சிதம்பரப் பாட்டியல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சிதம்பரப் பாட்டியல் ஒரு பாட்டியல் நூல். இதை இயற்றியவர் பரஞ்சோதியார் என்பார். இவர் சிதம்பர புராணம் என்னும் நூலை இயற்றிய புராணத் திருமலை நாதர் என்பவரின் மகன் ஆவார்[1]. இது 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது[2]. தமிழில் இரண்டு பாட்டியலில் அகத்திய மரபு, இந்திரகாளிய மரபு என இரண்டு மரபுகள் உள்ளன. இவற்றில் சிதம்பரப் பாட்டியல் அகத்திய மரபைச் சார்ந்தது.

அமைப்பு

மொத்தம் 47 எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம் எனும் பாவினத்தால் எழுதப்பட்டுள்ள இந்நூல் ஐந்து இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை, உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல், பொருத்தவியல், மரபியல் என்பன. பாட்டியல் நூல் எனப்படினும் இது யாப்பியல், பாட்டியல் ஆகிய இரண்டும் இந்நூலில் உள்ளன. முதல் மூன்று இயல்களும் யாப்பியல் சார்ந்தவையாகவும் இறுதி இரண்டு இயல்களும் பாட்டியல் சார்ந்தவையாகவும் உள்ளன.

குறிப்புகள்

  1. இளங்குமரன், இரா., 2009. பக். 340.
  2. இளங்குமரன், இரா., 2009. பக். 341.

உசாத்துணைகள்

  • இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.

இவற்றையும் பார்க்கவும்

தமிழ் இலக்கணப் பட்டியல்

"https://tamilar.wiki/index.php?title=சிதம்பரப்_பாட்டியல்&oldid=13365" இருந்து மீள்விக்கப்பட்டது