அகப்பொருள் விளக்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நம்பி அகப்பொருள் என்பது தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் கூறப்பட்ட அகப்பொருள் இலக்கணத்தை விளக்க எழுந்த ஒரு சார்பு நூலாகும். பல்வேறு கால கட்டங்களிலும் தோன்றிய அகப்பொருள் இலக்கண நூல்களில் சிறந்ததாகக் கருதப்படுவதும், இன்றும் தமிழ் இலக்கணம் பயில்வோரால் விரும்பப்படுவதுவும் இந்நூலேயாகும்.

சூத்திர வடிவில் அமைந்துள்ள இந்நூல் நாற்கவிராச நம்பி என்பவரால் 252 நூற்பாக்களால் இயற்றப்பட்டது.

  1. அகத்திணையியல்-116,
  2. களவியல்-54,
  3. வரைவியல்-29,
  4. கற்பியல்-10,
  5. ஒழிபியல்-43

என ஐந்து பிரிவுகளாக இந் நூலை ஒழுங்கு படுத்தியுள்ளார் இதன் ஆசிரியர். இந்நூலிற்கு இலக்கியமாய்ப் பொய்யாமொழிப் புலவரால் மூன்று இயல்களும் முப்பத்தி மூன்று பிரிவுகளும் கொண்டு 425 பாடல்களில் மாறை என்ற நாட்டை ஆண்ட சிற்றரசர் சந்திரவாணன் என்பவரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு தஞ்சைவாணன் கோவை இயற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=அகப்பொருள்_விளக்கம்&oldid=13358" இருந்து மீள்விக்கப்பட்டது