சியம் - தொகு 1 - பக் 419
- ↑ 12.0 12.1 12.2 12.3 12.4 12.5 தமிழ்க் கலைக்களஞ்சியம் - தொ1
- ↑ http://tamilelibrary.org/teli/tschlr.html
- ↑ Miron, Winslow (1862). A comprehensive Tamil and English dictionary of high and low Tamil. Madras: P.R. Hunt. http://dsal.uchicago.edu/dictionaries/winslow/.
- ↑ கந்தையா பிள்ளை ந. சி., தமிழ்ப் புலவர் அகராதி, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் சென்னை, 1952, பக்.5
- ↑ Muslim identity, print culture, and the Dravidian factor in Tamil Nadu By J. B. Prashant More
உசாத்துணை நூல்கள்
- வி. செல்வநாயகம், (2000), உரைநடை வரலாறு, கொழும்பு: குமரன் புத்தக இல்லம்.
- மு. வரதராசன். (2004). தமிழ் இலக்கிய வரலாறு. புது தில்லி: சாகித்திய அகாதெமி.
- குன்றக்குடி பெரியபெருமாள், (1996), தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள், சென்னை
- தமிழ்க் கலைக்களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 10 தொகுதிகள், 1954-1968
- ஆறு. அழகப்பன் (பதிப்பாசிரியர்). 1985. இலக்கண கருவூலம் - பகுதி 1. அண்ணாமலை: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
வெளி இணைப்புகள்
- http://www.thamizham.net/128images.htm பரணிடப்பட்டது 2007-03-19 at the வந்தவழி இயந்திரம்
- தமிழறிஞர்கள்